பிக்பாஸ் 7 - Day 69: ”சொருகிடுவேன்னு சொன்னீங்களே” கமல் கொடுத்த சவுக்கடி; அரண்டுபோன போட்டியாளர்கள்!

நாம் எதிர்பார்த்தபடி கமல் நேற்றைய எபிசோடில் அனைவரின் தவறுகளையும் வறுத்தெடுத்து அவரவர் கைகளில் தந்துவிட்டார். அது என்ன என்பதை பார்க்கலாம்.
கமல்
கமல்விஜய் டீவி

69ஆவது நாள்!

நாம் எதிர்பார்த்தபடி கமல் நேற்றைய எபிசோடில் அனைவரின் தவறுகளையும் வறுத்தெடுத்து அவரவர் கைகளில் தந்துவிட்டார். அது என்ன என்பதை பார்க்கலாம்.

கமல் எண்ட்ரி:

கமல் வந்ததும் மிக்ஜாம் புயல் காரணமாக பாதிப்படைந்த மக்களுக்கு உறுதுணையாக நின்று ஆதரவு கரம் நீட்டியவர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், துன்பப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களுக்கு உதவவேண்டிய இந்நேரத்தில் அரசாங்கத்தை குறை கூறவேண்டாம் என்றும், உதவிய பின் அவர்களிடம் கேள்வி கேட்கலாம் என்றும் வலியுறுத்தியதுடன், அகம் டீவி வழியாக அகத்துக்குள் சென்றார்.

கையில் உரிமைக்குரலுடன் அர்ச்சனா நிற்பதை பார்த்த கமல், “கேள்விகளை நீ கேட்கிறாயா? அல்லது நான் கேட்கட்டுமா? “ என்று திருவிளையாடல் வசனம் போல் கேட்கவும், அர்ச்சனா அமர்ந்து கொண்டார்.

நிக்சனை கேள்வி கேட்ட கமல்:

நிக்சன் நீங்க சொருகிடுவேன்னு சொன்னீங்களே… எங்க? இங்கையா என்று வயிற்றையும், இங்கையா என்று நெஞ்சையும், அல்லது இங்கையா” என்று கண்ணை (வேட்டையாடு விளையாடு படம் மாதிரி) காட்டினார்.  கமலின் இச்செயலால் அரண்டு போனவர்கள் நிக்சன் மட்டும் அல்ல, வீட்டிலிருந்த அனைவரும்தான். அத்தனை ஆக்ரோஷம் தெரித்தது அவரின் முகத்தில். அத்துடன் நிற்காமல் Strike card யும் நிக்கனுக்கு எதிராக உயர்த்தினார் கமல். அப்பொழுது அர்ச்சனா கையை தட்டினார் பாருங்க…. “டேய் நிக்சா… தொக்கா மாட்டீனியா” என்று அவர் சொன்னதை மீண்டும் நமக்கு நினைவு படுத்தும் விதமாக இருந்தது.

vijay tv

இந்த வீட்டில் இதே போன்று பேசக்கூடாத, சென்சார் செய்யக்கூடிய வார்த்தைகளான, ”அடிச்சு காலி பண்ணிடுவேன், வச்சு செஞ்சுடுவேன், ஆட்டிகிட்டே வராங்கஇந்த வார்த்தைகள் பேசியவர்களுக்கும்,  கார்டு தர வேண்டியிருக்கு, எதற்காக இந்த வார்த்தையை பேசினீங்க காரணம் என்ன? என்று கமல் கேட்கவும், தினேஷ் எழுந்து, “நான் பூர்ணிமாவை பார்த்து தான் ஆட்டிகிட்டு வராங்கனு சொன்னேன்.. இது எங்க ஊர் மதுரை பக்கம் சொல்லும் வார்த்தை” என்று மழுப்பினார்.

விஷ்ணுவை பார்த்து, “நீங்க கூட வார்த்தையால வச்சு செஞ்சுடுவேன்னு சொன்னீங்க எதுக்கு சொன்னீங்க? அர்ச்சனா  நீங்க கூட இந்த வார்த்தையை அடிக்கடி உபயோகபடுத்துறீங்க..”  என்று அர்ச்சனாவை சொன்னதும்,

அர்ச்சனாவுக்கு ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற தர்மசங்கடத்துக்குள்ளானார். அது வந்து… வந்து … என்று இழுத்ததைப்பார்த்த கமல், “இதுக்கு உங்களுக்கு அர்த்தம் சொல்லவேண்டிய அவசியம் இருக்காது, உங்களுக்கே தெரியும். அதனால இனிமே இந்த வார்த்தைகளை பயன்படுத்தாதீங்க” என்று நடுமண்டையில் ஓங்கி ஒரு குட்டு வைத்து உட்காரவைத்தார்.

இன்னொரு முறை உங்க குரல் கூடினாலோ அல்லது வார்த்தைகளில்  வயலன்ஸ் கூடினால் strike cardன் நிறம் மாறும்” என்று நாம் எதிர்பார்த்ததை, எதிர்பார்க்காமல் சொல்லிவிட்டார் கமல்.

மாட்டிக்கொண்ட மணி!

நிக்சனுக்கும் அர்ச்சனாவுக்கும் சண்டைவந்த சமயம், நிக்சனின் ட்ரூ கலர் வெளியில் தெரிந்ததாக சொல்லியிருப்பார் மணி. இதை வார்த்தை தவறாக பட்டதால் இதை பற்றி மணியிடமே கேட்டார் கமல். “ட்ரூ கலர்… அப்படீன்னா என்ன?”

மணியும், “அது வந்து… அது வந்து…” என்பதை போல் இழுக்க, தினேஷிடம் மறுபடி திரும்பினார். தினேஷ் நீங்க சொல்லுங்க “என்ன பௌலத்தா பேசறீங்க…ன்னு நீங்களும் சொல்லி இருந்தீங்க… இந்த ட்ரூ கலர், பௌலத் … இது என்ன பாஷை, யாரு பேசுவாங்க? என்று ஒன்றுமே தெரியாதது போல் கேட்கவும், பொறிக்குள் சிக்கிக்கொண்ட எலிமாதிரி திணறிசென்னை பாஷை சார்” என்றார் தினேஷ்.

vijay tv

அவர் திணறுவதை பார்த்த கமல், “நீங்க நார்த் மெட்ராஸை சொல்றீங்களா?” என்கிறார்.

ஆமாம் சார்… அது தான் “ என்றதும்

முகத்தில் அனல் பறக்க வார்த்தைகளை விசிறி அடித்தார் கமல், “அப்படி பிராண்ட் குத்த நீங்க யாரு? எல்லா பகுதிகளிலும் நல்லவனும் இருக்கான் கெட்டவனும் இருக்கான், நிக்சன் ஏரியாவிலிருந்து ஒரு கலைஞன், படித்தவன் வருவான் என் ஏரியாவிலிருந்து ஒரு ரவுடியும் வருவான். அதனால இந்த இடம் இப்படி என்று பிராண்ட் குத்த நான் அனுமதிக்கமாட்டேன். ட்ரூ கலர்னு சொன்னதற்கும் பிராண்ட் தான் காரணம். இப்படி பேசியதற்கு என்னை விட நிக்சனுக்கு தான் கோபம் அதிகமாக வரவேண்டும். ஆனா அந்த கோபத்தை வேறுவிதமா காட்டி முன்னேறி வரணும், நீ போடுற குல்லா எனக்கு பொருந்தாதுன்னு சொல்லணும். நிக்சன் சொருகுற ஏரியாலேர்ந்து வந்தார்னா… நா சீவுர ஏரியாலேர்ந்து வந்தேனா? இப்படி பேச நான் அனுமதிக்கமாட்டேன். இது சமதளம், அதன் மையத்தில் நான் இருப்பேன்” என்றதும் அரங்கம் அதிர்ந்தது.

மாட்டிக்கொண்ட விஷ்ணு, அர்ச்சனா!

அடுத்ததாக கமல் விஷ்ணுவிடம், “விணுஷா மேட்டர் என்ன?” என்றார்.

அது வந்து… என்று இழுக்கும் சமயம், அர்ச்சனா எழுந்து, விணுஷா வை பத்தி நிக்சன் முன்னாடி இப்படி பேசினார்ல… அதை சண்டையின் போது அவருக்கு நியாபகப்படுத்தினேன். ஐஷூ கூட வெளியில போனதுக்கு நிக்சன் தான் காரணம். நிக்சன் இப்படி பெண்களை வர்ணிச்சு பேசினது தப்புன்னு புரியவச்சேன்.  என் கண் பார்வையில் நிக்சனுக்கு ”கெட்டவன் என்ற பெயர் ரொம்ப பிடிக்கும். என்னை க்ரிஞ்ச்ன்னு சொல்லாதீங்க… கெட்டவன்னு சொல்லுங்க… “ என்று நிக்சன் சொன்னதாக புது கதை ஒன்றை அர்ச்சனா எடுத்து வைக்க…

அப்படியா நிக்சன்… உங்களுக்கு கெட்டவன் என்ற வார்த்தை பிடிக்குமா?” என்று கேட்கிறார்.

நா அப்படி ஏதும் சொல்லலை சார்.. அவங்களா நினைச்சுக்கறாங்க” என்று நிக்சன் சொல்ல… அர்ச்சனா பேசினது உண்மையிலேயே க்ரிஞ்ச்சா தான் இருந்தது.

vijay tv

அர்ச்சனாவுக்கு பதிளளித்த கமல், ”நாலு வாரமா வினுஷாவை பத்தி பேசாத நீங்க இப்ப பேச காரணம் என்ன? வினுஷாவே, ஐஷூவே இப்போ இங்கே இல்லை. இல்லாத ஒரு நபரை காரணம் காட்டி பேசுவது என்பது நிக்சன் சொன்னதை காட்டிலும் ஒருபடி கீழே தரம் தாழ்ந்த விஷயம். உங்களுக்கு தேவையான  பொழுது உங்க சீட்டு சேராத பொழுது அவங்களை ஒரு ஜோக்கராக பயன்படுத்தி உங்க ஆட்டத்தை ஆடுகிறீர்கள்” என்று அர்ச்சனாவை ஃபுல் டேமேஜ் செய்து விட்டார் கமல்.

vijay tv

அர்ச்சனாவின் முகத்தில் லிட்டர் லிட்டராக அவமானம் வழிந்ததை நாம் பார்க்கமுடிந்தது.

அடுத்ததாக பொம்மலாட்டம் டாஸ்கிற்கு வந்தார். இதில் விசித்திராவை பார்த்து விஷ்ணு த்தூ.. என்று துப்பியதற்காக கண்டித்தார். அர்ச்சனா விசித்திராவை மட்டம் தட்டி பேசியதற்கு அர்ச்சனா பொம்மை தக்காளி சட்னி நிறைந்த பொம்மை என்று மறைமுகமாக ஒரு குத்தையும் கொடுத்தார். அத்துடன் கூல் சுரேஷிடம், உங்களுக்கு விளையாட்டு என்ன என்பதே தெரியவில்லை. இப்படி இருந்தால் மக்கள் உங்களை வெளியேற்ற வாய்ப்பு இருக்கு. ஆகவே விளையாட்டு என்ன என்பதை தெரிந்துக்கொண்டு ஆடுங்கள் என்றார்.

இப்படி ஆளுக்கு ஒரு பஞ்ச் மூக்குடைய கொடுத்து விட்டு நாளை சந்திக்கலாம் என்று சென்று விடுகிறார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com