விக்ரம் பட நடிகை முதல் ராட்சசன் பட ரவீனா வரை! பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள் யார்? யார்?

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இன்று முதல் தொடங்கவிருக்கும் நிலையில் பங்கேற்கும் போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது.
பிக்பாஸ் சீசன் 7
பிக்பாஸ் சீசன் 7Twitter

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக 6 சீசன்களை கடந்து 7வது சீசனில் காலடி எடுத்து வைக்கிறது. ஒவ்வொரு சீசனிலும் புதுபுது அப்டேட்கள் மூலம் “எதிர்பாராததை எதிர்பாருங்கள்” என ரசிகர்களை எப்படியாவது கட்டுப்போட்டுவிடும் பிக்பாஸ் நிகழ்ச்சி, 7வது சீசனிலும் பல்வேறு அப்டேட்களோடு களமிறங்கி உள்ளதாக தெரிகிறது.

BiggBoss 7
BiggBoss 7PT

கண்டண்டுக்காக காத்திருக்கும் மீம் கிரியேட்டர்கள், யுடியூப், ஃபேஸ்புக் வைத்திருப்பவர்கள், ரசிகர்கள் வரை உலகக்கோப்பை தொடருடன் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே, “அடேய் உலகக்கோப்பை - பிக்பாஸ் நீங்க 2 பேரு போதும் டா 2 மாசத்த சமாளிச்சிடுவோம்” என அதிக எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். அதற்கேற்றார் போல் இரண்டு பிக்பாஸ் வீடுகள், அதிகப்படியான போட்டியாளர்கள் என புதுபுது விசயங்களோடு களமிறங்க இருப்பதாக கூறப்படும் இந்த 7வது பிக்பாஸ் சீசனும் அதிக எதிர்ப்பார்ப்பை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் இதில் யார் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்து கொள்கிறார்கள்? என்கிற பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. முதலில் வெளிவந்திருக்கும் தகவலின் படி 10 எதிர்பாராத பிரபலங்கள் போட்டியாளர்களாக களமிறங்கவிருப்பது தெரியவந்துள்ளது.

ராட்சசன் பட நடிகை ரவீனா!

raveena daha
raveena daha

சன் டிவியில் தங்கம் சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் ரவீனா தாஹா. பின்னர் 2017 ஆம் ஆண்டு ஜீ தமிழ் டிவியில் பூவே பூச்சூடவா தொடரில் நடிக்க ஆரம்பித்தார்.

raveena
raveena

அடுத்தடுத்து ஜில்லா, ஜீவா, பூஜை, புலி, பேய்கள் ஜாக்கிரதை முதல் ராட்சசன், எனிமி படம் வரை இவர் செய்த குட்டிக்குட்டி கேரக்டர்கள் குறிப்பிட்ட பெயரை பெற்றுத்தந்தன. அதன்பிறகு விஜய் டீவியில் வெற்றிகரமான சீரியலான மௌன ராகம் 2 தொடரின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.

சத்யா சீரியல் நடிகர் விஷ்ணு!

vishnu
vishnu

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் சீரியலின் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமான விஷ்ணு, அந்த சீரியல் மூலம் பெரிய அடையாளத்தை பெற்றார். அந்த தொடருக்கு பின் பல பெண் ரசிகைகள் அவருக்கு உருவாகினர். பிறகு சில காலங்கள் எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்த விஷ்னு, நடிகர் விமல் மற்றும் அஞ்சலி நடித்த மாப்ள சிங்கம் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

vishnu
vishnu

தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சத்யா சீரியலில் இவருடைய நடிப்புக்கும், உடன் சத்யா கேரக்டரில் நடித்துவரும் ஆயிஷாவிற்கும் இடையேயான கெமிஸ்ட்ரிக்குமே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.

இலக்கியவாதி பவா செல்லத்துரை!

பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரையில் யாரை போட்டியாளராக அழைத்து வருவார்கள் என்றே தெரியாத அளவிற்கு புதிய துறையை சேர்ந்தவர்களை கூட சர்ப்ரைஸாக அழைத்துவருவார்கள். திரைப்பிரபலங்கள் மட்டுமின்றி எழுத்தாளர்கள், கவிஞர்கள், நடன இயக்குனர்கள், இசைத் துறையை சேர்ந்தவர்கள் என பலதுரையினர் கலந்து கொள்வது வழக்கம்.

பவா செல்லத்துரை
பவா செல்லத்துரை

அந்த வகையில் தற்போது தமிழ் சிறுகதை எழுத்தாளர், மொழிப்பெயர்ப்பாளார், பேச்சாளார், மற்றும் பதிப்பாசிரியர் என்று பன்முகத்திறமை கொண்டவரான பவா செல்லத்துரை இடம்பெற உள்ளார். பிக்பாஸ் வீட்டிற்குள் ஒரு இலக்கியவாதி செல்வது இதுவே முதன்முறை.

ஒரே BGM-ல ஃபேமஸ் ஆன விக்ரம் நடிகை!

மாயா கிருஷ்ணன்
மாயா கிருஷ்ணன்

மகளிர் மட்டும், வேலைக்காரன், 2.O உட்பட பல படங்களில் நடித்துள்ள மாயா கிருஷ்ணனுக்கு, கமலின் ‘விக்ரம்’ படத்தில் நடித்த பிறகு தான் பெரிய வாய்ப்புகள் கிடைத்தது. விக்ரம் படத்தின் ஒரு பிஜிஎம் மூலம் ஹிட்டடித்த இவர் தற்போது விஜயின் ‘லியோ’ உட்பட பல படங்களில் நடித்து வருகிறார். ஸ்டேண்ட் அப் காமெடி செய்வதில் வல்லவரான மாயா, பிக் பாஸில் என்னென்ன மாயங்கள் செய்யவிருக்கிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதே சமயம் சர்ச்சைகளையும் மாயாவே கொண்டு வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடகர் யுகேந்திரன்!

யுகேந்திரன்
யுகேந்திரன்

பாடகர் மலேசியா வாசுதேவனின் மகனான யுகேந்திரன் தமிழ் சினிமாவில் எக்கச்சக்க பாடல்களை பாடியுள்ளார். பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர், விஜய் நடித்த யூத் படத்திலும் நடித்துள்ளார். தமிழ் சினிமா, தமிழ்நாடு என அனைத்திலிருந்தும் ஒதுங்கி நியூசிலாந்தில் செட்டிலான இவர், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு திரும்பியுள்ளார்.

அருவி, வாழ் பட பிரபலம் பிரதீப் அந்தோனி!

பிரதீப் அந்தோனி
பிரதீப் அந்தோனி

அருவி திரைப்படத்தின் துணை இயக்குநர் என்ற அறிமுகத்தோடு, அருவி பட இயக்குநரின் இரண்டாவது படமான வாழ் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தவர் பிரதீப் அந்தோனி.

வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா!

ஜோவிகா
ஜோவிகா

நடிகர் விஜயகுமாரின் பேத்தியும் வனிதா விஜயகுமாரின் மளான ஜோவிகா, பிக்பாஸ் வீட்டின் போட்டியாளராக களமிறங்க உள்ளார்.

டான்சர் மணிசந்திரா!

மணிசந்திரா
மணிசந்திரா

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் பட்டத்தை பெற்றவர் மணிச்சந்திரா. தற்போது பல தொலைக்காட்சிகளின் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமாகி வரும் மணிச்சந்திரா, பிக்பாஸ் வீட்டுக்குள் களம்காண்கிறார்.

ஐஷு டான்சர்!

ஐஷு
ஐஷு

டான்சரான ஐசு திரையுலகில் வாய்ப்பு தேடி வரும் நிலையில், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை அதற்கான தளமாக இருக்கும் என்கிற நம்பிக்கையில் களம்காண்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com