’உங்க லவ் இருக்கே...’ நீண்ட இடைவெளிக்குப் பின் ஓவியா டிவிட்!
நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகை ஓவியா போட்ட டிவிட் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ஓவியா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசாரும் விசாரணை நடத்தினர். இந் நிலையில், நிகழ்ச்சியில் இருந்து அவராகவே வெளியேறினார் என கூறப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளியேறியதால் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அவர் மீண்டும் வருவார் என கூறப்பட்டது ஆனால் வரவில்லை. இந்த நிலையில் ஓவியா நீண்ட நாட்களுக்கு பிறகு டிவிட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
அதில் ’உங்களிடம் இருந்து கிடைத்த அன்பை விவரிக்கச் சொற்கள் இல்லை. நான் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். உங்களின் அன்புக்கு நன்றியுடனும் பொறுப்புடனும் இருப்பேன்’ என்று நெகிழ்வாக கூறியுள்ளார். இந்த டிவிட்டை 13 ஆயிரம் பேர் ரீடிவிட் செய்துள்ளனர். 43 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.