பிக்பாஸ் 7: கலை நிகழ்சியுடன் களைகட்டும் இல்லம்; கொண்டாட்டத்திற்காக வந்தவர்கள் செய்யும் வேலையா?

102, 103-ம் நாளின் சிறப்பு தின நிகழ்வு, கொண்டாட்டத்திற்காக உள்ளே வந்தவர்கள் இன்னும் மாறவில்லை என்பதை காட்டுகிறது.
பிக்பாஸ் 7
பிக்பாஸ் 7விஜய் டிவி

பிக்பாஸில் 102-ம் நாள்

கானா பாலா பாட்டுபாடிக்கொண்டே உள்ளே நுழைகிறார். அடுத்ததாக ”ரோமியோ ஆட்டம் போட்டால்” என்று ஜோக்கரை போன்று ஆடியபடி உள்ளே நுழைந்தார் பூர்ணிமா. அவர் தனது முகமூடியை கழட்டும் வரை அவர் பூர்ணிமா என்று யாருக்கும் தெரியாததுதான் ஹைலைட். பக்காவாக இருந்தது. சொல்லப்போனால் பூர்ணிமா என்ட்ரி மாஸ்....

பூர்ணிமாவை பார்த்ததும் விஷ்ணுக்கு சொல்ல முடியாத மகிழ்ச்சி முகத்தில் தெரிந்தது. அடுத்ததாக, “நாலு தக்காளியை எடு” என்றபடி ஜோவிகா கிட்சன் ரூம் வழியாக வருகிறார். ஜோவிகாவை பார்த்ததும் மாயாவுக்கு மகிழ்ச்சி, அவரின் ஹை ஹீல்ஸை பார்த்தவர், ”ஸ்டூல் போட்டுட்டு வந்துட்டா...” என்கிறார். ஆக பூர்ணிமா, மாயா, ஜோவிகா, விக்ரம், அக்‌ஷயா என்று பழையபடி புல்லிகேங் சேர்ந்து, தங்களுக்கு பிடிக்காத விஷ்ணு, அர்ச்சனாவை பற்றி பேசிக்கொள்கிறார்கள்.

குறிப்பாக ஜோவிகா, அர்ச்சனாவை பற்றி மாயாவிடம் பேசுகிறார். “எதுக்கு நீங்க அர்ச்சனாவுடன் சேர்றீங்க... அவதான் நம்மள புல்லிகேங்ன்னு சொன்னால்ல... நீங்க அவளுடன் சேர்ந்து இருக்குறது உங்களுக்குதான் ப்ராப்ளம்.. முதல்ல அவ ஃப்ரண்ட்ஸிப்பை கட் செய்ங்க” என்று அர்ச்சனாவை பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லவும், மாயாவும், அர்ச்சனாவுடன் நாம் சேர்ந்தா நல்லது இல்லபோல என்று நினைத்தவராய், நேராக அர்ச்சனாவிடம் சென்று,

நீங்க என்கூட பேசுவதாலோ அல்லது என்கூட நட்பா பழகுறதாலோ நான் உங்களை மன்னித்ததாய் அர்த்தம் இல்லை. ஏதோ நீங்க பேசுறீங்கன்னுதான் நானும் உங்களுடன் பேசுகிறேன். எனக்கு உங்களை பிடிக்காது என்று மூஞ்சியில் அடித்தமாதிரி சொன்னதும்,” அர்ச்சனாவின் முகம் ஒருமாதிரி ஆனது. பழையபடி அழுகையை அடக்கிக்கொண்டு சோகம் ஆகிறார்.

மாயா நீங்க ஒன்னை புரிஞ்சுக்கல. பிக்பாஸ் சீசன் முடிய இன்னும் இரு தினங்கள் மட்டுமே இருக்குற நிலையில ஜோவிகாவின் பேச்சைக்கேட்டு அர்ச்சனாவிடம் இப்படியெல்லாம் பேசி உங்க ஓட்டை நீங்களே குறைச்சுக்கிட்டீங்க... இதெல்லாம் ஜோவிகாவின் ப்ளான்.

உனக்கு கிடைக்கக்கூடாத கப் புல்லிகேங்ல வேற யாருக்கும் கிடைக்கக்கூடாதுன்னு ஒருவேளை ஜோவிகாவின் அம்மா நினைத்திருக்கலாம். ஜோவிகா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே போறதுக்கு முன்னாடி, புல்லி கேங் விட்டு தள்ளித்தான் இருந்தாங்க... மாயா கூட பேசுவதையும் குறைச்சு இருந்தாங்க.. இப்போ மறுபடியும் மாயாகூட சேர்ந்து அர்ச்சனாவை பற்றி பேசுவதை பார்த்தால் ஒருவேளை இதெல்லாம் பக்கா ப்ளானா இருக்கும்மோன்னு தோணுது. மாட்டிகிட்டியே பங்கு...

NGMPC22 - 147

அடுத்ததாக ரவீனா ஒரு இசைக்கு நடனமாடிய படியே உள்ளே நுழைகிறார். மணிக்கு இனம் புரியாத மகிழ்ச்சி, ஆனால் ரவீனாவிடத்தில் நிறைய மாற்றம் தெரிகிறது.

103-ம் நாளான நேற்று முதல் என்ட்ரியாக விஜய் நுழைகிறார். அடுத்ததாக நிக்சன் வீட்டிற்குள் நுழைகிறார். நுழைந்ததும் அனைவரிடம் ஹாய் சொல்லிவிட்டு வினுஷாவிடம் தனியாக அமர்ந்து , அவர் வினுஷாவை பற்றி பேசியதற்கு மன்னிப்பும் கேட்கிறார். மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன், மன்னிப்பவன் பெரிய மனுஷன் என்ற ரீதியில் வினுஷா நிக்சனை மன்னித்துவிடுகிறார். அடுத்து மாஸ் என்ட்ரியாக விசித்திரா உள்ளே வருகிறார். விசித்திராவை பார்த்ததும் கூல் சுரேஷ், சுவர் ஓரமாக மறைந்துக்கொள்கிறார். தினேஷ் கிட்சனை விட்டு வெளியே வரவில்லை.

NGMPC22 - 147

திரும்ப வீட்டிற்குள் வந்திருக்கும் போட்டியாளார்கள், பிக்பாஸ் சீசன் முழுவதையும் பார்த்துவிட்டு தன்னை எல்லோரும் எப்படி எப்படி எல்லாம் பேசினார்கள், என்பதை ஒன்றாக சேர்ந்து அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

ஆக பிக்பாஸ் வீட்டிற்குள் ஒருசிலரை தவிர அனைவரும் மீண்டும் வந்து இருந்தனர். பிக்பாஸ் நிரம்பி இருக்க கொண்ட்டாட்டம் ஆரம்பித்தது.

லேபிள் என்ற ஒடிடி சீரிஸின் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகிறார். ஒவ்வொருத்தரிடமும் லேபிள் குறித்த கருத்துகளையும் விமர்சனத்தையும் கேட்டுவிட்டு வெளியேறினார்.

NGMPC22 - 147

ரவீனா நிக்சனிடம், “என்னோட கேம் காலியானதற்கு முழு காரணம் மணிதான். அவரை நான் பாதுகாக்க போய் நான் வெளியேறிவிட்டேன். எனக்கு உங்களை பிடிக்கும். உங்க கூட பேசவரும் போதெல்லாம் நிக்சனோட பேசாதன்னு என்னை கட்டுபடுத்தினாரு. எங்கம்மா இவருக்கு ஒகே சொல்லிட்டாருன்னு எல்லார்கிட்டையும் சொல்லி வச்சு இருக்காரு. அது கிடையாது. இவர் கூட நான் வெளிநாடு போகும்போதெல்லாம் எங்கம்மா என்கூட வருவாங்க... அப்பெல்லாம் என்னை இவரு தங்கச்சி தங்கச்சின்னுதான் சொல்லுவாரு” என்று ரவீனா சொல்வது மணியிடமிருந்து விலகி ரொம்ப தூரம் சென்றுவிட்டார் என்றே தோன்றுகிறது.

ஆனால் மணியிடம் வந்து, “ஏன் என்கூட பேச மாட்டேங்கிறீங்க... என்னை பார்த்தா முகம் கொடுத்துகூட பேச மாட்டேங்கிறீங்க.. “ என்று கேட்பது என்ன மனநிலை ரவீனா? ரவீனாவை தெரிந்தவராய் மணியும், ரவீனாவை விட்டு விலகியே இருக்கிறார்.

அடுத்து கலை நிகழ்ச்சி ஆரம்பிக்கிறது. டிரம் ஆர்கெஸ்ட்ராவுடன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த மாளவிகா, மணி வெற்றி, கார்த்திக், ஆஸிஸ் ஆகியோரின் இன்னிசை கச்சேரி ஆரம்பிக்கிறது. போட்டியாளர்களும் தங்களுக்குள் இருந்த பகைமை, வருத்தம், அனைத்தையும் தொலைத்துவிட்டு ஆடிபாடி மகிழ்ந்துக்கொண்டு இருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com