16 லட்சத்துடன் சிட்டாக பறந்த பூர்ணிமா! பணப்பெட்டியை எடுக்காதது குறித்து மற்றவர்கள் சொன்ன காரணங்கள்!

”கப்பைவிட முக்கியமாக நான் நினைப்பது, அனுபவமும் படிப்பும். அது பிக்பாஸில் கிடைச்ச திருப்தி எனக்கு இருக்கு. என் கண்ணு முன்னாடி பணம் சுத்திகிட்டு இருக்கு, அதை எப்படி விடமுடியும்? 96 நாட்கள் நான் இங்கே இருந்ததற்கான பரிசை நான் எடுத்துக்கொண்டேன்”- பூர்ணிமா
பிக்பாஸ் 7
பிக்பாஸ் 7vijay tv

97 நாட்கள் நடந்து முடிந்த பிக்பாஸில், இவர் கடைசி வரை இந்த போட்டியாளர் இருப்பார் என்று நினைத்த சிலர் பாதியிலேயே வெளியேறியதுடன் யார் இறுதியில் டைட்டில் வின்னர் கப்பை வாங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளாக நாளாக அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

vijay tv

இதில் பிக்பாஸ் அறிவித்திருந்த 16 லட்சத்தை பூர்ணிமா எடுத்துச்சென்றது ஒரு நல்ல மூவ் என்றாலும் இந்த பணம் மணிக்கு கிடைத்திருந்தால் அவருக்கு உபயோகமாக இருக்கும் என்று நினைத்த விஷ்ணு மணியிடம் “பணத்தை நீ எடுத்துக்கொள் “ என்று சொல்ல... மணி மறுத்துவிட்டார்.

இந்தசீசனில் பணத்திற்காக யாரும் விளையாடியது போல் தெரியவில்லை... டைட்டில் பெறவேண்டும். மேலும் மக்கள் மனதில் இடம் பிடிக்கவேண்டும் என்பதே பிரதானமாக கருதப்பட்டது. ஆனால் மாயாவும் பூர்ணிமாவும் மட்டுமே 15 லட்சத்திற்கு மேல் வந்ததும் எடுத்துக்கொள்ளலாம் என்று பேசிவந்தனர். இறுதியில் பூர்ணிமா அதை எடுத்துக்கொண்டு சென்றார்.

97ம் நாளான சனிக்கிழமை அன்று கமல் அரங்கத்திற்கு வரும்பொழுது, பிக்பாஸ் பயணத்தைப்பற்றி அவர் பாணியில் அழகாகவே விவரித்துஇருந்தார். “ஒரு பயணம் பெரிய கொண்டாட்டத்துடன் ஆரம்பிக்கின்றதோ அதே போல் முடிவும் கொண்டாட்டத்துடன் முடிவடைந்தால் அந்த பயணம் வெற்றியடைந்த பயணத்திற்கான அடையாளம். இது வாழ்க்கை பயணத்திற்கும் பொருந்தும். ஒருவரின் வாழ்க்கை நன்றாக இருந்தது என்பதை அவரின் இறுதி ஊர்வலத்தில் தெரிந்துக்கொள்ளலாம், “என்றவர், அகம் டீவி வழியாக அகத்திற்குள் சென்றார்.

NGMPC22 - 147

பணப்பெட்டியை ஏன் போட்டியாளார்கள் எடுக்கவில்லை அதற்கு காரணம் என்ன என்பதை பார்க்கலாம்.

தினேஷ் விஷ்ணுவிடம், “ மேடம் மட்டும் இந்த பணத்தை எடுத்து இருந்தால், விளையாட்டே வேறு மாதிரி இருந்திருக்கும், அவங்களும் எடுக்கின்ற மனநிலையில்தான் இருந்தார். ஆனால் மாயாவும், பூர்ணிமாவும் அவங்ககிட்ட கேம் விளையாடி அவங்களின் மனசை மாத்தி இருக்காங்க” என்கிறார்.

விஷ்ணுவும், ”ஆமா... அர்ச்சனா கூட, “மேம் நீங்க தான் டைட்டில் வின்னர்ன்னு சொல்லி அவங்கள உசுப்பேத்தி விட்டதை பார்த்து இருக்கேன்.. அதான் அவங்களும் மனசு மாறி பணத்தை எடுக்காமல் விட்டு இருக்காங்க” என்கிறார்.

NGMPC22 - 147

இந்த பக்கம் மாயா, அர்ச்சனாவிடம் பூர்ணிமாவை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். “பூர்ணிமா 16 லட்சம் எடுத்துட்டு போயிருக்காங்க பாருங்களேன். நான் எப்படியும் அந்த பணத்தை அவகிட்ட இருந்து வாங்கிடுவேன்.” என்கிறார். இதே மாயா பிரதீப்பிடம் எனக்கு டைட்டில் தான் முக்கியம் பணம் முக்கியமில்லை. ஆகவே 50 லட்சத்தை உனக்கு தந்துவிடுகிறேன். என்று ஒப்பந்தம் செய்து கொண்டதை நாம் மறக்கவில்லை. பணம் என்றதும் மனிதனின் மனநிலை மாறத்தான் செய்கிறது.

அர்ச்சனாவும் மாயாவிடம், “நான் ஏன் பணப்பெட்டியை எடுக்கலை என்றால், இங்க வந்த என் தங்கச்சி என்கிட்ட, நீ ஜெயிக்கனும்னு ஆசை இல்லை ஆனால் இறுதிவரை இருந்துட்டு மக்கள் எப்போ அனுப்பறாங்களோ அப்போ வந்தா போதும்னு சொன்னதனாலதான் நான் இந்த பணத்தை எடுக்கவில்லை “ என்கிறார்.

தினேஷ் பணப்பெட்டியை பற்றி சொல்லும் பொழுது, “நான் இங்க விளையாட வந்த நோக்கமே வேற... ஒரு நல்ல விஷயம் நடக்கவேண்டும் அனைவருக்கும் என்னை பற்றி தெரிந்துக்கொள்ளவேண்டும் என்று நினைத்து தான் வந்தேன். ஆகையால் எனக்கு ஒருகோடி இருந்திருந்தா கூட எடுத்திருக்கமாட்டேன்” என்கிறார்.

NGMPC22 - 147

விஜய் பணப்பெட்டியை பற்றி சொல்லும் பொழுது, “ நான் ஏற்கனவே வெளியில் சென்று வைல்டுகார்ட் மூலம் உள்ளே வந்தவன் ஆகையால், நான் பணப்பெட்டியை எடுப்பது நேர்மையாக இருக்காது” என்கிறார்.

மணி சொல்லும் பொழுது, “நான் இந்த வீட்டில் எத்தனை நாட்கள் சர்வே ஆகுவேன் என்பதை தெரிந்துக்கொள்ளவேண்டும். அதனால் தான் நான் பணப்பெட்டியை எடுக்கவில்லை. என் அம்மா என்னிடம், நீ நல்லா விளையாடு. ஆனா அந்த பணப்பெட்டியை மட்டும் எடுத்துராதேனு சொன்னதால நான் பணப்பெட்டியை எடுக்கவில்லை” என்கிறார்.

விஷ்ணு சொல்லும் போது, “நான் வின்னராக இல்லையென்றாலும், ரன்னராக வரவேண்டும். அதனால் தான் பெட்டியை எடுக்கவில்லை “ என்கிறார்.

ஆக இருக்கும் போது தெரியாத பணப்பெட்டியின் அருமை இல்லாதபொழுது அனைவருக்குமே புரிந்திருந்தது. லேட்டா புரிந்து என்ன செய்வது.. போனது போனது தானே...

பெட்டியை எடுத்துக்கொண்டு சென்ற பூர்ணிமாவை வரவழைத்த கமல், அவரிடம் ”நீங்க பெட்டியை எடுத்துக்கொண்டு போனதற்கு காரணம் என்ன?” என்று கேட்கிறார்.

NGMPC22 - 147

“சார், இந்த ஷோ எண்ட்க்கு வந்தாச்சு, கப் கன்ஃபாமா ஒருத்தருக்கு தான். ஆனா கப்பைவிட எனக்கு முக்கியம், அனுபவமும் படிப்பும். அது கிடைச்ச திருப்தி எனக்கு இருக்கு. என் கண்ணு முன்னாடி பணம் சுத்திகிட்டு இருக்கு, அதை எப்படி விடமுடியும்? 96 நாட்கள் நான் இங்கே இருந்ததற்கான பரிசை நான் எடுத்துக்கொண்டேன்” என்கிறார்.

இப்படி பணப்பெட்டியை வைத்தே பிக்பாஸ் ஒரு வாரம் ஓட்டிய நிலையில் அடுத்து என்ன என்பதை அடுத்த எபிசோட்டில் பார்க்கலாம்..

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com