BIGGBOSS DAY 82 | “மாட்னியாடா பம்பரகட்டை மண்டையா...” பூர்ணிமா வார்த்தையை லூப் செய்த பிக்பாஸ்!

“இந்த வீட்டுக்கு வந்தவங்க நம்முடைய நட்பை உடைக்கிறாங்க ... அது நல்லாயில்ல... சொல்லப்போனா இதுல என் அம்மாவும், அக்காவும்தான் சூப்பர்” - மாயா
ரவீனா
ரவீனாவிஜய் டிவி

பிக்பாஸில் 82-ம் நாள்

ரவீனா வீட்டினர் மணியை கண்டித்ததில், அவர் மன அமைதி இன்றி காணப்பட்டார். இதனால் விஷ்ணு அவருக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்கிறார். இதற்கு முன்பு விஷ்ணுவிற்கும் இதைபோல் ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்ட சமயம், மணி அவருக்கு ஆறுதல் சொல்லியிருக்கிறார்.

இப்படி ஒருபக்கம் நடந்துக்கொண்டிருக்க, ஸ்மால்பாஸ் வீட்டிலிருக்கும் பூர்ணிமாவிடம் மாயா வந்து, “இந்த வீட்டுக்கு வந்தவங்க நம்முடைய நட்பை உடைக்கிறாங்க ... அது நல்லாயில்ல... சொல்லப்போனா இதுல என் அம்மாவும், அக்காவும்தான் சூப்பர். ஆனா நான் எங்க அம்மாவ hurt பண்ணிட்டேன். அவங்களும் அழுதுட்டாங்க" என்றுகூறி, கடந்த சில நாட்களாக வீட்டிற்கு வந்தவர்களைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். இடையிலேயே மறித்து, “உங்கம்மா அழுதாங்களா... ஏய் அத நான் பார்க்கல” என்று ஏதோ நல்ல சினிமா பார்க்க தவறவிட்டதுபோல் சிரித்தபடி சொன்ன பூர்ணிமா, “அதான் விக்ரம் தங்கச்சி பேசும்பொழுது நீங்க டவுனாகி இருந்தீங்களா?” என்று கேட்டார்.

இதைக்கேட்ட மாயா, “நான் விக்ரம் தங்கச்சிகிட்ட பேசவே இல்ல.. எனக்கு அவங்க வைப் செட் ஆகல...” என்று விக்ரமை பற்றியும் அவரது சகோதரியை பற்றியும் சில விஷயங்கள் கூறினார்.

மாயா யாருக்கும் தெரியாமல் பாத்ரூம் சென்று அழுகிறார். விக்ரமின் தங்கை பேசியதற்காகவோ அல்லது அவரின் அம்மாவை நினைத்தோ அழுதார்போல...(?) எப்பவும் மாயாதான் அடுத்தவர்களை அழ வைப்பார். இப்பொழுது மாயாவை ஒருவர் அழவைத்துவிட்டார். யானைக்கும் அடி சறுக்கும்தானே?

மறுபக்கம் ரவீனா, மணியிடம், “எங்க வீட்ல உங்களை பத்தி எதுவும் சொல்லல... உன் முடிவை நீயே எடு, அப்படின்னுதான் சொன்னாங்க” என்றார். ஏம்மா, பிக்பாஸே உன் அண்ணா, அண்ணியை வெளியே போங்கன்னு சொல்லுற அளவுக்கு உங்க அண்ணி பேசினாங்களே? அத நீங்க கேட்கலையா?

ரவீனா “நான் எப்போது உன் விஷயத்தில் முடிவெடுத்தேன்? அதென்னது உங்க அண்ணி ரவீனானு பேரு வச்சு இருக்கோம்னு சொன்னாங்க... நா குண்டு பையான்னு கூப்பிடுறதாலயா?” என்று சரியாக பாயிண்டை பிடித்தார். ஆனால் என்ன நினைத்தாரோ, மீண்டும் மணியிடம் “குண்டு பையா... குண்டு பையா... குண்டு பையா...” என்றார்.

அடுத்ததாக விஜய்யின் நண்பர் கோகுல் மற்றும் நிக்சனின் நண்பர் சஞ்சை வருகிறார், கலகலவென அனைவரிடமும் பேசினர்.

இவர்களின் கலகல உரையாடலுக்கு இடையே “மாட்னியாடா பம்பரகட்டை மண்டையா...” என்று பூர்ணிமா பேச்சுவாக்கில் சொல்ல அதை பிடித்துக்கொண்ட பிக்பாஸ் பூர்ணிமாவை ‘லூப்’ என்றார். இதனால் பூர்ணிமாவும் ”மாட்னியாடா பம்பரகட்டை மண்டையா... ” என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படி பிக்பாஸ் நாள் முழுக்க அடிக்கடி லூப் என்றும் Stache என்றும் மாறி மாறி சொல்லி நிகழ்ச்சியை சுவாரசியமாக மாற்றினார்.

பிறகு விசித்திராவின் குடும்பம் வருகிறார்கள். அவரது கணவர் ஷாஜி வந்ததும், விசித்திராவை உச்சிமுகர்கிறார். அவர்களின் உரையாடல் நெகிழ்சியான தருணமாக இருந்தது. விசித்திராவின் குடும்பம், பிக்பாஸ் குடும்பத்துக்கு இடையே க்யூட்டாக ஒளிந்துகொண்டதும், அவர்களை கண்டவுடன் விசித்திரா கத்தியதுமேகூட அத்தனை நெகிழ்ச்சியான தருணம்!

இப்படியாக உணர்ச்சிபூர்வமாக இந்த நாள் செல்லவே, போட்டியாளர்களுடன் பேசிவிட்டு குடும்பத்தினர் வெளியேறினர். இந்நிலையில், இந்தவார எவிக்‌ஷனில் விக்ரம் வெளியேறப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளது. பொருத்திருந்து பார்க்கலாம் என்ன நடக்க இருக்கிறது என்று.!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com