வெளியேறினார் ரவீனா.. ”இவனுங்கெல்லாம் இருந்து என்ன பிரையோஜனம்?” தினேஷை வசைபாடிய விசித்திரா!

விஷ்ணுவின் வெற்றி: ஃபைனலுக்கு தகுதி பெற்றாரா?
பிக்பாஸ்
பிக்பாஸ்விஜய் டீவி

பிக்பாஸ் 89 நாள்

ticket to finale டாஸ்கில் kill, stay கார்டில் விசித்திரா ரவீனாவுக்கு kill card கொடுத்து வெளியேற்றியதால் ஆத்திரத்தில் இருந்த ரவீனா அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், விசித்திராவை கிட்சனில் இருக்கும் பாத்திரங்கள் தேய்க்க வேண்டும், காய்கறிகள் கட்செய்து கொடுக்கவேண்டும் என நச்சரித்து வேலை வாங்கிக்கொள்கிறார்.

ரவீனாவின் இந்த போக்குக்கு தினேஷ்தான் காரணம் என்று நினைத்த விசித்திரா பாத்திரம் துலக்கியபடி தனக்கு தானே தினேஷை வசைபாடுகிறார். ”சில மூஞ்சிகளை பார்த்தால் வெறுப்பா வருது. இவனுங்கெல்லாம் இருந்து என்ன பிரையோஜனம்? வாழ்ந்துதான் என்ன பிரையோஜனம்? இவனுங்ககூட இருக்குறவங்களுக்கு நியூசென்ஸ். இப்படி பட்ட நியூசென்ஸோட எப்படி குடுத்தனம் நடத்துவாங்க விட்டுட்டு ஓடவேண்டியதுதான். ஒரு மூணு மாசம் இவங்ககூட இருந்து குப்பை கொட்டமுடியல, அப்படி இருக்கும்போது எப்படி இவன்கூட குடுத்தனம் பண்ணுவாங்க... திரும்பிகிரும்பி வந்துடாதம்மா தாயே..., இவரின் உடம்பு முழுக்க விஷம், வன்மன், பொறாமை, இவனெல்லாம் ஒரு ஜன்மம்... சே...” என்று மறைமுகமாக தினேஷ் மனைவி ரச்சிதாவுக்கு சப்போர்ட் செய்கிறார்.

விஜய் டீவி

இவரின் இந்த பேச்சு 88 நாட்கள் சுசித்திராவின் நாம் மீது வைத்திருந்த ஒட்டுமொத்த மதிப்பையும் ஒரே நிமிடத்தில் தகர்த்தெரிந்துவிட்டது.

விஜய் டீவி

விசித்திரா தினேஷ் பற்றி பேசியதை ரவினா சமயம் பார்த்து தினேஷிடம் போட்டுக்கொடுக்கிறார்.

தினேஷ் விஷ்ணு, மணி ரவீனா ஆகியோர் விசித்திராவை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். “எங்கம்மா வந்த பொழுது அவங்க சைவமா, எப்போ எல்லாம் சைவம் அப்படீன்னு என் பர்சனல் விஷயத்திலெல்லாம் தலையிடுறாங்க... இது நல்லா இல்ல..” என்று தினேஷ் சொல்லவும் ஆளாளுக்கு விசித்திரா மீது வன்மத்தை கக்குகின்றனர்.

இந்தபக்கம் பூர்ணிமா மாயா தினேஷை பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர். ”பிக்பாஸை விட்டு தினேஷ் செல்லும் பொழுது அவரது Gsquare படத்துல என் போட்டோ தான் நிறைய இருக்கும்னு நினைக்கிறேன்” என்கிறார் விசித்திரா.

விஜய் டீவி

அதற்கு பூர்ணிமா, ”இல்ல மம்மி மாயாதான் அதிகமாக இருப்பாங்க... ஏன்னா மாயாவுக்கு சோப்பு போட்டது தினேஷ் தான் அதனால மாயா அதிகமாக இருப்பாங்க” என்கிறார்.

அடுத்ததாக ticket to finale டாஸ்க் நடந்தது. இது நள்ளிரவு விடிய விடிய நடந்தது. இறுதியாக இதில் விஷ்ணு 3 பாயிண்ட் பெற்று ticket to finale போட்டியில் தேர்வாகி final க்குள் சென்றார். இந்நிலையில் இந்தவாரம் ரவினா குறைந்த அளவு ஒட்டு வாங்கி வெளியேறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com