பிக்பாஸ் 7 : உலக அழகியாக மாயா; ரவுடியாக அர்ச்சனா; பிக்பாஸ் கொடுத்த கெட்டப்பில் மனமுடைந்த அர்ச்சனா!

"விக்ரம் சைலண்டா 5 ஸ்டாரை வாங்கிட்டான், அவன் டைட்டில் வின்னர் ஆவதற்கு சான்ஸ் அதிகம். அமைதியா இருப்பவங்களை நம்பவே கூடாது”
பிக்பாஸ் 7
பிக்பாஸ் 7vijay tv

பிக்பாஸ் 73ம் நாள் கூல் சுரேஷ் நடத்திய டிராமா...

பூர்ணிமாவும், விஷ்ணுவும் மீண்டும் நண்பர்களாக இணைந்தவுடன், விஷ்ணு பூர்ணிமாவிடம் "விக்ரம் சைலண்டா 5 ஸ்டாரை வாங்கிடான், அவன் டைட்டில் வின்னர் ஆவதற்கு சான்ஸ் அதிகம். அமைதியா இருப்பவங்களை நம்பவே கூடாது” என்று புலம்பிக்கொண்டு இருக்கிறார்.

மறுபக்கம், கூல் சுரேஷ் அவரை நாமினேஷன் செய்தது பற்றி மற்றவர்களிடம் புலம்பிக் கொண்டிருக்கிறார்.” யாரும் கவலைப்படாதீங்க, நானே போய்டுவேன். நா சும்மா இருந்தாலும் என் சுழி சும்மா இருக்காது கவலைப்படாதீங்க” என்கிறார்.

முதல் நாள் விசித்திரா தன்னை நாமினேட் செய்ததற்காக அவருடன் பிரச்னையில் ஈடுபட்டது அனைவரும் அறிந்ததே. இதில் ’யாரும் என்னை நாமினேட் செய்யவேண்டாம்; நானே வீட்டை விட்டு போய் விடுவேன்’ என்று கூறியவர் மறுநாள் காலையில் சொன்னது போலவே காமெடி ஒன்றை செய்தார்.

மறுநாள் காலை 7 மணி அளவில் விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்த கூல் சுரேஷ் திடீரென்று உள்ளே சென்று தனது மைக்கை கழற்றி தூர எரிந்துவிட்டு ஒரு ஸ்டூலை எடுத்து வந்து சுவரின் அருகில் போட்டவர் அதன் மீது ஏறினார். சுவரானது மிகவும் உயரமாக இருக்கிறதா என்பதை செக் பண்ணும் விதமாக அதன் மீது ஏறியதை பார்த்த மணி அங்கே ஓடி வந்தார். ”என்னண்ணா பண்றீங்க... கீழே இறங்குங்க...” என்றதும் கூல் சுரேஷ் தனது நாடகத்தை முடித்துக்கொண்டு மணியின் உதவியுடன் கீழே இறங்கி வந்தார்.

vijy tv

கூல்சுரேஷின் சேட்டைகளைப் பார்த்த பிக்பாஸ் அவரை கன்பெஷன் ரூமுக்கு வர சொல்லி, “கூல் சுரேஷ், என்ன ஆச்சு என்ன ட்ரை பண்றீங்க? நீங்க செய்யற மாதிரி விஷயங்கள் நடந்திருந்தா அதன் விளைவுகள் உங்களுக்கே விபரீதமா இருந்து இருக்கும். இதையெல்லாம் தாண்டி இப்படி முயற்சி செய்தா இத்தனை நாள் நீங்கள் பட்ட கஷ்டமெல்லாம் வீணாக போய் இருக்கும்” என்றவரிடம்,

“நான் பொழைக்கத் தெரியாத ஆளு சார்” என்று அழுகிறார்.

பிக்பாஸ் அவரிடம், ” நீங்க இப்படி எல்லாம் செய்து வெளியில போயிடீங்கன்னா வெளிலேயும் உங்கள பொழைக்கத் தெரியாத ஆளுன்னு தான் சொல்லுவாங்க... எல்லோருக்கும் இது போன்ற வாய்ப்பு கிடைக்காது” என்றதும்,

“ சரி சார் இனி இதுமாதிரி செய்ய மாட்டேன். முடியல சார் என்கிறார்” பிக்பாஸும் அவரை வார்னிங் செய்து அனுப்புகிறார்.

அடுத்ததாக ஒரு டாஸ்க் நடந்தது. இதில் போட்டியாளர் அனைவருக்கும் பிக்பாஸ் BB கரன்ஸி நோட்டை தந்து இந்த டாஸ்கில் உங்கள் மனம் கவர்ந்தவர்களுக்கு இதை கொடுக்குமாறு சொன்னார். இதில் வெற்றி பெற்ற மூவர் க்ராண்ட் பினாலே டாஸ்கில் வெற்றி பெற்றவராக கருதப்படுவார்கள் என்று கூறியதும், டாஸ்க் ஆரம்பித்தது. இதில் மணி சூர்யா கெட்டப்பையும், மாயா ஜீன்ஸ் பட ஐஸ்வர்யாவாகவும், விக்ரம், வடிவேலாகவும், தினேஷ் ரஜினியாகவும், இப்படி பலர் பல தினுசில் சுற்றிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கான பாடல் ஒலித்ததும் வந்து நடனமாடினர்.

vijay tv

உண்மையிலேயே அனைவரும் அவர்களுடைய ஃபர்பாமென்சை அழகாகவே செய்திருந்தனர். இதில் குறிப்பாக நிக்சனின் நடனம் அசத்தல். இதில் அர்ச்சனாவுக்கு திமிறு படத்தில் வரும் ரவுடி பெண்ணின் கெட்டப். இந்த கெட்டப்பை பார்த்த அர்ச்சனா.... அனன்யாவிடம் ஒரே அழுகை. எனக்கு மட்டும் ரவுடி கெட்டப் என்று. பிக்பாஸ் ப்ளான் பண்ணிதான் செய்துள்ளதாகவே நமக்கும் தோன்றியது. இதில் ரவீனாவுக்கு சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் வரும் ஜெனிலியா கெட்டப். கன கச்சிதம். பூர்ணிமாவுக்கு, பிரியாமணி கெட்டப்.

மணியின் ”ஏத்தி, ஏத்தி என் நெஞ்சில் தீயை ஏத்தி” பாட்டுக்கு நடனம் அருமை. இப்படி அனைவரும் நடனத்தில் சாதித்தாலும், பணத்தை அடுத்தவர்களிடம் கொடுத்து ஏமாந்து விட்டார்கள். இதில் பூர்ணிமாவுக்கும், மாயாவுக்கும் சிறு பிரிவு ஏற்பட்டது. சிலரிடம் சுத்தமாக கையில் பணமில்லை என்று தெரிந்ததும், பிக்பாஸுக்கு செம அப்செட். இந்த வீட்டார் விதிமுறைகளை மதிப்பதில்லை, நான் உங்களை ரொம்ம நம்பினேன். நீங்க உங்க இஸ்டத்துக்கு மாத்திக்கலாம் என்பதற்கு எதுக்கு டாஸ்க்.. எதுக்கு ரூல்ஸ்.. எதுக்கு கரன்ஸி? என்று தனது மனவருத்தத்தை சொல்லியதுடன் நிகழ்ச்சியை நிறைவு செய்தார். இனி என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்..

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com