பிக்பாஸ்7 - Day 68: ’பூர்ணிமாவ பத்தி நீ என்ன பேச்சு பேசுன’ விஷ்ணு பேசியதை புட்டு புட்டு வைத்த விஜய்!

நேற்று நடந்த பிரச்சனையை சரிசெய்வதற்கும், வீட்டிலுள்ள இறுக்கமான சூழ்நிலையை கலைக்கவும் முயற்சித்த மாயா ”குச்சி குச்சி ராக்கம்மா “ பாட்டை பாடுகிறார்.
பிக்பாஸ் 7
பிக்பாஸ் 7விஜய் டீவி

பிக்பாஸ் 68ம் நாள்

நேற்று நடந்த பிரச்சனையை சரிசெய்வதற்கும், வீட்டிலுள்ள இறுக்கமான சூழ்நிலையை கலைக்கவும் முயற்சித்த மாயா ”குச்சி குச்சி ராக்கம்மா “ பாட்டை பாடுகிறார். மாயாவுக்கு ஒரு சபாஷ் போடலாம். அருமையான பாட்டை அழகாக பாடினார்.

பிறகு இந்த சீசனுக்கான கடைசி கோல்ட் ஸ்டார் டாஸ்க் ஆரம்பித்தது. இதில் யார் கோல்ட் ஸ்டார் வாங்கவேண்டும் என்று அவர்களே தீர்மானிக்க வேண்டும். இதில் மாயாவுக்கு விருப்பமில்லை என்று முன்பே பூர்ணிமாவிடம் சொல்லிவிட்டார்.

ரவீனா, நிக்சனிடம், ”நீயும் இந்தவாரம் வெளில போய்டுவ... உனக்கு இந்த ஸ்டார் வேண்டாம்“ என்று சொல்ல அங்கிருந்து நிக்சனும் வெளியேறிவிடுகிறார். இதில் விஜய் விஷ்ணுவிடம், “இந்த ஸ்டார் நீ வாங்குவது எனக்கு விருப்பம் இல்ல.. ஏன்னா நீ என்னிடம் முதல் வாரம் பூர்ணிமாவை பற்றி பேசியது நினைவு உள்ளதா?” என்று கேட்கவும்,

என்ன பேசினேன்? சொல்லுங்க” என்று விஷ்ணு கேட்டதும் சொல்ல ஆரம்பிக்கிறார்.

இவ எல்லாம் ஒரு பொண்ணாடா? இவள எவண்டா கட்டிப்பான்? இவ அடுத்த வீட்டுக்குப்போய் என்னடா பண்ணுவா? அப்படீன்னு சொன்னதோட நிக்காம, அவங்கள வச்சு நீங்க கேம் ஆடுறீங்க” என்று விஷ்ணுவை பற்றி புட்டு புட்டு வைக்கவும், பூர்ணிமா ஆடிதான் போனார் என்பதை அவர் முகம் காட்டிக்கொடுத்தது.

விஜய் டீவி

சமீப நாட்களாக விஷ்ணுவும் பூர்ணிமாவும் மிகவும் க்ளோஸாக பழகி வருவது தெரிந்த செய்தி தான் என்றாலும், இவர்களின் நட்பு மாயாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருந்தது. அதனால் தான் பூர்ணிமாவுக்கு எதிராக நாமினேட் செய்தார். இப்பொழுது விஜய் பேசிய இப்பேச்சு யாருக்கு மகிழ்ச்சி தருதோ இல்லையோ மாயாவுக்கு மகிழ்ச்சியை தந்தது. விசிலடித்து எஞ்சாய் செய்தார். ஆனால் பாவம் பூர்ணிமா அழுதுவிடும் நிலையில் இருந்தார்.

இதில் விக்ரம் வெற்றிபெற்று 5 கோல்ட் ஸ்டாரை வென்றார். இனி அடுத்து என்ன நடக்க இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com