பிக்பாஸ்7: “இன்னும் முடியல; ஜனங்க கைதட்டிடாங்கன்னு ரொம்ப ஓவரா பண்ணாத” விஷ்ணுவை எச்சரித்த விசித்திரா!

கமலின் நட்பு அஞ்சலி; விஷ்ணுவுக்கு டிக்கெட் அளிப்பு, போட்டியாளர்கள் சண்டை!
பிக்பாஸ் 7
பிக்பாஸ் 7விஜய் டீவி

பிக்பாஸில் 91ம் நாள்!

கமல் அரங்கத்தில் தோன்றி மக்களிடையே மறைந்த விஜயகாந்திற்கும் அவருக்கும் உண்டான நட்பை இரண்டு வரி சொல்லிவிட்டு அகம் டீவி வழியாக அகத்திற்குள் செல்கிறார். tickets to finale டாஸ்கில் விஷ்ணு வெற்றிபெற்றதற்கான டிக்கெட்டை வழங்குகிறார். பிறகு விளையாட்டை மேற்பார்வை பார்த்த அர்ச்சனா விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார். அதேபோல் முயலாமல் தோற்று முயலை துப்பி தந்ததை பூர்ணிமாவை சுட்டிகாட்டினார். பிறகு போட்டியாளரிடம் கேம் விளையாண்டது குறித்து நகைச்சுவையாக பேசி சென்றார்.

“எல்லோர் கோட்டையையும் கலைச்சீங்க... ஏன் விசித்திராவின் கோட்டையை மட்டும் கலைக்கவில்லை?” என்ற கமல் கேள்விக்கு,

”அந்த கோட்டை தானா கலைஞ்சிடும், நாம கலைக்கணும்னு அவசியம் இல்லை... ஏன்னா அவங்க சேர்க்கை சரியில்லை“ என்கிறார் விஷ்ணு.

விஜய் டீவி

கமல் சென்றதும் இந்த பக்கம் விசித்திரா விஷ்ணுவை பிடித்துக்கொண்டார் “என்னுடைய சேர்க்கை சரியில்லன்னு கமல் சார்கிட்ட சொன்னியே என்ன விஷயம்?

அது வந்து.... அதுவந்து... ஒன்னுமில்லையே...” என்கிறார் விஷ்ணு.

“நீ tickets to finale டிக்கெட்தான் வாங்கியிருக்க... இன்னும் முடியல.... ஜனங்க கைதட்டிடாங்கன்னு ரொம்ப ஓவரா பண்ணாத...” என்று விஷ்ணுவை பிடித்துக்கொண்டார். பிறகு வந்த கமல், ”சிறிய இடைவேளைக்கு பிறகுன்னு போனாக்க... இதே சண்டையை மீண்டும் போடுறீங்களே... கார்டு டாஸ்க்ல ஒரு சிவப்புமார்க் இருந்ததே அதபத்தி கேட்கலையா.. ” என்று பற்றவைத்துவிட்டு கமல் மீண்டும் செட்டுக்குள் போய்விட்டார்.

பற்றவைத்த நெருப்பொன்று பத்தி எரிகிறதே... என்பதாய், கமல் பத்தவைத்த நெறுப்பானது விசித்திரா அர்ச்சனாவிற்கு இடையில் புகைய ஆரம்பித்தது. ”கார்டில் இருந்த மார்க் என்னுடைய நெயில்பாலிஸ் என்று எப்படி நீ கமல் சார்கிட்ட சொல்லமுடியும்?” என்று விசித்திரா அர்ச்சனாவிடம் கேட்கவும், “நான் ஜட்ஜ் எனக்கு சந்தேகப்பட உரிமை இருக்கு” என்று இவர்களுக்குள் சண்டையில் அனைவருமே பங்கு பெற்று ஆளாளுக்கு காச்மூச் என்று சண்டை போட்டுக்கொண்டனர்.

இவர்கள் சண்டையை கண்டு சிரித்தப்படி மீண்டும் அகம் டீவி வழியாக அகத்திற்குள் செல்கிறார்.

"நான் சிறுவனாக இருந்த சமயம் எங்க அண்ணன்கிட்ட why is the fire engine red? ன்னு கேட்டா... எங்க அண்ணன் அதற்கு ஒரு விளக்கம் தருவாறு The fire engine has the motor. motor was invited by English man english man living England. England was ruled by queen Elizabet, there is ship by the name of queen Elizabet. the ship bottom touch by the sea. the sea has fishes, fishes have fin, fins living Russia, Russia has Communist communist had red, that is why the fire engine is red" என்றார். விளக்கம் ரசிக்கும் படியாகதான் இருந்தது.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்விஜய் டீவி

அடுத்து தான் பிடித்த முயலுக்கு 3 கால்லுன்னு சொல்றது யாரு என்ற அவரின் கேள்விக்கு, கிட்டதட்ட அனைவரும் பூர்ணிமாவை சொல்ல... பூர்ணிமாவுக்கு வழக்கம்போல முகம் சுருங்கியது. பிறகு ரவீனவை எவிக்ட் செய்து அனுப்பினார். இது மணிக்கு பேரதிர்சியாக இருந்தது.. எங்க தப்பு நடந்தது என்று எண்ணிக் கொண்டிருக்கிறார். இனி என்ன நடக்க இருக்கிறது என்று அடுத்து பார்க்கலாம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com