சீசன் 7: தெலுங்கில் பிக்பாஸ் டைட்டிலை தட்டிச் சென்ற பல்லவி பிரஷாந்த்; தமிழில் வெல்லப்போவது யார்?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில், 78 நாட்கள் நிறைவடைந்த நிலையில், இந்த சீசன் முடிவுக்கு வர இன்னும் சில வாரங்களே உள்ளன.
பிக்பாஸ் தெலுங்கு
பிக்பாஸ் தெலுங்குட்விட்டர்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில், 78 நாட்கள் நிறைவடைந்த நிலையில், இந்த சீசன் முடிவுக்கு வர இன்னும் சில வாரங்களே உள்ளன. இதில், கலந்துக்கொண்ட போட்டியாளார்களில் விசித்திராவை தவிர சொல்லிக்கொள்ளும்படி தெரிந்த முகங்கள் என்று ஏதும் இல்லை. இருப்பினும், கலந்துக் கொண்டவர்களில் மக்களின் மனதில் இடம் பிடித்தவர்கள் என்ற வரிசையில் பூர்ணிமா, மாயா, ரவீனா, அர்ச்சனா இவர்களை சொல்லலாம்.

இதில் பூர்ணிமா கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார். அவர் இப்போட்டியில் வெற்றி பெறாவிட்டாலும் அவருக்கு வெளியில் திரைத்துறையில் வாய்ப்புகள் குவிந்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஏனெனில் அவரின் முகஅமைப்பு, உடலமைப்பு ஒரு ஹாலிவுட் நடிகைக்கு தகுந்தாற்போல் இருக்கிறது என்கிறார்கள் ரசிகர்கள். ஆரம்பத்தில் மக்களால் வெறுக்கப்பட்டவராக இருந்தாலும், கடந்த இரு வாரங்களில் பூர்ணிமா மக்கள் மனதில் ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

மெஸ்ஸி,அன்டோனெலா ரோகுஸோ
மெஸ்ஸி,அன்டோனெலா ரோகுஸோகூகுள்

இந்நிலையில், உலக புகழ் பெற்ற கால்பந்து வீரர் மெஸ்ஸியுடன் பூர்ணிமா இருக்கும் புகைப்படம் என்று வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. ஆனால் அது உண்மையில் பூர்ணிமா அல்ல... பூர்ணிமாவைப்போல் உருவ ஒத்துமைக்கொண்ட மெஸ்ஸியின் மனைவியான அன்டோனெலா ரோகுஸோ (Antonela Roccuzzo) தான். பூர்ணிமா பார்ப்பதற்கு மெஸ்ஸியின் மனைவி அன்டோனெலா ரோகுஸோ போலவே இருப்பதால் இவரது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் சிலர் உலவ விட்டுள்ளனர்.

இந்நிலையில், தெலுங்கில் ஒளிபரப்ப பட்டு வந்த பிக்பாஸ் கடந்த 17ம் தேதியுடன் முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிகழ்ச்சியை தெலுங்கில் நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்கி வந்தார். இதில் இறுதியில் கோப்பையை யார் வெல்லப்போகிறார் என்று ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்பு இருந்த நிலையில் , இறுதிகட்ட போட்டியாளர்களான பல்லவி பிரஷாந்த் மற்றும் அமர்தீப் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் யார் டைட்டில் வெற்றி பெறுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், மக்களிடம் எடுக்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் பல்லவி பிரஷாந்த் வெற்றிப்பெற்று பிக்பாஸ் 7 கோப்பையை தட்டிச்சென்றார்.

இந்நிலையில் தமிழில் பிக்பாஸ் டைட்டிலை வெல்வது யாராக இருக்கக்கூடும் என்று ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உங்கள் கணிப்பை நீங்கள் கமெண்ட்டில் பதிவு செய்யலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com