”கோட்வேட் பயன்படுத்தியா பேசறீங்க; வெளில போங்க” - பார்க்கவந்த குடும்பத்தினரிடம் கோபப்பட்ட பிக்பாஸ்!

உற்சாக மனநிலையிலிருந்து உதிர்வு: பிக்பாஸின் திடீர் திருப்பம்!
பிக்பாஸ் 7
பிக்பாஸ் 7விஜய் டீவி

பிக்பாஸில் 80வது நாள் காலையிலேயே தினேஷின் பெற்றோர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தனர். அவர்கள் ஏதுவும் பெரியதாக பேசியது போல் தோன்றவில்லை. தினேஷின் வாழ்க்கையைப்பற்றி கவலைபட்டனர்.

அடுத்ததாக மணியின் அம்மா சரளா வந்தார். மணியின் அம்மாவைப் பார்த்ததும் ரவீனா முகத்தில் ஒரு புன்னகை அரும்பியது. மணியின் அம்மா சகஜமாக அனைவரிடமும் பேசினார். ரவினாவிடமும் அமர்ந்து பேசினார். ”நீங்க அனைவரும் நல்லாவே விளையடுறீங்க...” என்றார். ரவீனா அவர் அருகில் வந்து அமர்ந்து, ”பிக்பாஸ் 24*7 பார்ப்பீங்களா? 8 வாரம் தொடர்ந்து நாமினேஷன்ல வந்தாரு பாத்தீங்களா? இந்த வார நாமினேசன்ல நா இருக்கேன்... வீட்டுக்கு போயிடவா?” என்று அடுக்கடுக்கான கேள்விகளுக்கிடையே மறைமுகமான கேள்வியை கேட்டார். அதற்கு ரவீனா அம்மாவும், ”இல்ல...இல்ல... இங்கேயே இரு... ”என்கிறார்.

விஜய் டீவி

அடுத்ததாக அர்ச்சனாவின் தங்கை அக்சயா வந்தார். அவரை பார்த்ததும் அர்ச்சனா என்று ஓடிவந்து கட்டிக்கொண்டார். அக்சயாவை தனியாக கூட்டிக்கொண்டு சென்ற மாயா... “உங்க அக்காவை நான் ஏதாவது காயப்படுத்தி இருந்தா மன்னிசிடுங்க” என்கிறார்.

பதிலுக்கு அக்சயாவும், “இட்ஸ் ஆல் இன் த கேம்... நான் உங்க ஃபேன். ஐ ஃபர் கிவ்” என்கிறார். “அப்படியா... இந்த இடத்துக்கு வந்தா இப்படி தான் பேசணும், இப்போ இங்க வாங்க.. ” என்று வேறு இடத்திற்கு அவரை அழைத்துச் செல்கிறார். ஆக, ரிலாக்சா ஒரு இடத்தில் அமர்ந்தால், மன்னிப்பு, திண்மையில் அமர்ந்தால் புரணி, மேக்கப்ரூமில் யாரை காலி செய்யலாம் என்ற பேச்சு... இப்படி இடத்திற்கு தகுந்தால் போல் பேசுவது இதுதானா மாயா? என்று நமக்குள் கேள்வி எழாமல் இல்லை.

அடுத்தது நிக்சனின் அப்பா வேலாயுதம் வந்தார். இவரை பார்த்ததும் நிக்சன் salute செய்தார். ”ஆச்சர்யமா இருக்கா? அதிர்ச்சியா இருக்கா?”என்று நிக்சனை பார்த்து கேட்டார். அனைவரையும் பார்த்து வாழ்த்து சொல்கிறார்.

”இவன் திருந்த வந்த இடம். பிக்பாஸ் அவனுக்கு டாஸ்க் கொடுத்து திருத்தி இருக்கிறார். இவன் தினமும் இரவு 7 மணிக்கு தான் எழுந்திருப்பான். இங்கே எல்லாரும் இவன வச்சு செஞ்சீங்க” என்கிறார். கொளுத்தி போட்ட பட்டாசு மாதிரி சொல்ல வந்ததை எல்லாம் அரை மணிநேரத்தில் சொல்லிவிட்டு அமைதியாகி விடுகிறார்.

விஜய் டீவி

விஷ்ணுவின் சகோதரிகள் நிவேதா சுஹாசினி வீட்டிற்குள் வந்தனர். கிச்சனில் இருந்த பூர்ணிமா ஒரு செகண்ட் தன்னை கண்ணாடியில் பார்த்துக் கொண்டு விஷ்ணுவின் சகோதரிகளை வரவேற்கிறார். நிவேதா தன் சகோதரனுக்கு நிறைய அறிவுரை சொல்கிறார். “நீ ஒருமணி நேரம் வரை பேசினாலும் உனக்கு என்ன பேசினன்னு நியாபகம் இருக்காது. ஆனால் நீ பேசியதை நியாபகம் வைத்துக் கொண்டு பின்னால் மாயா, பூர்ணிமா உன்னை கலாய்கிறார்கள்” என்கிறார். இருவரும் விஷ்ணுவிடம் ஏதோ சொல்ல வருகிறார்கள் ஆனால் அதை சொல்லவில்லை .

விஜய் டீவி

சிறிது நேர உரையாடலுக்கு பின் அனைவரும் சென்ற பின் மாயா பூர்ணிமா, நிக்சன் மூவரும் விஷ்ணுவின் சகோதரிகளை பற்றி பேசுகிறார். “அவங்க தங்கச்சி என்னை பார்த்து முறைக்கிறாங்க. எனக்கு ஒரு மாதிரி போச்சு” என்கிறார் நிக்சன். “ஆமாம் என்கிட்ட கூட அவங்க சரியா பேசலை” என்கிறார் பூர்ணிமா..

81 வது நாள் கலையிலேயே மாயாவின் அம்மா கீதா சகோதரி ஸ்வாகதாவும்உள்ளே வந்தனர். மாயாவை பார்த்து அவரது அம்மா செல்லமாக ”குரங்கே...” என்கிறார். உள்ளே நுழைந்ததும் விக்ரமை பார்த்து, “நான் உன் ஃபேன், ஐஞ்சு வருஷமா நான் உன்ன பார்த்துட்டு இருக்கேன். இன்னிக்கு கூட உனக்கு தான் ஓட்டு போட்டுட்டு வரேன்” என்று விக்ரமிடம் சொல்லி அவரை தன் பக்கம் இழுத்துவிட்டார். மாயா ஏன் 16 அடி பாய்றாங்கன்னு இப்போது தெரிந்தது.

NGMPC22 - 147

அடுத்ததாக ரவீனாவின் சகோதரன் ராகுல் அவரது மனைவி சாய் ஹேமாவதியும் உள்ளே வந்தனர். வந்ததும் வராததுமாக ஹேமா ரவீனாவிற்கு திகட்ட திகட்ட அட்வைஸ் பண்ணியது நமக்கே சலிப்பை ஏற்படுத்தியது. மறைமுகமாக மணி உனக்கு ஒத்து வராது இது வேண்டாம் என்கிறார்.

“நீ உனக்காக விளையாட வந்த, இன்னொருத்தருக்கு விளையாட வரல... ”இப்படி ஏகப்பட்ட அட்வைஸ். ஹேமாவதி ரவீனாவை அருகில் அமர்த்திக்கொண்டு, ”நீ ராத்திரி மணியோட உட்காந்து ரொம்ப நேரம் பேசிட்டு இருக்க, நீ ஒழுங்கா விளையடல... அவன் ஒரு நடனக் கலைஞர்.. அவர் நல்லா ஆடுறதுல என்ன இருக்கு? அவனுக்காகவா விளையாட வந்த, உன் மோதிரம் எங்க? வாங்கிட்டு வா...” என்று ஏகப்பட்ட அட்வைஸ்... இத்துடன் நிறுத்தாமல் ”ரெட் ..” என்று மறைமுகமாக பிரதீப் பற்றி பேசும் பொழுது, கடுப்பான பிக்பாஸ் “இங்க வெளியில நடக்குறது பத்தி பேசக்கூடாதுன்னு உங்களுக்கு சொல்லி அனுப்பினேன். ஆனா நீங்க கோட்வேட் பயன்படுத்தி பேசறீங்க அதனால நீங்க வெளில போங்க” என்று கொஞ்சம் கோபமாக பேசவும், ரவீனா அழ ஆரம்பிக்கிறார்.

ரவினா அழுதது மணிக்கு பொருக்கவில்லை. அவரும் யாருக்கும் தெரியாமல் பாத்ரூம் சென்று அழுதுவிட்டு வருகிறார். பிறகு பிக்பாஸ் ராகுல், ஹேமாவதிக்கு exceuse கொடுத்து உள்ளே இருக்க அனுமதிக்கிறார். மணிக்கு ஒரு வருத்தம், ரவீனாவின் அண்ணனும், அண்ணியும் தன்னைப் பார்த்து ஒரு ஹாய் கூட சொல்லவில்லை என்று.

விஜய் டீவி

அடுத்ததாக விக்ரமின் சகோதரி சூர்யா வருகிறார். விக்ரமை பார்த்து, “ஏன் ஒல்லியா போயிட்ட...” என்கிறார். ”விக்ரம் உனக்கு வெளில நல்ல பேர் இருக்கு, டைட்டில் வின்னராக வருவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கு. ஆனா மாயாவை நம்பாதே... நீ 5 ஸ்டார் வாங்கினதற்கு, அவன் அதற்கு ஒர்த்தே இல்லன்னு கமெண்ட் பண்ணினாங்க, பூர்ணிமாவை கூட நம்பலாம், ஆனா மாயாவை நம்ம கூடாது” என்கிறார்.

அடுத்ததாக பூர்ணிமாவின் சகோதரன் கிஷோர் மற்றும் அவரது குழந்தை பேமிகாவும் வந்திருந்தனர். பூர்ணிமா விசித்திராவின் மூளையை தரையிலிருந்து எடுத்துக் கொடுத்ததை பற்றி பேச்சு எடுத்து சிரித்தவர், சூழ்நிலையை புரிந்துக்கொண்டவராய், ”கேம் என்றால் எல்லாமும் தான் இருக்கும். நீ நல்லாவே விளையாடுற...” என்கிறார்.

விஜய் டீவி

அடுத்ததாக மணியின் அண்ணா ராம்பிரசாத்தும் அவரது குழந்தை சுபிக்‌ஷாவும் வந்தனர். சுபிக்‌ஷா மணியிடம் மிகவும் பிரியமாகவே இருந்தார். இப்படி வீட்டில் அனைவரும் பிரியமாக இருந்து குடும்பத்தினருடன் ஃபோட்டோ எடுத்துக்கொண்டு குடும்பத்தினர் அனைவரும் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினர். இனி அடுத்த என்ன என்பதை பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com