’நீங்கள் பிக்பாஸ் வீட்டைவிட்டு சென்றதும் முதல் வேலையாக என்ன செய்வீங்க?’ போட்டியளர்கள் சுவாரஸ்ய பதில்

”விஷ்ணு ஒரு கோழைபயல், அவன் பிக்பாஸ் முடிஞ்சதும் ஊரை விட்டு ஓடிப்போய்விடுவான்” - மாயா
பிக்பாஸ் 7
பிக்பாஸ் 7விஜய் டிவி

பிக்பாஸ் டாஸ்க் ஒன்றை அறிவித்து இருந்தார். அது என்னவென்றால், நீங்கள் பிக்பாஸ் வீட்டை விட்டு சென்றதும் முதல் வேலையாக என்ன செய்வீர்கள்? என்பது தான். அதற்கு மாயா, “நான் ஒரு படம் சைன் பண்ணிட்டு வந்து இருக்கேன். அது எப்போ ஸ்டார்ட் ஆகுதுன்னு செக் பண்ணணும். அப்புறம் லோகேஷ் அண்ணாகிட்ட ஒரு கதை கொடுத்துட்டு வந்திருக்கேன் அது படிச்சீங்களான்னு கேட்கணும்” என்கிறார்.

விஜய் சொல்லும் போது, “வியர்க்க வியர்க்க உடற்பயிற்சி செய்யணும், பிறகு கோவிலுக்கு போகணும் “ என்கிறார்.

விஷ்ணு சொல்லும் போது, “நண்பர்களிடம் சென்று நான் தலைகுனியும் படி ஏதேனும் செய்தேனா? என்று கேட்பேன் என்கிறார்.

விஜய் டிவி

தினேஷ் சொல்லும் போது, “இந்த ஷோவுக்கு வந்ததற்கு ஒரு காரணம் ஒன்னு இருக்கு அத முதலில் பார்ப்பேன்” என்கிறார்.

மணி சொல்லும் போது, “பிள்ளையார் கோவில் போகணும்” என்கிறார்.

அர்ச்சனா, “எங்க டாடி, மம்மியை பார்க்கணும்; ஆசை தீர எனது குழந்தைதனத்தை காட்டுவேன்” என்கிறார். இது ஒருபுறம் இருக்க, அக்‌ஷயா வந்ததிலிருந்து மாயாவிடம் ஒரு மாற்றம் ஏற்படுகிறது.

அக்‌ஷயாவும் மாயாவும் விஷ்ணுவை திட்டியே தீர்கின்றனர். மாயா விஷ்ணுவை ”அவன் ஒரு கோழைபயல், அவன் பிக்பாஸ் முடிஞ்சதும் ஊரை விட்டு ஓடிப்போய்விடுவான்” என்கிறார்.

அடுத்ததாக பயங்கர பில்டப்புடன் கூல் சுரேஷும், விக்ரமும் வீட்டிற்குள் வருகிறார். கூல் சுரேஷ் ”வெல்டன் மை பாய்” என்று கத்தோ கத்து என்று கத்துகிறார். அனைவரையும் முக்கியமாக பெண்களை கட்டி அணைத்து தூக்கிக்கொள்கிறார். அடுத்ததாக ப்ராவோ எண்ட்ரியாகிறார்.

விஜய் டிவி

பிறகு எல்லோரும் வந்தகதை போனகதை பேசியபிறகு பிக்பாஸ் மிட்வீக் எவிக்சன் பிராஸஸ் வைக்கிறார்.

விஜய் டிவி

இதில் ஆறு போட்டியாளார்களும் பிக்பாஸ் சொல்லும் ஒரு இடத்திற்கு சென்று கதவை சாத்திக்கொள்ள வேண்டும். பிக்பாஸ் மறுபடி டோர் ஓபன் என்று சொன்னதும் கதவை திறந்துகொண்டு போட்டியாளார்கள் வெளியே வரவேண்டும். இதில் ஒரு கதவு மட்டும் திறக்காது, அந்த போட்டியாளர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிடுவார் என்கிறார். அனைவரும் ஒரு வித பதற்றத்துடன் இருந்தது நன்றாகவே தெரிந்தது. விஷ்ணு கதவு மட்டும் கடைசியில் திறந்தது.

விஜய் டிவி

அதற்குள் அவர் அழுதுவிடும் தோரணையில் இருந்தார். ஆனால், இந்த டாஸ்கில் விஜய் இருந்த அறையின் கதவு திறக்கப்படாததால் அவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். மீத முள்ள ஐந்து போட்டியாளர்களும் இறுதிகட்டத்திற்கு செல்கிறார்கள்.

அடுத்து என்ன நடக்க இருக்கின்றது என்பதை நாளை பார்க்கலாம்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com