”என்னை ஏமாற்றிவிட்டார்”.. மாறிமாறி குற்றம்சாட்டும் விஷ்ணு - பூர்ணிமா! தொடங்கியது பணப்பெட்டி சவால்!

மாயாவை 'zero' என்று சொன்ன விஷ்ணு.. தொடங்கியது பணப்பெட்டி சவால்!
பிக்பாஸ்  7
பிக்பாஸ் 7விஜய் டீவி

பிக்பாஸ் 93ம் நாள்!

விஷ்ணு, ”மாயாவும் பூர்ணிமாவும் என்னை மதிப்பதில்லை” என்று மணியிடம் சொல்லி விஷ்ணு வருத்தப்படுகிறார். ”இவங்க உங்கள மதிச்சு உங்களுக்கு என்ன ஆகப்போகுது விட்டு தள்ளுங்க” என்று மணி விஷ்ணுவுக்கு ஆறுதல் கூறுகிறார்.

பிறகு புதுவருட வாழ்த்து தெரிவிக்கும் சமயம் விஷ்ணு, “ நான் ஒரு மிரர் போல யார் எது தருகிறார்களோ அதையே திருப்பி கொடுப்பேன்” என்கிறார். இதை வைத்து மாயாவும் பூர்ணிமாவும் பிக்பாஸ் ரசிகர்களை குஷி படுத்த விஷ்ணுவை கலாய்கின்றனர்.

இதுமட்டுமல்லாமல் மேக்கப் ரூமில் வழக்கம் போல் பூர்ணிமா மாயாவிடம், விஷ்ணு தன்னை ஏமாற்றி விட்டதாகவும், தன்னை வைத்து விஷ்ணு கேம் விளையாடி, ticket to finale சென்றது போலவும், பூர்ணிமா 100 நாளாக முட்டாளாக இருந்தது போலவும் பேசுவது ஏற்புடையதாக இல்லை.

vijay tv

பிறகு பிக்பாஸ் பணப்பெட்டி டாஸ்க் தருகிறார். இதில் போட்டியாளர்கள், தாங்கள் இப்போட்டியில் தொடரப்போவதில்லை/ வந்த வேலை முடிஞ்சு போச்சு/ சில காரணங்களுக்காக இந்த பணம் எனக்கு வேண்டும் என்று நினைத்தால் அப்பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறிவிடலாம் என்று ஒரு ஆஃபர் தருகிறார். பணப்பெட்டியில் ஆரம்ப தொகையாக ஒரு லட்சம் அறிவிக்கப்பட்டிருந்தது.

பூர்ணிமா இன்னும் அமைதியாகாதவராய் விஷ்ணுவை நினைத்து புலம்பிக் கொண்டிருக்கிறார். ’அவரு என்னை யூஸ் பண்ணிகிட்டாரு, நான் பைத்தியகாரி ஆகிட்டேன்’ என்று அரைத்த மாவையே அரைக்கிறார். இது நமக்கு மேலும் மேலும் எரிச்சலை ஏற்படுத்துகிறது.

இந்த பக்கம் விஷ்ணு மணியிடம், “நான் பூர்ணிமாவிடம் ஸிங் ஆனா அவள் சொல்லும் படி நான் கேட்டு நடப்பேன் என்ற ஐடியாவில் தான் மாயா சொல்லி பூர்ணிமா என்னிடம் நட்பாக இருப்பது போல நடித்திருக்கிறார். இதை நான் தெரிந்துக்கொள்ள இத்தனை நாட்கள் ஆகிவிட்டது” என்கிறார்.

இவர்கள் இப்படி பேசிக்கொண்டிருக்கும் சமயம் பணப்பெட்டியின் தொகை 3 லட்சமாக உயர்ந்தது.

அடுத்ததாக பயணம் டாஸ்க் தரப்பட்டது. இதில் ஹவுஸ்மேட்ஸ் வேறொரு ஹவுஸ்மேட்ஸை தேர்ந்தெடுத்து, அவர்கள் பிக்பாஸ் சீசன் 7ல் கடந்து வந்த பாதையில் அவர்கள் செய்த நல்ல, மோசமான செயல்களை பற்றி சொல்லவேண்டும். அது சரி என்றால் மற்ற ஹவுஸ் மேட்கள் agree தவறு என்றால் disagree செய்யவேண்டும் என்றார்கள்.

vijay tv

அர்ச்சனா விஜய் பற்றியும் ,பூர்ணிமா விஷ்ணுவை பற்றியும், பேசுகிறார்கள். இதில் விஷ்ணுவிற்கும் பூர்ணிமாவுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இவர்களுக்கு நடுவில் வந்த மாயாவை விஷ்ணு,”நீ ஒரு zero” என்கிறார்.

அடுத்ததாக மாயா அர்சனாவை பற்றியும், விசித்திரா தினேஷ் பற்றியும், மணி மாயாவை பற்றியும், விஷ்ணு பூர்ணிமாவை பற்றியும் பேசுகிறார். இந்த டாஸ்கில் மாயா வெற்றிப்பெற்றதாக பிக்பாஸ் அறிவித்தார்.

இப்படி மாறி மாறி பேசிக்கொண்டே போட்டியாளர்கள் அன்றைய பொழுதை கடத்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com