\
எகிப்து நாட்டில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம். - பிகில்

எகிப்து நாட்டில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம். - பிகில்

எகிப்து நாட்டில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம். - பிகில்
Published on

தீபாவளி ஸ்பெசலாக விஜய்,நயந்தாரா நடித்த பிகில் திரைப்படம் வெளியாகி பெரும் வசூல் வேட்டையாடி வருகிறது. AGS நிறுவனம் தயாரிப்பில் விஜய்,நயன்தாரா நடித்து அட்லி இயக்கியிருக்கும் இத்திரைப்படம் சர்ச்சைகள் விமர்சனங்களைக் கடந்து இம்மாதம் அக்டோபர் 25’ஆம் தேதி திரைக்கு வந்தது. பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் மைக்கேல் மற்றும் ராயப்பன் என இரு வேடங்களில் நடித்திருக்கிறார். பிகில் பற்றி இருவேறு விமர்சனங்கள் எழுந்த போதும் விஜய் ரசிகர்களால் இன்றும் அரங்கு நிறைந்த காட்சிகளாக இத்திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிகில் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.



பிரமீடுகளின் தேசமான எகிப்தில் இன்று பிகில் திரைப்படம் வெளியாகியுள்ளது. எகிப்து நாட்டில் வெளியாகும் முதல் தமிழ்த் திரைப்படம் என்பது பிகிலுக்கு கிடைத்த மற்றுமொரு பெருமை.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com