‘என்ன நயன்தாரா பக்கத்துல பூர்ணிமா நிக்குறாங்க’- அன்னப்பூரணி ட்ரெய்லரில் நோட் செய்த பிக்பாஸ் ஆடியன்ஸ்

சத்தமே இல்லாமல் நயன்தாராவின் படத்தில் நடித்திருக்கிறார் பிக்பாஸ் பூர்ணிமா. படத்தில் நயன்தாராவின் தோழியாக அவர் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
நயன்தாராவுடன் பூர்ணிமா
நயன்தாராவுடன் பூர்ணிமாPT

தற்பொழுது நடந்துக்கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 7ல் கலந்துக்கொண்டு பார்வையாளார்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தவர்களில் பூர்ணிமாவும் ஒருவர். பூர்ணிமாவும் மாயாவும் மக்களின் வெறுப்பை அதிகம் சம்பாதித்து இருந்தாலும், மாயாவை விட்டு பூர்ணிமா விலகி இருந்தால் மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளும் மனோபாவத்தில்தான் இருக்கிறார்கள்.

மாயா, பூர்ணிமா
மாயா, பூர்ணிமா

இந்நிலையில், கடந்த வாரம் நடந்து முடிந்த பூகம்பம் டாஸ்கில் தான் கடந்து வந்த பாதையை கூறிய பூர்ணிமா இந்தப்பொண்ணா இப்படி என்று பார்வையாளாரின் புருவத்தை உயர வைத்திருப்பார். ஏனெனில் அவர் சொன்ன விஷயம் அப்படி.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பூர்ணிமா வேலைக்காக சென்னை வந்ததும் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்துள்ளார். பிறகு ஒரு வருடம் முடிவதற்குள் அவர் வேலையை உதறிவிட்டதாக கூறியிருப்பார்.

பூர்ணிமா அந்த டாஸ்கில் மென்பொருள் நிறுவனத்திலிருந்து வெளியே வந்ததும், தனது குடும்பத்திற்கு கட்டாயம் பணம் அனுப்பவேண்டிய சூழலில் இருந்ததாகவும் அதற்காக வேலை தேடி தெருத்தெருவாக திரிந்ததாகவும், இறுதியில் 12 ஆண்கள் இருக்கும் ஒரு வீட்டில், இவரின் மேல் பரிதாபம் கொண்டு ஆண் நண்பர்கள் இவருக்கு தங்க இடம் கொடுத்ததாகவும். அங்கிருந்தபடி யூடியூபில் வீடியோவை அப்லோடு செய்து சம்பாதித்ததாகவும் கூறுவார். இதன் நடுவில் இவரை போலிஸார் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்ய வந்த பொழுது, இவர் யூடியூபர் பூர்ணிமா என்று தெரிந்ததும், “மேடம் நாங்க உங்கள் ரசிகர்” என்று கூறி கைது செய்யாமல் சென்றதாக கூறியிருப்பார். மேலும் யூடியூப் மூலம் சம்பாதித்து, அவர் வீட்டிற்கும், இவரின் செலவுக்கும் போக மிச்சம் இருந்த சொச்ச பணத்தில் ஒரு காரும், ஒரு வீட்டையும் வாங்கியதாக கூறியிருந்தார்.

பூர்ணிமா
பூர்ணிமா

இதை கேட்டவர்கள் பூர்ணிமாவின் உழைப்பை நினைத்து பெருமைக்கொண்டனர். பூர்ணிமா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைவதற்கு முன் நயன்தாரா நடித்து டிசம்பர் 1ம் தேதி திரைக்கு வர இருக்கும் அன்னப்பூரணி என்ற படத்தில் துணை நடிகையாக நடித்திருக்கும் விவரம் இப்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அதாவது, அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன் தாரா நடித்துள்ள திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருவதையொட்டி நேற்று படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இந்த ட்ரெய்லரின் ஒரு காட்சியில் நயன்தாரா உடன் இருக்கிறார் பூர்ணிமா. இதனை பார்த்தது பிக்பாஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி. சத்தமே இல்லாமல் நயன்தாராவின் படத்தில் நடித்திருக்கிறாரே என்று. படத்தில் நயன்தாராவின் தோழியாக நடத்திருப்பதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அன்னப்பூரணி பட ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. படம் வெற்றியடையும் பட்சத்தில், அதில் நடித்துள்ள பூர்ணிமாவின் புகழும் மேலும் ரீச் ஆக வாய்ப்புள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com