\
வெளியானது பிகில் டிரைலர் ! உச்சக்கட்ட உற்சாகத்தில் ரசிகர்கள்

வெளியானது பிகில் டிரைலர் ! உச்சக்கட்ட உற்சாகத்தில் ரசிகர்கள்

வெளியானது பிகில் டிரைலர் ! உச்சக்கட்ட உற்சாகத்தில் ரசிகர்கள்
Published on

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் ’பிகில்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை ஆறு மணிக்கு வெளியானது, விஜய், நயன்தாரா, விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி உட்பட பலர் நடித்துள்ள படம், ’பிகில்’. ஏஜிஎஸ் என்டர் டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசைமைத்துள்ளார். தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆகிறது. இதற்கிடையே படத்தின் டிரைலரை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் இன்னும் டிரைலர் வெளியாகவில்லை என ரசிகர்கள் ஆதங்கப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு விஜய் படத்தின் டிரைலர் அக்டோபர் 12 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது. இதனையடுத்து இன்று மாலை 6 மணிக்கு பிகில் டிரைலர் வெளியானது. இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் கொண்டாடத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com