\
 “பணத்திற்காக அல்லது விளம்பரத்திற்காகத்தான் வழக்கு” - ‘பிகில்’ தரப்பில் வாதம் 

 “பணத்திற்காக அல்லது விளம்பரத்திற்காகத்தான் வழக்கு” - ‘பிகில்’ தரப்பில் வாதம் 

 “பணத்திற்காக அல்லது விளம்பரத்திற்காகத்தான் வழக்கு” - ‘பிகில்’ தரப்பில் வாதம் 
Published on

‘பிகில்’ படத்திற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. 

விஜய் நடித்துள்ள ‘பிகில்’ திரைப்படத்தை அட்லி இயக்கியுள்ளார். ஆனால் இந்தப் படத்தின் கதை தன்னுடையது என்று உதவி இயக்குநர் கே.பி.செல்வா என்பவர் போராடி வருகிறார். மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பணத்திற்காக அல்லது விளம்பரத்திற்காகத்தான் கே.பி செல்வா வழக்கு தொடர்ந்துள்ளார் என அட்லி தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். அதற்கு செல்வா தரப்பு மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com