இன்றைய பிக்பாஸ் நிகழ்சி கமல் வரும் நாள். இன்று பிக்பாஸ் வீட்டிலிருப்பவர்கள் ஒன்றுகூடி பிரதீப்பிற்கு எதிராக செங்கொடி உயர்த்தி அநீதிக்கு எதிராக குரல் தர காத்திருந்தனர். குறிப்பாக விக்ரம், கூல் சுரேஷ், விஷ்ணு, ரவீனா, நிக்சன், மாயா, பூர்ணிமா, ஜோவிகா ஆகியோர் தங்கள் கையில் சிவப்பு துணி கட்டி கமலை எதிர்பார்த்தபடி காத்திருந்தனர்.
இதில் குறிப்பாக விஷ்ணுவிற்கு பிரதீப்பைக் கண்டால் ஆகாது. ஜென்மாந்திர பகை கொண்டவர்போல பிரதீப்பை எப்படியாவது பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றிவிடவேண்டும் என்று துடியாய் துடித்துக் கொண்டிருப்பவர். சரியான நேரத்திற்காக காத்திருந்தவருக்கு நண்பர்களும் ஒன்றுகூட நினைத்தது நிறைவேறியது.
கமல் வந்து “செங்கொடி உயர்த்தியவர்கள் மட்டும் உங்கள் அநீதிகளை சொல்லுங்கள்" என்றதும்,
ஜோவிகா பிரதீப்பிற்கு எதிராக “ இவர் கெட்டவார்த்தைகளை தவறான நோக்கத்திற்காக யூஸ் பண்ணுகிறார்” என்கிறார்.
பூர்ணிமா “சிலபேருக்கு இரவு தூங்குவதற்கு பயமா இருக்கு சார்”என்கிறார்.
நிக்சன் ”நான் பேசுவது தப்பெல்லாம் கிடையவே கிடையாது. நான் இப்படித்தான் பேசுவேன்” என்று சொன்னதாக கூறுகிறார்.
இதில் அருவருக்கத்தக்க வகையில், தனது அரைஞாண்கயிறு பற்றி மற்றவர்களிடம் பேசியதாக ரவீனா கூறியிருக்கிறார்.
விஷ்ணு எழுந்து, “என்கிட்ட யாராவது வம்பு பண்ணினால் நான் அசிங்க, அசிங்கமாக கேட்பேன் “ என்றும் கூறியிருக்கிறார்.
மணி சந்திரன் “நான் இப்போ பார்த்தேன் சார். டோர் மூடாமல் பாத்ரூம் போகிறார்” என்று பேசும் பல விஷயங்களை விஜய் டீவி ப்ரோமோவாக வெளியிட்டது.
இவர்களுக்கு பதில் சொன்ன கமல் இதற்கு தண்டனை என்ன என்பது எனக்குத் தெரியும் என்று கூறுவதுடன் ப்ரோமோ முடிந்திருந்தாலும், போட்டியாளார்கள் சொன்ன குற்றங்களுக்கு, குறிப்பாக ரவீனா சொன்ன குற்றத்திற்காக பிரதீப் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் இது உண்மையானதா அல்லது பொய்யான தகவல்களா என்பதை இன்றிரவு ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியில் தெரிந்துகொள்ளலாம்.
அப்படி பிரதீப் வெளியேறும்பட்சத்தில் அவர் செய்தது தவறு என்றாலும், சிரித்தபடி பெண்களை நீ என் பெண் மாதிரி, தோழி மாதிரி என்று அவர்களின் அனுமதியுடன் தொட்டு பேசினால் அது தவறாகாதா.... இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்ற தெர்மாகோல் டாஸ்கில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் அனைவருமே வெற்றி பெற்றனர். இதில் கூல் சுரேஷ் மட்டும் அவரது வெற்றியை தனது மேலாடையை கழற்றிவிட்டு ரவீனா, ஐஷூ போன்ற பெண்களை கட்டி தூக்கிக் கொண்டாடியது ஒத்துக்கொள்ளக்கூடிய செய்தியா.... இதில் கூல் சுரேஷ் செய்ததை மனதார ரசித்திருக்கமாட்டார்கள்.. இருந்தாலும் கூல் சுரேஷ் மீது வெறுப்பு இல்லாததால் இதை ஒரு விஷயமாக அவர்கள் கொண்டிருக்கமாட்டார்கள் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.