Bigg boss 7: “ஐ மிஸ் யூ... உங்கள ரொம்ப பிடிச்சு இருக்கு” - வெளியேறும் முன் பற்றவைத்து சென்ற ப்ராவோ!

தினேஷிடம் “பாத்ரூம் என்னை மட்டும் கழுவ சொல்றீங்க? பாத்ரூம் கழுவுவதற்கு 4 பேரு இருக்காங்க... நான் மட்டும் ஏன் செய்யணும்? “ என்று கேட்டார் அர்ச்சனா
பிக்பாஸ்
பிக்பாஸ்vijay tv

பிக்பாஸில் 55ம் நாள் கமலஹாசன் அன்பை பற்றி கூறிவிட்டு அகம் டீவி வழியாக அகத்திற்குள் சென்றார்.

அர்ச்சனாவுக்கு பாத்ரூம் கழுவுவது என்றாலே பிடிக்காது என்பது வந்த முதல் வாரத்திலேயே நமக்கு தெரியும். முகம் சுளித்தப்படி செய்தார். அதன் பிறகு பாத்ரூமிற்கு சென்று அழுததும் தெரியும்.

இந்நிலையில், மீண்டும் அவருக்கு பாத்ரூம் சுத்தம் செய்யும் வேலை வந்தது. அதை செய்ய முடியாது என்று சொல்லாமல் பிரச்னை செய்ய ஆரம்பித்தார்.

தினேஷிடம் “பாத்ரூம் என்னை மட்டும் கழுவ சொல்றீங்க? பாத்ரூம் கழுவுவதற்கு 4 பேரு இருக்காங்க... நான் மட்டும் ஏன் செய்யணும்? “ என்று கேட்கவும்,

உங்களுக்கு வேலை சொன்னா கோவம் வருது. இத நா டே ஒன்னுலேர்ந்து பார்த்துட்டு தான் இருக்கேன். நீங்க அட்ஜெட் செய்து போனா அடுத்தவாரம் உங்க வேலையை மத்தவங்க பகிர்ந்துக்குவாங்க... “ என்று தினேஷ் சொன்னாலும், “எனக்கு பசிக்குதுல்ல...” என்று அழாமல் அழுதார்.

பிக்பாஸ்
Bigg Boss 7: பூகம்பம் டாஸ்கில் தோற்றதால் வெளியேற்றபட்ட இரண்டு போட்டியாளர்கள்.. யார் தெரியுமா?

வேறு வழியில்லாமல் வேலையை முடித்து வந்து அமர்ந்தவரை ஸ்மால் பாஸ் வீட்டிலிருப்பவர்கள் சாப்பிட அழைத்ததும், “வேண்டாம் டயம் போச்சு நான் சாப்பிடமாட்டேன்” என்று மறுத்து ஸ்மால் பாஸ் வீட்டினருடன் சண்டையிட்டு சாப்பிடாமல் படுத்துவிடுகிறார்.

இரவு தினேஷ் அர்ச்சனாவிடம், மன்னிப்பு கேட்டதுடன், மாயா, பூர்ணிமாவுக்கு நிறைய நக்கல் நையாண்டி தனம் இருக்கு என்பதையும் கூறுகிறார்.

பிறகு முட்டை பிரச்னை ஆரம்பிக்கிறது. இதில் மணி தனக்கு முட்டை வரவில்லை என்று ஸ்மால் பாஸ் வீட்டில் கேட்க, இதில் ஜோவிகாவுக்கும் மணிக்கும் சண்டை வருகிறது. பூர்ணிமா ஜோவிகாவுக்கு சப்போர்ட் செய்ய, கூல் சுரேஷ் மணிக்கு சப்போர்ட் செய்ய, ஜோவிகா கூல்சுரேஷை பார்த்து ‘பதனி” என்கிறார். இதில் கோபமடைந்த கூல் சுரேஷ் ஜோவிகாவிடம் சண்டையிட இதில் பூர்ணிமாவுக்கும், கூல் சுரேஷூக்கும் பிரச்சனை ஆரம்பிக்கிறது. இதில் ஒரு விஷயம் என்னவென்றால் கடந்த 7 எபிசோடிலேயும், முட்டை பிரச்சனை தலையாய பிரச்சனையாக உருவாகிறது.

சண்டைபோட்டு டயர்டாகி அனைவரும் சென்றபின் பூர்ணிமா மாயாவிடம் நடந்த சண்டை அனைத்தையும் விவரித்து, அலசி ஆராய்ந்து இந்த பிரச்சனைக்கு மூல காரணம், தினேஷ் தான். தினேஷூக்கு தினமும் மதியம் முட்டை வேண்டும். அதனால் இல்லாத ஒரு டிஸ்ஸில் வேண்டுமென்றே முட்டையை புகுத்திவிடுவார் என்று ஒரு ஆராய்ச்சியாளர் ரேஞ்சுக்கு விஷயத்தை கண்டுபிடித்து கூறினார்.

பூர்ணிமா
பூர்ணிமாவிஜய் டீவி

கமல் மறுபடி அகம் டீவியின் வழியாக அகத்திற்குள் சென்று போட்டியாளர்களிடம், “நற்செயல்கள் செய்யும் பொழுது அதை மறந்துவிடக் கூடாது. ஒருத்தர் சிக்கலான சூழலில் இருக்கும் பொழுது, அவருக்கு உறுதுனையாக நின்று அவரை இக்கட்டு சூழலிலிருந்து காப்பாற்றியதற்காக இன்று ஒரு ஜெண்டில்மேனை அழைத்து நான் அவர் செய்த செயலுக்கு நன்றி சொன்னேன். அவருக்கு மூன்று மகன்கள் உண்டு, என்று சொல்லும் பொழுதே தெரிந்தது அவர் விசித்திராவின் கணவர் ஷாஜியிடம் பேசியிருக்கிறார் என்று. பிறகு விசித்திராவையும் பாராட்டினார். “உங்கள் சோகம் புரிந்தது. ஆனாலும் நீங்கள் கண்ணியம் தவறாமல் குரோதம் இல்லாமல் தகாத வார்த்தை உபயோகிக்காமல் அழகாக பேசினீர்கள் என்றும் பாராட்டினார். இதில் ப்ராவோவின் கதையும் முக்கியமானது”, என்றும் பேசினார்.

பிறகு கேப்டன்ஷிப்பின் கருத்து என்ன என்று போட்டியாளார்களை கேட்கவும், அனைவரும் திறந்துவிட்ட மதகு போல மடமடவென தனது மனதுக்குள் இருந்த வன்மத்தை தினேஷுக்கு எதிராக கொட்டினர். இதையெல்லாம் கேட்ட கமல், அனைவரிடத்திலேயும், இதெல்லாம் சகஜம் என்ற ரீதியில் பேசினார். அடுத்ததாக எலிமினேசன் பிராஸஸ் நடந்தது.

ப்ராவோ
ப்ராவோவிஜய் டீவி

இந்தவார எலிமினேசன் ப்ராஸ்ஸில் ப்ராவோ வெளியேறினார். வெளியேறும் முன், அருண் வெங்கடேஷ் காளிமுத்து ப்ரவேஷ் என்று தனது பெயரை கூறியபொழுது, தில்லுமுல்லு இந்திரன் சந்திரன் நியாபகம் வந்தது. அவர் செல்லும் முன் ஜோவிகாவிடம், “நான் வெளியே இருந்து பார்த்தபொழுது இந்த பொண்ணு ஏன் இப்படி கோபப்பட்டு கத்துறா?ன்னு நினைச்சேன். ஆனா இங்க வந்துபார்த்த பின்புதான், உங்க விளையாட்டு என்னனு எனக்கு தெரிஞ்சுது, ஐ மிஸ் யூ... எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சு இருக்கு” என்று ஜோவிகாவே வெக்கப்படும் அளவுக்கு சொல்லி சென்றார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com