பிக் பாஸ் 7: “நான் இப்படி மாட்டிக்கிட்டேனே...” புலம்பிய விசித்திரா

இவள் எப்பவுமே இப்படித்தானா? அல்லது இப்படித்தான் எப்பவுமேவா?... என்பதுபோல அர்ச்சனா டாய்லெட் கிளின்பண்ண கிளம்புவதற்கு முன் மேக்கப் போட்டு செல்வதெல்லாம் வேற லெவல்.
அர்ச்சனா
அர்ச்சனாPT

இந்த வாரம் முழுவதுமே ஸ்மால் பாஸ் வீட்டிலிருக்கும் அர்ச்சனா, “ அவரை யாரும் மதிப்பதில்லை, அவரை புரிந்துக்கொள்வதில்லை, அவர் கூறும் கருத்துகளை யாரும் காதுகொடுத்து கேட்பதில்லை" என்று ஏகப்பட்ட பிரச்னைகளை எடுத்துச் சொல்லியபடியே பிக்பாஸில் உள்ளவர்களுடனும், விசித்திராவிடமும் புலம்பியபடி இருக்க... யாரையும் எதிர்த்து துணிவுடன் களத்திலிறங்கும் விசித்திராவே அர்ச்சனாவின் புலம்பல் தாங்காமல் 'என்னை காப்பாத்துங்க கேப்டன்' என்று ஸ்மால் பாஸ் வீட்டிலிருந்து எகிறிகுதித்து பிக்பாஸ் வீட்டிற்கு வந்த கதை தெரிந்ததுதான்.

இதில் இவள் எப்பவுமே இப்படித்தானா? அல்லது இப்படித்தான் எப்பவுமேவா?... என்பதுபோல அர்ச்சனா டாய்லெட் கிளின் பண்ண கிளம்புவதற்கு முன் மேக்கப் போட்டு செல்வதெல்லாம் வேற லெவல்.

இதில் அவரை பற்றி வெளியில் இருப்பவர்கள் உயர்வாகத் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக ” நான் சமைக்கமாட்டேன், ஏன்னா எனக்கு சமைக்கத் தெரியாது, ஆனால் சமைத்ததை டேஸ்ட் பண்ண எங்கம்மா எனக்கு சொல்லித்தந்து இருக்காங்க. அதனால நீங்க சமைங்க; நான் டேஸ்ட் பண்ணி சொல்றேன்” எனும்போது, விசித்திராவுக்கு இல்ல நமக்கே அவரின் மேல் வெறுப்பு ஏற்படுகிறது. அதேபோல் “ நீ சமைக்க வேண்டாம் ஆனால் கிச்சனில் ஏதாவது ஹெல்ப் பண்ணு” என்று சொன்ன விச்சுவிடம் தக்காளி நறுக்கிய வேலையை செய்துவிட்டு, ஒரு மலையை பெயர்த்தெடுத்து போன்ற பில்டப்பை கொடுப்பதற்கு அர்ச்சனாவால மட்டும் தான் முடியும் .

”இப்படிப் போய் மாட்டிக்கிட்டேனே” என்று விச்சு புலம்புவதைப் பார்த்து நமக்கே பாவமாகத்தான் இருந்தது. இதை விட ஒரு படி மேலே சென்று ”நான் இங்க வந்தது விளையாடத்தான்; இங்க வந்த முதல் நாளில் இருந்தே என்னை சுமால் பாஸ் வீட்டிற்குள் போட்டு வேலை வாங்கி வருகிறார்கள். எனக்கு பிக்பாஸ் வீட்டிற்கு போகவேண்டும், அது எப்படி இருக்கு என்றே எனக்கு தெரியாது, எல்லார் மாதிரியும் நானும் டாஸ்கில் விளையாட வேண்டும் எனக்கு வரண்டா புல்வெளியில் படுத்து உருள வேண்டும், என்று குழந்தைகள் அடம்பிடிப்பதைப்போல அழுது ஆர்ப்பாட்டம் பண்ண ஆரம்பித்தார்.

இதைப்பார்த்த பிக்பாஸும் அவரிடம், “ நீங்க இந்த வீட்டிற்கு வந்து முழுசா இன்னும் ஒரு வாரம் கூட ஆகல... அதற்குள் முழுசா சந்திரமுகியாகவே மாறிட்டீங்களே.... டாஸ்க் விளையாட உங்களுக்கு இத்தனை அவசரமா? “ என்று கேட்டதும் இன்றி அவருக்கு சில அட்வைஸும் செய்து அனுப்பினார். இருப்பினும் அவர் கேட்கவில்லை.

மாறாக மீண்டும் வேதாளாம் முருங்கைமரம் ஏறிய கதையாக பிடிவாதம் செய்ய, இந்த முறை கேப்டன் அவரின் மேல் பரிதாபம் கொண்டு, எனது கேப்டன்ஷிப்பில் யாருக்கேனும் அநீதி நடந்தாலோ அல்லது குறை ஏதேனும் இருந்தாலோ அதை நீக்குவது ஒரு கேப்டனின் தலையாயக் கடமை என்பதுபோல, விதியை மீறி பூர்ணிமா, அர்ச்சனாவைக்கூட்டிக்கொண்டு கார்டன் ஏரியாவை சுற்றிக்காட்டி வலம் வர, கடுப்பான பிக்பாஸ் கேப்டனை கூப்பிட்டு மந்திரித்துவிட்டு அனுப்பினார். இத்தகைய செயலால் பூர்ணிமா கேப்டன்ஷிப்பில் ஒரு பின்னடைவை சந்தித்தார் என்பது உண்மை. அடுத்து என்னெவெல்லாம் நடக்க இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com