BIGG BOSS DAY 44 | லட்டுக்குள் இருந்த கோல்ட் ஸ்டார் யாருக்கு கிடைத்தது?

“நீங்க சினிமா ஷூட்டிங்கிற்கு வந்தமாதிரி coco மில்க் வேண்டும் என்று கூறுவதெல்லாம் டூ மச்... இங்க யாருக்கும் தனித்தனியாக கலக்கமுடியாது. டீ காபி மட்டும்தான் போடமுடியும்” - விஷ்ணு
BIGG BOSS DAY 44
BIGG BOSS DAY 44BIGG BOSS

“போட்டியாளர்கள் அனைவருக்கும், அடுத்த ஒரு வாரத்துக்கு காலை உணவு ரவா உப்புமாதான்” என்று பிக்பாஸ் கூறியதும் பலர் ஐய்யய்யோ என்றுவிட்டனர். அப்படியே தொடங்கியது நாள்.

விஷ்ணு அக்‌ஷயாவின் கொக்கோ-மில்க் மோதல்!

அக்‌ஷயா, “எனக்கு கொக்கோ மில்க்தான் வேண்டும்” என்று கூறியதை விஷ்ணு தனக்கு கண்டெண்டாக எடுத்துக்கொண்டு அக்‌ஷயாவுடன் சண்டை போட ஆரம்பித்தார். “நீங்க ஷூட்டிங்கிற்கு வந்தமாதிரி கொக்கோ மில்க் வேண்டும் என்று கூறுவதெல்லாம் டூ மச்... இங்க யாருக்கும் எதுவும் தனித்தனியாக கலக்கமுடியாது. டீ காபி மட்டும்தான் போடமுடியும்” என்று அதிகாரமாக சொல்லவும், அக்‌ஷயா கண்கலங்கியபடி ப்ராவோவிடம் “நான் என்ன தப்பா கேட்டேன்? அட்லீஸ்ட் ஒரு கொக்கோ மில்க். அதற்கு ரொம்ப பேசறாரு” என்று சொல்லவும், ப்ராவோ “சரி சரி விடுங்க... நீங்க கேட்ட கொக்கோ மில்க் இப்ப ரெடியாகிவிடும்” என்று அக்‌ஷயாவுக்கு ஆறுதல் சொன்னார்.

பூர்ணிமாவின் அட்வைஸ்!

இங்கு கூல் சுரேஷின் கெட்டப்பில் ரவீனாவுக்கு வேஷ்டி கட்டி விடுகிறார் மணி. பூர்ணிமா அக்‌ஷயாவிற்கு சப்போர்ட் செய்து விஷ்ணுவிடம் பேசுகிறார். “நீ எல்லாம் ஒரு ஆளே இல்லன்னு சொல்றது தப்பு.... அப்படி எல்லாம் பேசக்கூடாது. இது நீங்க எனக்கு சொன்ன அட்வைஸ்தான்” என்றார்.

BIGG BOSS DAY 44
BIGG BOSS DAY 44

விஷ்ணு பதிலுக்கு, “நான் அவகிட்ட பேசி அவள பெரிய ஆளா ஆக்க நினைக்கல... அதனாலதான் அப்படி சொன்னேன்” என்றார். விஷ்ணு, தான் ஒருத்தர்கிட்ட பேசினா அந்த நபர் பெரிய ஆளா மாறிடுவாங்க என சொல்ல வருகிறாரா, இல்லை பெரிய ஆளுங்ககிட்டதான் தான் பேசுவேன் என சொல்ல வருகிறாரா? அவருக்குத்தான் வெளிச்சம்! இருந்தாலும் பூர்ணிமாவின் அறிவுரைக்குப்பிறகு, “நான் பேசியது தப்பு” என்று ஒத்துக்கொண்டு “நான் எனது வார்த்தையை மாற்றிக்கொள்கிறேன்” என்று பூர்ணிமாவிடம் கூறுகிறார். இத்தோடு இந்த கண்டெண்டுக்கு ஒரு முற்றுப்புள்ளியும் வைத்தார்.

பூர்ணிமாவின் கோவம்:

அடுத்ததாக பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த பூர்ணிமா, சமைத்து முடித்த ஒரு பெரிய பாத்திரத்தின் அடியில் ஒரு பச்சைமிளகாய், சிறிது உப்மா மீதம் இருந்ததை பார்த்து, “கேப்டன், சமைத்த பாத்திரத்தில் கருவேப்பிலை பச்சைமிளகாய்லாம் இருக்கு. சுத்தம் செய்து தர சொல்லுங்க அப்போதான் தேய்க்கமுடியும்” என்றார். இதைக்கேட்ட கேப்டன் தினேஷ், “ஏம்மா பக்கத்துலேயே குப்பை தொட்டி இருக்கு. இத அப்படியே அதுல போட்டுட்டு தேய்க்கவேண்டியதுதானே... இது ஒரு குத்தம்மா வந்து சொல்றீங்களே?” என்றதும், “அதெல்லாம் முடியாது. சுத்தம்மா இருந்தாதான் நான் தேய்க்கமுடியும்” என்றார்.

BIGG BOSS DAY 44
BIGG BOSS DAY 44

“பாத்திரத்த சுத்தம் பண்ணி பளபளன்னு போடறத்துக்கு நாங்களே தேச்சு வச்சுடலாமே...” என்கிறார். என்னம்மா இப்படி பண்றீங்களேமா என்பதுபோல, கடைசியில் இது நமத்துப்போன பட்டாசு மாதிரி முடிந்தது.

அடுத்ததாக ஷாப்பிங் ரீபேமெண்ட் டாஸ்க்:

ஷாப்பிங் ரீபேமெண்ட் டாஸ்க் அடுத்து நடந்தது. இதில் வெற்றி பெற்றால் கடன் தொகை கழிக்கப்படும். மாறாக தோல்வியுற்றால், இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டிலுள்ள பெட்ரூமிற்குள் யாரும் போகக்கூடாது என்று பிக்பாஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இதில் வழக்கம் போல் போட்டியாளர்கள் தோற்கவே, பிக்பாஸ் டீமில் இருப்பவர்கள் பெட்டி படுக்கையுடன் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு வந்தனர்.

BIGG BOSS DAY 44
BIGG BOSS DAY 44

வந்தவுடன் விஷ்ணுவும் மணியும் அர்ச்சனாவைப்பற்றி பேசிக்கொள்ள துவங்கினர். “அர்ச்சனா ஏதாவது சொன்னால் அழுதுடறாங்க. ஒழுங்கா பாத்திரம் கழுவி சுத்தம் செய்றதில்லை” என்றனர். பின் விஷ்ணு பூர்ணிமாவிடம், “இந்தவாரம் ஏதும் பிரச்னை பண்ணிக்காதீங்க... கொஞ்சம் பொறுமையாக இருங்க, அப்போதான் அக்‌ஷயா வெளில போவாங்க...” என்று சொல்லவே, ‘அடடா இதான் உங்க ட்ரிக்கா’ என்றாகிவிட்டது.

BIGG BOSS DAY 44
BIGG BOSS DAY 44

கோல்ட் ஸ்டார் டாஸ்க்:

இதில் எல்லோருக்கும் லட்டு கொடுக்கப்பட்டு, ‘இதை பிடிச்சவங்களுக்கு கொடுங்க’ ‘இதை பிடிக்காதவங்களுக்கு கொடுங்க’ என்றெல்லாம் கூறினார் பிக்பாஸ். முடிவில் இரண்டு லட்டுகளில் கோல் ஸ்டார் இருக்குமென கூறிவிட்டார். அப்படி விசித்திராவுக்கும், மணிக்கும் ஸ்டார் கிடைத்தது.

இப்படியான நிகழ்வுகளையடுத்து, எந்தவித சுவாரசியமும் இல்லாமல் பிக்பாஸ் 44ம் நாள் சுமாராக நிறைவடைந்தது. நாளை என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com