‘அதர்வா போல் இருக்கிறேனா?’ - பிக்பாஸ் தர்ஷன் மகிழ்ச்சி

‘அதர்வா போல் இருக்கிறேனா?’ - பிக்பாஸ் தர்ஷன் மகிழ்ச்சி

‘அதர்வா போல் இருக்கிறேனா?’ - பிக்பாஸ் தர்ஷன் மகிழ்ச்சி
Published on

அதர்வாவுடனான சந்திப்பு குறித்து ‘பிக்பாஸ்’ நடிகர் தர்ஷன் தனது வெகுநாள் கனவை நிறைவேற்றி கொண்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ‘பிக்பாஸ்’. இந்த நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் மூலம் மிகப் பிரபலமானவர் தர்ஷன். இந்த நிகழ்ச்சியின் மூலம் உலக அளவில் இவருக்கு நிறைய ரசிகர்கள் கிடைத்தனர். ஆனாலும் அவர் இறுதியாக வெளியேற்றப்பட்டார். இதன் பிறகு தர்ஷன் இப்போது பிசியான நடிகராக வலம் வருகிறார். மேலும் பல பொது நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வருகிறார். 

இந்நிலையில், ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் இவர் கலந்து கொண்டுள்ளார். அதில் நடிகர் அதர்வாவும் கலந்து கொண்டார். பல நாள்களாக தர்ஷன் பல சமூக வலைத்தள பேட்டிகளில் தன்னை அதர்வா போல இருப்பதாக பலர் கூறுவதாக குறிப்பிட்டிருந்தார். ஆகவே அவரை ஒத்த தோற்றத்தில் இருக்கும் அதர்வாவுடன் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் பெரிய மகிழ்ச்சியில் மிதக்கிறார் தர்ஷன். 

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தர்ஷன், அதர்வாவுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பார்த்து பல ரசிகர்கள்  ‘நாங்கள் இருவரும் இரட்டையர்கள் போல் உள்ளோம்’ எனக் கருத்திட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com