BIGG BOSS 7 DAY 28 | 5 புதியவர்கள்.. 2 எவிக்‌ஷன்.. மறுபடியும் முதல்ல இருந்தா? சூடுபிடிக்கும் ஆட்டம்!

கடந்த வாரம் பிக்பாஸின் முதல் குறும்படமும் ஒளிபரப்பட்டதால் இனி அடுத்தடுத்த வாரங்களில் அதுவும் அதிகரிக்கலாம்.
kamalhassan
kamalhassanbigg boss

பிக்பாஸ் சீசன் 7 தமிழில் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாதம் முடியப்போகிறது. இதையடுத்து நேற்றைய தினம் வைல்ட்-கார்ட் எண்ட்ரி நடைபெற்றது. எப்போதும் பிக்பாஸில் ஒரு வீடு கான்செப்ட் இருக்குமென்பதால் ஓரிருவரே வைல்ட்-கார்டில் புதிதாக உள்ளே செல்வர். ஆனால் இந்தமுறை பிக்பாஸ் வீடு, ஸ்மால் பாஸ் வீடு என 2 வீடுகள் இருந்த காரணத்தால், ஒன்று இரண்டல்ல... 5 போட்டியாளர்கள் உள்ளே செல்கின்றனர் என தெரிவித்திருந்தார் கமல்.

இதனால் அவர்கள் யார் யார் என்ற எதிர்பார்ப்பும் அதிகமிருந்தது. அந்த எல்லா கேள்விகளுக்கும் நேற்றைய எபிசோடில் விடை கிடைத்துள்ளது.

BIGG BOSS 7 wild card entries
BIGG BOSS 7 wild card entriesBIGG BOSS

அதன்படி பிக்பாஸ் நேற்றைய எபிசோடில், 5 போட்டியாளர்கள் வைல்ட்-கார்ட் கண்டெஸ்ட்டண்டகளாக சென்றுள்ளனர். அவர்கள் - சின்னத்திரை நடிகர் தினேஷ், விஜே அர்ச்சனா, ஆர்.ஜே. பிராவோ, பட்டிமன்ற பேச்சாளர் அன்னபாரதி, பாடகர் கானா பாலா ஆகியோர் சென்றுள்ளனர்.

இவர்களில் தினேஷ், தற்போது விஜய் டிவியில் கிழக்கு வாசல் சீரியலில் நடித்துவருகிறார். தினேஷ், கடந்த சீசனில் உள்ளே சென்றிருந்த நடிகை ரச்சிதாவின் முன்னாள் கணவரும்கூட.

வி.ஜே.அர்ச்சனா, விஜய் டிவியின் ராஜா ராணி சீசன் 2-வில் வில்லியாக நடித்து பெயர் பெற்றவர். அர்ச்சனா, இந்த சீசன் பிக்பாஸ் தொடக்கத்திலேயே உள்ளே சென்றிருக்க வேண்டியவரென சொல்லப்படுகிறது. இருப்பினும் சில காரணங்களால் அது தள்ளிபோய், இப்போது சென்றுள்ளாராம்.

BIGG BOSS 7 DAY 28
BIGG BOSS 7 DAY 28

ஆர்.ஜே.பிராவோ, இன்ஸ்டா - யூட்யூப்களில் இன்ஃப்ளூயென்சர். அதுபோக துபாயில் ரேடியோவிலும் பணியாற்றி வந்துள்ளார். அன்னபாரதி, மதுரை முத்துவின் பட்டிமன்ற குழுக்களில் பிரபலமானவர். கோவில்பட்டியை பூர்வீகமாக கொண்ட இவரை, மதுரை முத்துவின் முக்கிய நிகழ்ச்சிகளில் தவறாமல் பார்க்கலாம். இவர்களுடன் பிரபல கானா பாடகர் பாலாவும் பிக்பாஸ் வீட்டில் இணைந்துள்ளார்.

கலகலப்புக்கு அர்ச்சனா, பேச்சுக்கு அன்னபாரதி, பாட்டுக்கு கானா பாலா, ஃபன்னுக்கு பிராவோ, டஃப் கொடுக்க தினேஷ் என களைகட்டியது பிக்பாஸ் ஹவுஸ்!

இவர்கள் ஐவரும் ஒரே வாரம் வந்ததை அடுத்து, இந்த வாரம் 2 எவிக்‌ஷன் பிராசஸஸ் நடந்தது. அதன்படி வினுஷா மற்றும் யுகேந்திரன் வெளியேற்றப்பட்டனர்.

BIGG BOSS 7 DAY 28
BIGG BOSS 7 DAY 28

முன்னதாக சனிக்கிழமை நடந்த டாஸ்க்கில் கடந்த வாரம் சிறப்பாக செயல்பட்ட பூர்ணிமா, ஐஷூ, ஜோவிகா இடையே கேப்டன்ஸி டாஸ்க் நடந்திருந்தது. அதில் பூர்ணிமா வெற்றிபெற, இனி இந்த வாரம் கேப்டனாகவும் பூர்ணிமாவே நீடிக்க இருக்கிறார்.

கடந்த வாரம் பூர்ணிமா கண்டெஸ்டண்டாக மட்டுமன்றி கேப்டனாகவும் சிறப்பாக செயலாற்றியதால், சக போட்டியாளர்கள் தொடங்கி கமலும் அவரை பாராட்டித் தள்ளினார். குறிப்பாக ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்தவர்களுக்கு உட்கார இருக்கை கொடுத்ததற்காக, அமோக பாராட்டை பெற்றார் கேப்டன் பூர்ணிமா! சக மனிதரை சரிசமமாய் அமர வைத்தற்காக அவருக்கு கமல் சார்பில் எக்ஸ்ட்ராவாக ஒரு ஸ்டார் கொடுக்கப்பட்டதும் பாராட்டுக்குரியதே!

எவிக்‌ஷன் போக, ஆரம்பித்த நாள் போல மொத்தம் 18 போட்டியாளர்களுடன் நேற்றைய தினம் முடிவுக்கு வந்தது.

கடந்த வாரம் சனிக்கிழமை பிக்பாஸின் முதல் குறும்படமும் (விஷ்ணு - அக்‌ஷயா - ஐஷூ பற்றியது) ஒளிபரப்பட்டதால் இனி அடுத்தடுத்த வாரங்களில் குறும்படங்கள் அதிகரிக்குமென எதிர்பார்க்கலாம். இந்த சீசனில் ‘ஸ்ட்ராட்டஜி’ போட்டு விளையாடும் போட்டியாளர்கள்தான் அதிகமென்பதால் இனி இந்த வாரம் புதுப்போட்டியாளர்களுடன் ஆட்டம் நிச்சயம் களைகட்டும்!

Kamalhassan
KamalhassanBIGG BOSS 7 DAY 28

அதிலும் புதிதாக உள்ளே சென்றுள்ளவர்களுக்கு, வெளியே உள்ள நிலவரமும் புரிந்திருக்கும் என்பதால், அவர்கள் சற்று சூதானமாக விளையாடக்கூடும். அப்பறம் என்ன.... ‘ஆரம்பிக்கலாங்களா?’ மோட் தான் இந்த வாரம்! என்ன நடக்குதுன்னு பாப்போம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com