பிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடவடிக்கை எடுக்க யாருக்கு உரிமை?: உயர்நீதிமன்றம் கேள்வி

பிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடவடிக்கை எடுக்க யாருக்கு உரிமை?: உயர்நீதிமன்றம் கேள்வி

பிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடவடிக்கை எடுக்க யாருக்கு உரிமை?: உயர்நீதிமன்றம் கேள்வி
Published on

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது என மத்திய அரசு விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‌பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் ஆபாசமாக இருப்பதாகக் கூறி அதனை தடை செய்ய சென்னை ஆலந்தூரைச் சேர்ந்த சரவணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் கமல்ஹாசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பிக்பாஸ் நிகழ்ச்சியால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை உருவாகாத நிலையில், மனுதாரர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கக் கூடாது. நிகழ்ச்சி ஒளிபரப்பு தொடர்பான புகார்களை, அதற்காக அமைக்கப்பட்டுள்ள கவுன்சிலிடம் மட்டுமே தெரிவிக்க வேண்டும்.

பொதுமக்களின் புகார்களை பரிசீலித்து நிகழ்ச்சி மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அந்த கவுன்சில் தான் முடிவெடுக்கும் என தெரிவித்தார். அப்போது இடைமறித்த அரசு தரப்பு வழக்கறிஞர், நிகழ்ச்சி மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்திற்கு மட்டுமே உள்ளது என வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், பிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது என மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com