மாயாவின் பேச்சால் சந்திரமுகியாக மாறி விஷ்ணுவை வெறுத்த பூர்ணிமா

"நான் அப்படி இந்த வாரம் வெளியேபோவேன் என்று தெரிந்தால் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு போவதுதான் புத்திசாலித்தனம் " பூர்ணிமா
பிக்பாஸ்
பிக்பாஸ்PT

பிக்பாஸ் 94-ம் நாள்

பூர்ணிமாவும் மாயாவும் வழக்கம்போல் மேக்கப் அறையில் அமர்ந்து பேசிக்கொள்கிறார்கள். “மணி இருக்கான், நிக்சனும் ரவீனாவும் போயிட்டாங்க... இதை நினைக்கும்போது விளையாட்டே புரியல... அநேகமா இந்தவாரம், நீங்க, விசித்திரா, மணி அல்லது தினேஷ் இவர்களுக்குள்ள யாராவதுதான் போவீங்க” என்கிறார் மாயா பூர்ணிமாவிடம். இதை கேட்ட பூர்ணிமாவுக்கு மாயாவின் பேச்சு சற்று அதிர்சியளித்தது. ”மாயா.... நீயா... நீயா...” என்பதுபோல மாயாவைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

விஷ்ணுவிற்கு மாயாவின் எண்ணம் நல்லாவே அத்துபடி, இவர்கள் பேசியதை நேரில் பார்த்த மாதிரி, மாயா மேக்கப் ரூமில் பூர்ணிமாவிடம் பேசியதை அப்படியே தினேஷிடம் சொல்கிறார். ” நீங்க, மணி, விசித்திரா இவங்கள்ள ஒருத்தர் இந்த வாரம் போவாங்கன்னு, மாயா சொல்லிட்டு இருப்பாங்க...” என்கிறார்.

vijay tv

இந்தப் பக்கம் பூர்ணிமா மாயாவிடம், "நான் அப்படி இந்த வாரம் வெளியே போவேன் என்று தெரிந்தால் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு போவதுதான் புத்திசாலிதனம் "என்கிறார்.

இவர்களின் பேச்சு இப்படியே போய்க்கொண்டிருக்க, கட்டிலில் அமர்ந்தபடி மேக்கப் செய்துக் கொண்டிருந்த விசித்திரா பூர்ணிமாவிடம் ”இங்க இருக்கிறதிலேயே யாரு safe கேம் ஆடுறாங்க?” என்று கேட்கவும், பூர்ணிமா யோசிக்காமல் ”மாயா... அது எனக்கு மட்டும்தான் தெரியும்” என்கிறார். இதில் கோபமான மாயா, “நீங்க தான் safe கேம் ஆடுறீங்க... நீங்க செய்யுறது ஒன்னு சொல்லுறது ஒன்னு” என்று மாயா பூர்ணிமாக்குள் வாக்குவாதம் ஏற்படுகிறது.

”நீங்க சண்டை போட்டுட்டு இருங்க.. நான் ஒரு நிமிஷத்துல வந்துடுறேன்” என்று சொல்லி விசித்திரா வெளியே செல்கிறார். ஆக நான் வந்த வேலை முடிந்தது என்ற ரீதியில் விசித்திராவும் வெளியே செல்கிறார்.

vijay tv

இங்கே பூர்ணிமாவுக்கு விஷ்ணுமேல் க்ரஷ் வரக்கூடாது என்று மாயா மீண்டும் மீண்டும் அழுத்தி அழுத்தி பூர்ணிமாவிடம் மறைமுகமாக சொல்கிறார். ஒவ்வொரு முறையும் விஷ்ணுக்கு பூர்ணிமா சப்போர்ட் செய்யும்போதெல்லாம் மாயா பூர்ணிமாவுடன் சண்டை போடுகிறார். ஒரு இடத்தில் பூர்ணிமா மாயாவிடம் தெளிவாகவே பேசுகிறார்.

“ நான் இங்கே விளையாடத்தான் வந்தேன், யாரையும் லவ் பண்ண வரல... ஆனால் விஷ்ணு என்னை வச்சு விளையாண்டு final வரைக்கும் போய்ட்டாரு.. என்னோட எமோஷனலா கேம் விளையாடி என்னை பைத்தியக்காரியா மாத்திட்டாரு” என்று புலம்புகிறார். இவருக்கு சப்போர்ட் செய்வதைபோல மாயாவும், “அவன் யாரு? அவன இன்னும் உங்க மனசுல வச்சுட்டு இருக்கீங்க அது தேவை இல்ல... பூர்ணிமா i back ன்னு சொல்றது எல்லாம் பொய்.. அவன நம்பாதீங்க... ஒவ்வொரு முறையும் நீங்கதான் அவருக்கு சப்போர்ட் செய்றீங்க... ஆனா அவரு உங்களுக்கு சப்போர்ட் செய்யுறது இல்ல... இப்ப நடந்த டாஸ்க்லகூட நீங்க அவருகிட்ட... நான் உங்களுக்கு என்னெல்லாம் செஞ்சேன்னு அவருக்கு பதிய வைக்கிறீங்க... ” என்று பூர்ணிமாவிடம் விஷ்ணுவை பற்றி சொல்லவும், மாயாவின் பேச்சைக்கேட்டு பூர்ணிமா சந்திரமுகியாகவே மாறி, விஷ்ணுவை வேட்டையன்போல பார்க்க ஆரமிச்சுட்டாங்க... “விஷ்ணுவை நான் வெறுக்கிறேன், அவனை எனக்கு பிடிக்காது” என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்

vijay tv

வெளியில் பணப்பெட்டியில் இருக்கும் பணத்தின் மதிப்பு ஏறும் அல்லது இறங்கும்.. யோசித்து முடிவெடுங்க என்று பிக்பாஸ் கூறுகிறார். கொஞ்சம் அதிகப்படியாக தொகை வந்தால் எடுத்துக்கொண்டு சென்றுவிடலாம் என்று தினேஷும், மணியும் யோசித்துக்கொண்டு இருக்கின்றனர். விசித்திராவோ ”எனக்கு இந்த பணமெல்லாம் ஒரு விஷயமே இல்ல...” என்று சொல்லி செல்கிறார்.

பணப்பெட்டியோ யாருமே சீண்டாமல் பார்க்கிங் ஏரியாவில் சுற்றிக்கொண்டே இருக்கிறது. இவர்கள் யாரும் பணப்பெட்டியை எடுக்கமாட்டார்கள் என்று தெரிந்து கொண்ட பிக்பாஸ் வேறு வழியில்லாமல் தொகையை அதிகரித்து அதிகரித்து 7 லட்சம் வரை ஆஃபரை உயர்த்துகிறார்.

அடுத்து ஐஸ்க்ரீம் டாஸ்க் நடக்கிறது. இதில் பூர்ணிமா, விஜய் மணி மூவரும் கலந்துகொள்ள பூர்ணிமா வெற்றி பெறுகிறார். அல்ப்பத்தனமா ஒரு சிறு கப்பில் ஐஸ்கிரீம் வருகிறது, “ஏண்டா டேய்... ” என்று அர்ச்சனா கத்த... பயந்துபோன பிக்பாஸ் மேலும் இரண்டு கப் ஐஸ்கிரீமை அனுப்பி வைக்கிறார்.

vijay tv

இப்போது, ஆஃபரை 9 லட்சமாக உயர்த்துகிறார். இருப்பினும் அதை யாரும் எட்டிகூட பார்க்கவில்லை. ஆனால் பூர்ணிமா பிக்பாஸிடம் சொல்கிறார், “எனக்கு ஒரு ப்ராஜெக்ட்டுக்கு கூட இந்த அளவு பணம் கிடைக்காது” என்று புலம்புகிறார். ஆக பணம் அதிகரித்தால் பூர்ணிமா எடுத்து சென்றுவிடுவார் என்றே தோன்றுகிறது.

அடுத்ததாக இன்விசிபிள் டாஸ்க்கில் மாயா இன்விசிபிளாக இருப்பார் என்று பிக்பாஸ் சொன்னதும், மாயா இன்விசிபிளாக அனைவரிடமும் fun செய்கிறார். நமக்கும் கொஞ்சம் time pass ஆகிறது. பிறகு என்ன ஆனது என்பதை பிறகு பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com