பிக்பாஸ் 7: வந்தவேகத்திலேயே வெளியேறிய அன்னபாரதி; நாமினேஷன் உரிமையை திருப்பி எடுத்துக்கொண்ட கமல்!

ஒரு கிண்ணத்தில் லட்டும் மற்றொரு டப்பாவில் பாவற்காய் ஹல்வாவும் இருந்தது. புதிதாக வந்தவர்களிடம் இதை கொடுத்து அவர்களுக்கு பிடித்தவர்கள் பிடிக்காதவர்களுக்கு இதை பிரித்து தர கூறினார் கமல்.
bigboss7
bigboss7vijay tv

பிக்பாஸ் முப்பத்து ஐந்து நாட்கள் கடந்துவிட்ட நிலையில் கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டிலிருந்து பிரதீப்பை வெளியேற்றினார். இது இன்று வரை வலைதளத்தில் பேசுபொருளாகி வருகிறது. பிரதீப்பை விளையாட்டிலிருந்து வெளியேற்றியது தவறு என்று பல பிரபலங்கள் கருத்து கூறி வரும் நிலையில், ஞாயிற்று கிழமையான நேற்று மீண்டும் பிக்பாஸ் ரசிகர்களின் மத்தியில் கமல் தோன்றி, நிகழ்ச்சிக்கு கூடுதல் பலத்தை அளித்தார்.

vijay tv

”புதியபாதை நோக்கி போகிறவர்களை, தடுத்து நிறுத்தி அவர்களுக்கு பயம் காட்டி, அவர்கள் செய்ய நினைக்கின்ற வேலையை செய்யவிடாமல் தடுக்க பல குறுக்கீடு இருக்கத்தான் செய்யும். அதை பற்றி கவலைப்படாமல், தான் நினைத்த வேலையை அவர்கள் செய்ய வேண்டும்” என்ற தத்துவத்துடன் பிக்பாஸ் வீட்டிற்கு அகம் டீவி வழியாக உள்ளே சென்றார். அங்கு புதிதாக வந்தவர்களின் அனுபவத்தை கேட்டுத் தெரிந்துக்கொண்டார்.

ரிட்டன்கிப்ட்ஸ்

”பிறகு ரிட்டன் கிப்ட்ஸ் கொடுக்கவேண்டிய நேரம் இது..” என்று பீடிகையை உருவாக்கிய கமல் ஸ்டோர் ரூமில் இருக்கும் இனிப்பை எடுத்து வரச்சொன்னார். அதில் ஒரு கிண்ணத்தில் லட்டும் மற்றொரு டப்பாவில் பாவற்காய் ஹல்வாவும் இருந்தது. புதிதாக வந்தவர்களிடம் இதை கொடுத்து அவர்களுக்கு பிடித்தவர்கள் பிடிக்காதவர்களுக்கு இதை பிரித்து தர கூறினார் கமல். இதில் அர்ச்சனா லட்டுவை விஷ்ணுவிற்கு தந்தார். ஹல்வா பூர்ணிமாவுக்கும், மாயாவுக்கும் தந்தார். இது பூர்ணிமாவுக்கு மிக வருத்தம். அர்ச்சனாவுக்காக பிக்பாஸிடம் பூர்ணிமா திட்டுவாங்கியிருந்தார். ”நான் உனக்காக பிக்பாஸிடமெல்லாம் திட்டு வாங்கியிருந்தேன். ஆனா நீ எனக்கு பாவற்காய் ஹல்வா தர..” என்று நேரடியாக கேட்டும் விட்டார்.

vijay tv

இது இப்படி இருக்க.. அர்ச்சனாவிடம் கமல், ”நீங்க வந்ததிலிருந்து பிக்பாஸ் வீட்டிற்கு போக முடியவில்லை டாஸ்க் விளையாட முடியவில்லை என்று கண்ணீரும் கம்பலையுமாகவே இருக்கீங்க, இதையே காரணமா வச்சு அடுத்த வாரமும் உங்கள தூக்கி ஸ்மால்பாஸ் வீட்டிற்குள் போட்டுட போறாங்க... ”என்று சொல்லாமல் சொல்லவும், அர்ச்சனாவின் முகம் போன போக்கை பார்க்கணுமே.

பூர்ணிமாவை வறுத்தெடுத்த கமல்

பூர்ணிமாவையும் விட்டுவிடவில்லை கமல்ஹாசன். ”நீங்க ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பியவர்களை காரணமே இல்லாமல் ஒரு திட்டத்தோடு தான் செய்தீர்கள் இது உங்களின் பதவி ஆணவத்தின் உச்சக்கட்டம்” என்று சொன்னதும் பூர்ணிமாவுக்கு அவமானமாகி போய்விட்டது.

இதோடு நிறுத்தாமல், ”நீங்கள்.. யார் யாரை நாமினேட் செய்யவேண்டும் எனவும், யாரை இந்தவாரம் சேவ் செய்யவேண்டும் எனவும் அனைவரும் ஒன்று சேர்ந்து திட்டத்தை செயல்படுத்தி அதன்படி விளையாடி வருகிறீர்கள். இது உண்மையில் நியாயமான விளையாட்டு இல்லை. ஆகவே இனிமேல் நாமினேட் பிராஸஸை நீங்கள் தேர்வு செய்ய முடியாது, அதன் உரிமையை நீங்கள் இழந்துவிட்டீர்கள். இதை இனிமேல் பிக்பாஸ்தான் தீர்மானம் செய்வார். ஆகவே.. இவர்கள் தான் போவார்கள் என்று நீங்கள் ஒரு விளையாட்டுக்கு கூறினாலும் நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள்” என்று போட்டியாளருக்கு ஒரு ட்விஸ்ட்டையும் வைத்து விதியையும் மாற்றினார்.

உண்மையில் இது வரவேற்க்கத்தக்க ஒன்று தான். இல்லையென்றால் மாயா அன்கோ ஒன்று கூடி தங்களின் ஓட்டுகளை வீணடிக்காமல் இவர்களுக்கெல்லாம் தான் ஓட்டு போடவேண்டும் என்று ஒரு திட்டத்தை வகுத்து தங்களுக்கு பிடிக்காதவர்களை வெளியேற்ற செய்துக்கொண்டிருப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்

vijay tv

எவிக்சன் பிராசஸ்

அதன்படி போனவாரம் வயில்கார்ட் கண்டெஸ்டண்டாக உள்ளே வந்த அன்னபாரதி வந்த வேகத்திலேயே குறைவான வாக்குகளை வாங்கியதால் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதை அவர் எதிர்பார்க்கவில்லை.

புத்தக பரிந்துரை

”எனது நாடக வாழ்க்கை” என்ற புத்தகம். எழுதியவர் திரு.பி.கே.சண்முகம். இது அவர் தனது வாழ்க்கையில் கடந்து வந்த நாடகவாழ்க்கையை பற்றிய விவரித்து எழுதிய ஒரு புத்தகம். புத்தக பரிந்துரையை முடித்ததுடன் பிக்பாஸ் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறுகிறார். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிந்தது.

இனி நாளை மாயாவின் கேப்டன்ஷிப்பில் என்னவெல்லாம் நடக்க இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com