அக்டோபர் 12இல் வெளியாகிறது பிகில் ட்ரெய்லர்

அக்டோபர் 12இல் வெளியாகிறது பிகில் ட்ரெய்லர்

அக்டோபர் 12இல் வெளியாகிறது பிகில் ட்ரெய்லர்
Published on

விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 12 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

விஜய், நயன்தாரா, விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி உட்பட பலர் நடித்துள்ள படம், ’பிகில்’. ஏஜிஎஸ் என்டர் டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசைமைத்துள்ளார். தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆகிறது. இதற்கிடையே படத்தின் டிரைலரை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் இன்னும் டிரைலர் வெளியாகவில்லை.

இந்தப் படத்தின் டிரைலர் அக்டோபர் 4ம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், ட்ரெய்லர் வெளியாகவில்லை. ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அடுத்த அப்டேப்  எப்போது என ட்விட்டரில் ஹேஷ்டேக் போட்டு கேள்வி எழுப்பும் அளவிற்கு சென்றுவிட்டனர். ஒலி வடிவமைப்பில் திருப்தி இல்லாததால் அதனை மேலும் மெருகேற்ற அட்லி விரும்பியதால் இந்த தாமதம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது.

தீபாவளிக்கு இன்னும் 22 நாட்களே உள்ள நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இரண்டாவது வாரம் தணிக்கைக் குழுவுக்கு படம் அனுப்பட வேண்டும் என்பதால், அதற்காக முழு வீச்சில் படக்குழு பணியாற்றி வருகிறது. அதோடு மதுரை மற்றும் விசாகப்பட்டினத்தில் படத்துக்காக சில பேட்ச் ஒர்க் வேலைகளும் நடக்கின்றன.

இந்நிலையில், பிகில் படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 12 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com