பிக்பாஸ் 7: எவிக்சனில் வெளியேறினார் கூல் சுரேஷ்; கலகலப்பாக பேசிய கமல்ஹாசன்! 76ம் நாளில் நடந்ததென்ன?

பிக்பாஸில் கமல் இந்த வாரம் அனைவரிடமும் மிகவும் அமைதியாக அன்பாகவே பேசினார். அன்பே சிவம் என்பதை உணர்த்தினார்.
பிக்பாஸ்7
பிக்பாஸ்7விஜய் டீவி

பிக்பாஸ் நாள் 76

பிக்பாஸில் கமல் இந்த வாரம் அனைவரிடமும் மிகவும் அமைதியாக அன்பாகவே பேசினார். அன்பே சிவம் என்பதை உணர்த்தினார். சனிக்கிழமை அவர் வந்ததும் எண்ணூரில் எண்ணை கசிவு பற்றி பேசினார். ஏற்கனவே இவர் வடசென்னை பற்றி பேசியது குறிப்பிடத்தக்கது. ஆக இவரின் கவனம் வடசென்னையின் மீது இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளமுடிகிறது.

தினேஷுக்கும், விசித்திராவிற்கும் அடிக்கடி தகராறு வருவது தெரிந்த செய்தி. இருவரும் சக்கரைக்கு சண்டைப் போட்டுக்கொண்டனர். ’கண்டெண்ட் எதுவும் கிடைக்காத போது சக்கரைக்கும் சண்டை வரலாம்’ என்பது போன்று இருந்தது.

மணி கூல் சுரேஷ் தனது சூட்கேஸில் பதுக்கி வைத்திருந்த சில கேட்பரிஸ் சாக்லேட்டை மணி எடுத்து விடுகிறார். இது சுரேஷுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ஆனால், கேப்டனிடம் சண்டைக்கு சென்றால் தனக்கு அவமானமாக போகும் என்பதால், தனது கோபத்தை அங்கு சாப்பிட்டுக்கொண்டிருக்கும் அர்ச்சனாவிடம் காட்டுகிறார். “நீங்க எல்லாரும் சாப்பாட்டுக்கு வழி இல்லாம பஞ்சத்துல இருக்கீங்களா?.. வீட்ல சாப்பிடுவதை விட நீங்க இங்க நல்லாதான் சாப்பிடுறீங்க... இங்க பாருங்க அர்ச்சனா கூட எவ்வளவு தயிர் ஊற்றி சாப்பிடுதுன்னு” என்று அவர் தெரியாமல் எடுத்து வைத்த சாக்லேட்டுக்கு நியாயம் கற்பிக்கிறார்.

விஜய் டீவி

கமல் வருகிறார் சிரித்தப்படி அகம் டீவி வழியாக அகத்துக்குள் சென்றவர் கையோடு மணியின் நடனத்தை பாராட்டுகிறார். கூல் சுரேஷ் சுவர் ஏறியதை கண்டிக்கும் சமயம் சுரேஷ் கண்களை கசக்குகிறார். “நீங்க மேலே ஏறி போயிருந்தா பரவாயில்ல... எங்காவது கீழே விழுந்து, உடம்புல எலும்பு முறிவு ஏதாவது ஏற்பட்டு இருந்தா, என்ன மாதிரி 38 எலும்புமுறிவு ஏற்பட்டா?” என்று அவர் உடம்பில் உள்ள எலும்பு முறிவின் எண்ணிக்கையை பதிவிட்டார்.

விஷ்ணுவும், பூர்ணிமாவும் ஆட வேண்டிய பாடலுக்கு, மணியும் பூர்ணிமாவும் ஆடியதை, ”காதலா காதலா படத்தில் ஜோடி மாறியது போல இங்கேயும் ஜோடி மாறி போச்சு” என்று விஷ்ணுவை கமல் கலாய்த்தது உண்மையிலேயே ரசிக்க தகுந்த ஒன்று. திருவிளையாடல் சிவாஜி, நாகேஷ் கூட்டணிப்போல விஜய், மணி கூட்டணி இருந்தது என்று விஜய்யையும் பாராட்டினார். இப்படி அனைவரையும் பாராட்டியவர் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் அனைவர் செய்த தப்பையும் சுட்டி காட்டினார்.

பிறகு இந்தவார எவிக்சனில் கூல் சுரேஷ் வெளியேறினார். இனி அடுத்து என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com