பிக்பாஸ் 7: பிக்பாஸ் வீட்டில் நடந்த சம்பவத்தால் அழுதுபுரண்ட போட்டியாளர்கள்

பிக்பாஸுக்கும் கன்டென்ட் கிடைக்கவில்லை, போட்டியாளர்களுக்குள் சுவாரசியமும் இல்லை. ஒன்று அவரவர்களுக்குள் சண்டைப்போட்டுக் கொள்கிறார்கள் அல்லது, ரிலாக்ஸாக அமர்ந்துக்கொண்டு புரளி பேசுகிறார்கள். இதைத்தவிர அவர்கள் வேறெதுவும் செய்ததாக தோன்றவில்லை.
பிக்பாஸ் 7
பிக்பாஸ் 7விஜய் டிவி

பிக்பாஸில் 75-வது நாளில்

காலையில் ஒரு பாட்டை போட்டதும் அவரவர்கள் ஆடுவது எதற்கென்று இன்று வரை தெரியவில்லை. ஓவியா ஆரமித்த இந்த ஆட்டம், இந்த எபிசோட் வரை தொடர்வது அபத்தம். அடுத்ததாக ஒரு டாஸ்க் நடந்தது. இதற்காக நிக்சா கோல்டன் ஸ்டார் என்ற டைட்டிலையும், ட்ராபியையும் பரிசாக விக்ரம் பெற்றுக்கொண்டார்.

எனக்கு புளியோதரை செய்ய தெரியாது.. கூல் சுரேசை கேட்டுதான் புளியோதரை செய்யணும் என்ற சுசித்திராவின் பேச்சை விமர்சித்த கூல் சுரேஷ், அர்ச்சனாவையும் விடவில்லை. அர்ச்சனா இங்கே வந்த சமயம், எனக்கு சமைக்கத் தெரியாதுன்னு சொன்னாங்க, ஆனா அப்புறம் சமைச்சாங்க... அவங்களுக்கு நல்லா சாப்பிடணும், பாட்டு போட்டா டான்ஸ் ஆடணும், விதவிதமா ட்ரஸ் போடணும்.. இந்த ஐடியாலதான் இங்க வந்துருக்காங் என்றார். அதற்கு பிறகு டோமெக்ஸ் டாய்லர் கிளினரின் டாஸ்க் நடந்தது. இந்த டாஸ்க் வெறும் விளம்பரத்திற்காக நடத்தப்பட்டதென்பதால் இதைப்பற்றி அதிகம் விவாதிக்க வேண்டியதில்லை.

விஜய் டீவி

கிச்சனில் குக்கிங் செய்த சமயம், ரவீனா அர்ச்சனாவைப் பார்த்து, ”மெதுவா பேசுங்க” என்று சொல்லி இருக்கிறார். இதில் அர்ச்சனாவுக்கும் ரவீனாவுக்கும் மோதல் உருவானது. அர்ச்சனா வந்ததிலிருந்து இதுவரை கத்திக்கொண்டுதான் இருக்கிறார். இவர் இதுவரை கத்தின எதுவுமே ரவீனாவுக்கு காதுல விழலையா? இப்போமட்டும் கத்தும்போது மெதுவா பேசுங்கன்னு சொன்னதற்கு காரணம், மணியின் கேப்டன்சிதான் என தோன்றுகிறது. மணி கேப்டனாக இருந்தாலும், ஆட்சி என்னமோ ரவீனாதான். அது பிக்பாஸ் பார்க்குறவங்களுக்கு தெரியும். இந்த பக்கம் அர்ச்சனா, மணியிடம் சொல்லி வருத்தப்படுகிறார்.

சொல்லப்போனால் பிக்பாஸ் இந்த முறை சரிவை சந்தித்துள்ளது என்றே சொல்லலாம். ஏனெனில் பிக்பாஸுக்கும் கன்டென்ட் கிடைக்கவில்லை. போட்டியாளர்களுக்குள் சுவாரசியமும் இல்லை. ஒன்று அவரவர்களுக்குள் சண்டைப்போட்டுக் கொள்கிறார்கள். அல்லது, ரிலாக்ஸாக அமர்ந்துகொண்டு புரளி பேசுகிறார்கள். இதைத் தவிர அவர்கள் வேறெதுவும் செய்ததாக தோன்றவில்லை. இதில் பிக்பாஸ் கன்டென்ட் என்று ஒரு கேமை வைத்து நம்மை முகம் சுளிக்கவைத்ததுதான் இன்னும் வேதனை. அதாவது ரவீனா அவரது மைக்கை உடைத்துவிட்டார். அதற்கு பதில் பிக்பாஸும் வேற மைக் தந்து விட்டார். இது முடிந்த கதை. இதை ஒரு கன்டென்ட் ஆக்கி விளையாட வைத்தது வேடிக்கையான கதை.

திடீரென்று நிக்சனை கன்பெக்‌ஷன் ரூமிற்கு அழைத்த பிக்பாஸ், ஒரு ட்ரேயில் ரவீனாவின் மைக்கை வைத்து, “நிக்சன், இன்று ஒரு துயரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ரவீனா மைக் இயற்கை எய்தி இருக்கிறது. இந்த மைக் போன்று வேறு எந்த மைக்கிற்கும் இந்த நிலைமை வரக்கூடாதுன்னு வேண்டிகிட்டு இந்த மைக்கை லிவ்விங் ஏரியால வச்சு எல்லோரும் அஞ்சலி செலுத்தணும்” என்றதும், பிக்பாஸ் கன்டென்ட் இல்லாமல் குழம்பி போய் இருக்காரு என்பதை நல்லாவே புரிஞ்சுக்கலாம். இதில் எல்லோரும், இறந்த மைக்கிற்கு அழுது இறுதி அஞ்சலி செலுத்தியது சிரிப்பைத்தான் உண்டு பண்ணியது. வேறு எதுவும் பெரிசாக சொல்லத்தோன்றவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com