பிக்பாஸ் 7: கமல்ஹாசன் 'strike card' தருவதற்கு காரணம் என்ன? - ஒரு அலசல்

நேற்று பிக்பாஸ் மிகவும் விறுவிறுபாகவே இருந்தது. காரணம் கமல்ஹாசன். சென்ற வாரம் விஷ்ணுவின் கேப்டன்சியில் எந்த வாரமும் இல்லாத நிலையில் நாள்தோறும் சண்டை நடந்தது என்றே கூறலாம்.
Bigg Boss 7
Bigg Boss 7vijay tv

கமல் 'strike card' தருவதற்கு காரணம் என்ன? ஒரு அலசல்

நேற்று பிக்பாஸ் மிகவும் விறுவிறுப்பாகவே இருந்தது. காரணம் கமல்ஹாசன். சென்ற வாரம் விஷ்ணுவின் கேப்டன்சியில் எந்தவாரமும் இல்லாத நிலையில் நாள்தோறும் சண்டை நடந்தது என்றே கூறலாம்.

விசித்திராவின் வருத்தம்

முக்கியமாக பொம்மலாட்டம் டாஸ்க். இதில் விஷ்ணு பொம்மையாகவும், அதை ஆட்டுவிக்கும் குழந்தை விக்ரமாகவும் இருக்க, விக்ரம் தனது பொம்மையை, விசித்திராவிடம் சென்று தூ… என்று துப்பசொல்லி கட்டளையிடுகிறார். இது தான் சமயம் என்று விஷ்ணுவும் விசித்திராவிடம் சென்று, காரி காரி துப்புகிறார். இது ஒருபுறம் நடக்க, பூர்ணிமா நிக்சன் பொம்மையைக்கொண்டு விசித்திராவை போடி என்று சொல்லசொல்லி கட்டளை இடவும், நிக்சன் பொம்மையும் விசித்திராவிடம் சென்று போடி, போடி என்கிறது.

அந்த பக்கம், தினேஷ் தனது ஆரூட பொம்மையான அர்ச்சனாவை விசித்திராவுக்கு ஆரூடம் சொல்ல சொல்லி அனுப்பினார். ஆரூட பொம்மையோ விசித்திரா அடுத்தவங்க கிட்ட நல்லா கேம் ஆடுவாங்க.. அடுத்தவங்களை ட்ரிக்கர் பண்ணுவாங்க என்று தான் சொல்ல நினைத்தை எல்லாம் இது தான் சமயம் என்று சொல்லவும், உண்மையிலேயே மனதுடைந்து தான் போனார் விசித்திரா… இதை பற்றி கமல் கேட்பாரா என்று அவர் மட்டுமல்ல நாமும் எதிர்பாத்து தான் காத்திருந்தோம்.

நிக்சன் - விஷ்ணு பிரச்சனை!

அதே போல் நிக்சனுக்கும், விஷ்ணுவுக்கும் ஒரு சண்டை நிகழ்ந்தது. அதற்கு ஆரம்பமே, கோல்ட் ஸ்டார் டாஸ்க் தான். இதில் விஜய் சரியாக சமயம் பார்த்து விஷ்ணுவின் மீது கல் எரிந்தார். அதாவது, விஷ்ணு ஆரம்ப வாரத்தில் பூர்ணிமாவைப் பற்றி தரக்குறைவாக விஷ்ணுவிடம் பேசிய வார்த்தை என்ன என்பதை பூர்ணிமாவுக்கும், மற்ற போட்டியாளார்களும் தெரிந்துக்கொள்ளும் வகையில் சொல்லவும், அதில் மனதுடைந்து போயிருந்தார் பூர்ணிமா. இதை தவிர, தினேஷ் வேறு சொல்லக்கூடாத வார்த்தையால் பூர்ணிமாவை திட்டியும் இருக்கிறார். இது ஒருபுறம் இருக்க.. விஷ்ணு, விஜய் மீது ஏக கோபத்தில் இருக்கிறார். 

தான் நல்லவன் தான் என்று நிரூபிக்கச் செய்ய நிக்சனை கூப்பிட்டு, தனது கேப்டன்சி பற்றிய கருத்தை கேட்கிறார். இதில் நிக்சனுக்கும் விஷ்ணுவிற்கும் சண்டை வர, இவர்களின் சண்டைக்கு நடுவில் புகுந்த அர்ச்சனா, தன் முன்பகை காரணமாக நிக்சனை எதிர்கிறார். இதில் நிக்சனுக்கும் அர்ச்சனாவிற்கும் பயங்கர சண்டை எழுகிறது. இதில் நிக்சன் “சொருகிடுவேன்” என்ற வார்த்தையை பயன்படுத்தியதால், இது குறித்து உரிமைக்குரல் உயர்த்தப்போவதாக அர்ச்சனா தினேஷிடம் சொல்ல… தினேஷும், கூல்சுரேஷும், அர்ச்சனாவிற்கு சப்போர்ட் செய்கிறார்கள். 

இத்தனை பிரச்சனையை கமல் எப்படி கையாளப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பு எல்லோர் மனதிலும் இருந்தது. இதை கமல் எப்படி எதிர்கொண்டார் என்பதை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com