\
பிக்பாஸ் மருத்துவ முத்தம் கிடக்கட்டும்.. மருத்துவ யுத்தத்தை கவனிப்போம்: விவேகா

பிக்பாஸ் மருத்துவ முத்தம் கிடக்கட்டும்.. மருத்துவ யுத்தத்தை கவனிப்போம்: விவேகா

பிக்பாஸ் மருத்துவ முத்தம் கிடக்கட்டும்.. மருத்துவ யுத்தத்தை கவனிப்போம்: விவேகா
Published on: 

இனி மருத்துவ யுத்தத்தை கவனிப்போம் என மாணவி அனிதா மரணம் குறித்து திரைப்பட பாடலாசிரியர் விவேகா கேட்டுக்கொண்டுள்ளார்.

நீட் தேர்வு விவகாரத்தால் தகுதி இருந்தும் மருத்துவம் படிக்க இயலாத விரக்தியில் அனிதா தற்கொலை செய்து கொண்டார். அவரது குடும்பத்தினருக்கு பல்வேறு தரப்பினரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாடலாசிரியர் விவேகா தனது ட்விட்டர் பக்கத்தில், ’மருத்துவ முத்தம் இருக்கட்டும்...இந்த மருத்துவ யுத்தத்தையும் கவனிப்போம்’எனப் பதிவிட்டு உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ் ஓவியாவிற்கு முத்தம் கொடுத்ததை ஒப்புக்கொண்டபோது, அது மருத்துவ முத்தம் என கமல் பேசியது ட்ரெண்டானது. அதனை வைத்து பல மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டது பிரபலமானது. அதனை மனதில் வைத்தும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வழங்கும் முக்கியத்துவத்தை விடுத்து அவசியமான பிரச்னைகளை கவனிப்போம் என்கிற ரீதியில் விவேகா இந்தப்பதிவை வெளியிட்டுள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com