பிக்பாஸ் 7: 43 வது நாள் ஒருவருக்குள் ஒருவர் சண்டை போட்டாலும், ஒன்றாக கொண்டாடிய தீபாவளி திருநாள்!

”டூத்பிரஸ் மேட்டர்ல கூட நீங்க சாதாரணமாக சொன்னதை கண்டெண்டா மாத்திட்டாங்க... இவங்க கூட விளையாடுறது ரொம்ப கஷ்டம். என் கைய வச்சு உன் முட்டிய அடிக்கறேன். ஆனா அவங்க சொல்றது அவங்க முட்டி தான் என் கைய அடிச்சது அப்படின்னு சொல்லுவாங்க” - பூர்ணிமா
பிக்பாஸ் 7
பிக்பாஸ் 7விஜய் டீவி

தீபாவளி கொண்டாட்டம்:

ஞாயிற்றுக்கிழமை தீபாவளி என்பதால் ஸ்மால் பாஸ் வீட்டினருக்கும் பிக்பாஸ் வீட்டினருக்கும் இடையில் எந்த வித பிரிவினையும் இல்லாமல் இங்கிருப்பவர்கள் அங்கு செல்வதற்கும் அங்கிருப்பவர்கள்; இங்கு செல்வதற்கும் பிக்பாஸ் அனுமதி அளித்திருந்தார். ஆகவே, அனைவரும் இங்கிருந்து அந்த வீட்டிற்கும், அங்கிருந்து இந்த வீட்டிற்கும் போய் வந்தபடி இருந்தனர். அனைவருக்கும் தீபாவளி பரிசாக புது டிரஸ், ஸ்வீட் காரத்துடன் தடபுடல் விருந்தையும் பிக்பாஸ் ஏற்பாடு செய்திருந்தார்.

எங்கள் வீட்டில் எந்நாளும் கார்த்திகை... லாலலா...” என்று பாட்டையும் பாடி மத்தாப்பையும் கொளுத்தி தீபாவளி கொண்டாடியதை பார்த்தால், இரண்டு நாளுக்கு முன் ஒருவருக்குள் ஒருவர் சண்டை போட்டவர்களா இவர்கள்? என்று யோசிக்க தோன்றியது.

மாயா, பூர்ணிமா
மாயா, பூர்ணிமாவிஜய் டீவி

பூர்ணிமாவின் கவலை

கேப்டன் தினேஷ் கிச்சன் டீம், கிளீனிங் டீம் என்று தனித்தனி டீமை பிரித்து அவர்களுக்கான வேலையைக் கொடுத்தார். இதில் மாயா, பூர்ணிமாவுக்கு பாத்திரம் சுத்தம் செய்யும் வேலை கிடைத்தது. மாயாவும், பூர்ணிமாவும் பார்ப்பதற்கு மிகவும் சோகமாகவே இருந்தனர். அதற்கு முதல் நாள் கமல் இவர்கள் இருவரையும் வறுத்தெடுத்தது காரணமாக இருக்கலாம். இதில் பூர்ணிமா மாயாவிடம், “என்னால் எல்லா டாஸ்கையும் செய்யமுடியும். ஆனால் இங்கு இருக்குறவங்க நா எது செஞ்சாலும் தவறாகவே நினைக்கிறாங்க. டூத்பிரஸ் மேட்டர்ல கூட நீங்க சாதாரணமாக சொன்னதை கண்டெண்டா மாத்திட்டாங்க.. இவங்க கூட விளையாடுறது ரொம்ப கஷ்டம். என் கைய வச்சு உன் முட்டிய அடிக்கறேன். ஆனா அவங்க சொல்றது அவங்க முட்டி தான் என் கைய அடிச்சது அப்படின்னு சொல்லுவாங்க” என்று ஒரு புது தத்துவத்தையும் நமக்கு சொன்னாங்க. இவங்க இருவரும் இப்படி பேசிகிட்டது நமக்கு சிரிப்பை தான் வரவழைத்தது.

நிக்சன் பற்றி கூல் சுரேஷின் கவலை

ஐஷு வெளியேறியதால் நிக்சன் இனிமே நல்லா விளையாடுவான்னு தோணல... காதல் தோல்வில அவன் ரெண்டு நாளா உம்முன்னு தான் இருக்கான் என்று கூல் சுரேஷ் சொன்னதும், “ஒரு மாதத்துக்குள்ள இருவருக்குள்ளும் வந்தது காதலே இல்ல... ஒரு ஈர்ப்பு தான், நிக்சன் இத புரிஞ்சுகிட்டு விளையாடணும்” என்று தினேஷ் சொன்னதிலும் ஒரு அர்த்தம் இருந்தது.

ஐஷு வெளியில் சென்றதற்கு காரணம், மக்கள் தான், மக்களுக்கு இங்க என்ன நடக்கதுன்னு தெரியாது. தெரியாம ஓட்டை போட்டு ஐஷூவ வெளியேத்திட்டாங்க என்று நிக்சன் இரு தினங்களுக்கு முன்பு புலம்பிக்கொண்டிருந்தார். ஆனால் அது நேற்று கொஞ்சம் குறைத்தது போல இருந்தது. இதை கவனித்த தினேஷ் தனது கருத்தை சொல்லி இருக்கலாம்.

விஜய் டீவி

பிக்பாஸ் வீட்டிற்கு வந்த பிரபலங்கள்

தீபாவளி செலிபரேஷனுக்காக புகழ், சிருஷ்டியை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி இருந்தார் பிக்பாஸ். இவர்கள் இருவரும் காமெடி செய்வார்கள் என்று எதிர்பார்த்தால், எப்படா வெளில போவாங்க என்று தோன்றும் படி செய்து விட்டார்கள். எதற்கு பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்கள் என்று தெரியவில்லை. மாயா தன் பங்கிற்கு புகழையும், சிருஷ்டியையும் கடுப்பேத்தி அனுப்பினார். பிக் பாஸ் வீட்டிற்கு விருந்தாளியாக வந்தவர்களை வெறும் கையுடன் அனுப்ப மனமில்லாத தினேஷ் தன் கையில் அணிந்திருந்த ப்ளாட்டினம் ரிங்கை புகழுக்கு தந்தார். விசித்திரா தன் பங்கிற்கு ஒரு ஆர்டிபிஷியல் நகை ஒன்றை எடுத்து சிருஷ்டிக்கு தந்தார்.

அடுத்ததாக கொளுத்திப்போடு டாஸ்க் முடிந்ததும், புகழையும், டீ போட்டுக்கொண்டிருந்த சிருஷ்டியையும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியதும், தான் போட்ட டீயை குடிக்காமல் சிருஷ்டி எஸ்கேப் ஆகினார். கூல் சுரேஷ் மணியிடம், “கானா பாலாவுக்கு டார்கெட் நான் தான்; நான் எது செய்தாலும், தானும் அதையே செய்வாரு. நீங்க எல்லாரும் தான் அவர உசுப்பேத்தி ஏத்திவிட்டீங்க” என்று கானாபாலாவை எப்படியாவது வெளியேத்திடுங்கப்பா என்று சொல்வது போல் இருந்தது இவரின் புலம்பல்.

விஜய் டீவி

நாமினேசன் டாஸ்க்

அடுத்தது நாமினேசன் டாஸ்க் நடைப்பெற்றது. இதில், சரவண விக்ரம், அக்‌ஷயா, கானா பாலா, மணி, ரவீனா, ப்ராவோ, பூர்ணிமா, விசித்திரா ஆகியோர் இந்தவார நாமினேட் செய்யப்பட்டவர்கள். இவர்களில் இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

இனி நாளை என்ன நடக்கும் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com