பிக்பாஸ் 7 : ‘மண்டியிடுங்கள் தந்தையே’ புத்தக பரிந்துரை; ’என்னதான் பண்றீங்க..’ சலித்துக் கொண்ட கமல்!

ஞாயிற்றுகிழமையான நேற்றும் கமல் வருகைக்காக காத்திருந்தனர் பிக்பாஸ் குடும்பத்தினரும், பிக்பாஸ் ரசிகர்களும்.
பிக்பாஸ் 7
பிக்பாஸ் 7PT

பிக்பாஸ் 70 வது நாள்!

ஞாயிற்றுகிழமையான நேற்றும் கமல் வருகைக்காக காத்திருந்தனர் பிக்பாஸ் குடும்பத்தினரும், பிக்பாஸ் ரசிகர்களும்.

வழக்கம்போல் கமல் கம்பீர நடையில் மேடை ஏறி, ”அடிப்படை உரிமை என்பது எல்லோருக்கும் பொதுவானது அதை மறுத்துவிட்டால், கலாச்சாரம் மொழி, இவற்றை இல்லாமல் செய்துவிடும். ஒரு மனிதனின் உரிமை மறுக்கப்பட்டாலும் அதற்கு துணிந்து குரல் கொடுக்கவேண்டும். உரிமையை மறுப்பது சட்டப்படி குற்றம். இதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். இந்த உரிமை மீறல் இந்த வீட்டிலேயும் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. அது என்னவென்று பேசிவிடலாம்” என்று அகம் டீவி வழியே அகத்திற்குள் சென்றார் கமல்.

NGMPC22 - 158

அனைவரும் அமர்ந்திருக்க, முதல் வெடியாக ”இந்த வீட்டில் எண்டர்டெயிண்மெண்ட் இருக்கா?” என்று மாயா ஆராய்ச்சி மணி அடித்து எழுப்பிய கேள்வியை கமல் கேட்கிறார்.

இதற்கு தினேஷ் , ”அவங்க அவங்க க்ரூப், க்ரூப்பா எண்டர்டெயிண்மெண்ட் பண்ணிக்கிறாங்க சார்” என்கிறார். கூல் சுரேஷ் பேசும்பொழுது ”இந்த வீடு எண்டர்டெயிண்மெண்டா தான் இருந்தது. ஆனா எண்டர்டெயிண்மெண்ட்னா என்னனு தான் தெரியலை” என்கிறார். ஏதோ காமெடி பண்ணுவதைப்போல, பிறகு அர்ச்சனா, மணி, ரவீனா இப்படி அனைவரும் தான் கொட்டாவி விட்டதைக்கூட எண்டர்டெயிண்மெண்ட் லிஸ்டில் சேர்த்து எண்டர்டெயிண்மெண்ட் பண்ணியதாக சொன்னதும், நமக்கு சிரிப்பு வந்தது.

கமல் சார் நாங்க இங்க 24 * 7 நிகழ்ச்சி பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். சனி, ஞாயிறு நீங்கள் வரும் நாட்களை தவிர இந்த வீட்டில் எண்டர்டெயிண்மெண்ட் வேற எதுவும் இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை. எப்பொழுதும், அர்ச்சனா, விஷ்ணு, நிக்சன், மாயா பூர்ணிமா, விசித்திரா, தினேஷ் என்று இப்படி ஆளாளுக்கு சண்டைப்போட்டு இந்த 70 நாட்களை ஓட்டியது போல தான் தெரிந்தது.

கமலின் இந்த கேள்விக்கு கேப்டனாக விஷ்ணு எழுந்து, “எங்க சார் இவங்கள காலைல எழுப்பறத்துக்குள்ள பெரும் பாடாக இருக்கு, இதுல ஒரு பாட்டு போட்டா கூட ஆட மாட்டேங்கிறாங்க.....” என்கிறார். (ஏதோ இவர் தினமும் எழுந்து டான்ஸ் ஆடுறமாதிரி).. இதையும் கமல் விஷ்ணுவிடமே கேட்டும் விட்டார். அதற்கு விஷ்ணு, “எனக்கு டான்ஸ் ஆடுறது பிடிக்காது “ என்கிறார். அப்புறம் எப்படி மற்ற போட்டியாளர்களை இவர் குறை கூற முடியும்? இது முரண்நகையாக தான் இருந்தது.

vijay tv

இதன் நடுவில் நிக்சன் எழுந்து “fun பண்ணலாம் என்று நினைத்த சமயம், அர்ச்சனா அவரை வெறுப்பேத்தும் விதமாக, மூளை இல்லாதவர்கள் எல்லாரும் முட்டை சாப்பிடுங்க இல்ல கத்திரிக்கா ஜூஸ் போட்டு குடிங்க மூளை வளரும் என்று சொன்னாங்க” என்று கமலிடம் கூறவே.. கமல் நம்மை பார்த்து ”எனக்கு முட்டை பிடிக்கும்” என்கிறார். அப்போ இவருக்கு மூளை அதிகமாக இருக்கு என்கிறாரா?... ஆக மொத்தம், fun பண்ணலாம் என நினைத்தவர்களை மற்றவர்கள் தடுத்தனர் என்பது தான் உண்மை .

அடுத்ததாக கேப்டன்சி பற்றி கேட்டதற்கு அனைவரும் விஷ்ணு மீது அதிருப்தியை வெளியிட்டனர். மாயா, விஷ்ணு கேப்டன்சியை பற்றி கூறும்பொழுது, நானே என் கேப்டன்சியை நல்லா செய்யல. இவரு என்னவிட மட்டமா பண்ணினாரு, என்று விஷ்ணுவை டோட்டல் டாமேஜ் பண்ணிவிட்டார். விஷ்ணுவும் தன் மீதான குற்றசாட்டு எதற்கும் பதிலளிக்காமல் தலையை கவிழ்த்தப்படி கப்சிப்பாக அமர்ந்திருந்தார். இதே நேரம் கமல் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் அனைவரையும் ஒரு கை பார்த்திருப்பார்.

vijay tv

ஆனாலும் கமலும் விடாகண்ணன் கொடா கண்ணனாக விஷ்ணுவிடம், “கேப்டன்சில ஏதாவது நல்லதாவது பண்ணி இருக்கீங்களா?. ஒரு கேப்டனா எல்லாருக்கும் சாப்பாட்டை போதிய அளவு கொடுத்தீங்களா?” என்று கேட்டதற்கும், “நான் நல்லதும் பண்ணலை சாப்பாடும் தரலை, நான் நல்ல கேப்டன்சி இல்ல... எல்லா தப்பும் என்மீது தான். என்று முழுவதும் சரண்டர் ஆவது போல கமலிடம் சொல்லவும்” இதற்கு மேல இவர கேட்டு எந்த பிரயோசனமும் இல்லை என்று நினைத்து, விஷ்ணுவை ஐய்யோ பாவம் என்று விட்டுவிட்டது போல தோன்றியது நமக்கு.

புத்தக பரிந்துரை:

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் கிட்டதட்ட 150 புத்தகங்களுக்கு மேல் எழுதியவர். ஒரு பிரஸ் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதில் அச்சிடப்பட்ட புத்தகங்கள் வெள்ளத்தில் நனைந்து அவரை கண்ணீரில் தள்ளியுள்ளது. ஒரு எழுத்தாளானுக்கு தக்க சமயத்தில் கைக்கொடுக்கவேண்டியது வாசகர்களாகிய நமது கடமை . ஆகையால் அவர் எழுதிய ‘மண்டியிடுங்கள் தந்தையே’ என்ற புத்தகத்தை பரிந்துரைக்கிறேன். என்று கூறி, இந்தவாரம் எனிமினேஷன் கிடையாது என்று சொல்லி பிக்பாஸ் வீட்டிலிருந்தவர்களுக்கு நிம்மதியை கொடுத்து அடுத்தவாரம் சந்திக்கலாம் என்று விடைப்பெற்று சென்றார்.

கமல் சொன்னது போல் இனியாவது போட்டியாளர்கள் தங்களுக்குள் இருக்கும் வன்மத்தை கைவிட்டு வீட்டிற்குள் சண்டையை வளர்க்காமல் fun செய்து நமக்கு எண்டர்டெயிண்மெண்ட் தருவார்களா? பொருத்திருந்து பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com