பிக்பாஸ் 7: 'Freeze Task' பெற்றோரின் வருகையால் திக்குமுக்காடிய போட்டியாளர்கள்! பொழிந்த அட்வைஸ் மழை!

பிக்பாஸில் 79 நாளான நேற்று, freezing task ஆரம்பித்தது. இந்த வழக்கமான டாஸ்கில் எல்லோரும் உறைந்திருக்க பெற்றோர்கள் உள்ளே வருவார்கள்.
பிக்பாஸ்
பிக்பாஸ்விஜய் டீவி

பிக்பாஸில் 79 நாளான நேற்று, freezing task ஆரம்பித்தது. இந்த வழக்கமான டாஸ்கில் எல்லோரும் உறைந்திருக்க பெற்றோர்கள் உள்ளே வருவார்கள்.

பூர்ணிமாவின் அம்மா உஷா நந்தினி வந்தார். பூர்ணிமாவை விட அவரின் அம்மா மிகவும் வெகுளியாக இருக்கிறார். விஷ்ணு பூர்ணிமாவை காதலிப்பதாகவும், ஆனால் பூர்ணிமாவுக்கு விஷ்ணு மீது காதல் இல்லை என்றும் போகிறபோக்கில் தமிழ் ஆசிரியையாக மாயா உஷா நந்தினியிடம் சொல்லிவிட்டு செல்கிறார்.

உஷா நந்தினியும் பேச்சுவாக்கில், விஷ்ணு பூர்ணிமாவின் அண்ணன் போல என்கிறார். பாவம் விஷ்ணு அன்று பூத்த பூவானது அன்றே உதிர்ந்தது போன்ற மனவருத்தத்தில் இருந்தாலும், சிரித்தே சமாளித்தார்.

விஜய் டீவி

அடுத்ததாக அர்ச்சனாவின் அம்மா ஜெயந்தி, அப்பா ரவிசந்திரனும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தார்கள். ரவிசந்திரன் வந்ததும் வராததுமாக விக்ரம் அர்ச்சனாவை மறைமுகமாக கேலி செய்ததையும், அதை டீவியில் பார்த்ததும் வருத்தப்பட்டதாக கூறினார்.

விஜய் டிவி

நிக்சன் நல்ல பையன்; ’கள்ளிப்பால் கொடுத்து கொன்று இருக்கலாம்’ என்று அவர் சொன்னது மனதுக்கு கஷ்டமாக இருந்தது” என்று ரவிசந்திரன் கூறினார். ஒருவர் சிறிய உதவி செய்தாலும் அதை மறக்காமல் அவர்களுக்கு எதிராக பேசக்கூடாது என்றும் அவர் அர்ச்சனாவிற்கு புரியவைத்தார்.

அடுத்ததாக விக்ரமின் அம்மா சரோஜினி, அப்பா கதிரேசன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். மாயா, பூர்ணிமா, விஷ்ணுவிடம் ஜாக்கிரதையாக இருக்குமாறு அறிவுறுத்தினர்.

விஜய் டிவி

அடுத்ததாக விஜய்யின் அம்மா கிருஷ்ணவேணி பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.

அனைவரும் ஒன்று கூடி அவரவர் பண்ணிய தவறுகளையும் நல்லதையும் சொல்லி அவர்களுக்கு புரியவைத்தனர்.

NGMPC22 - 147

பிறகு வந்தவர்களின் நேரம் முடிவடைந்ததால் அனைவரையும் வெளியேறும் படி பிக்பாஸ் கூறியதும், அனைவரும் வெளியேறினர். இனி என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com