\
’ஆரவ் - ராஹெய்’ ஜோடிக்கு டும்! டும்! டும்! திருமணத்தில் பங்கேற்ற பிக் பாஸ் பிரபலங்கள்

’ஆரவ் - ராஹெய்’ ஜோடிக்கு டும்! டும்! டும்! திருமணத்தில் பங்கேற்ற பிக் பாஸ் பிரபலங்கள்

’ஆரவ் - ராஹெய்’ ஜோடிக்கு டும்! டும்! டும்! திருமணத்தில் பங்கேற்ற பிக் பாஸ் பிரபலங்கள்
Published on

பிக்பாஸ் சீசன் 1 டைட்டில் வின்னரும், நடிகருமான ஆரவிற்கும், நடிகை ராஹெய்விற்கு இன்று திருமணம் நடந்தது. 

பிக் பாஸ் சீசன் 1 டைட்டில் வின்னராக அறியப்பட்டவர் ஆரவ். பிக்பாஸ் மூலம் பிரபலமான அவர் தமிழில் , சைத்தான், மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்டப்படங்களில் நடித்தார். இவருக்கும் தமிழில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜோஷ்வா படத்தில் நடித்த நடிகை ராஹெய்க்கும் இன்று கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளோடு திருமணம் நடைபெற்றது.

இத் திருமணத்தில் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்களான பாடலாசிரியர் சினேகன், நடிகைகள் காயத்ரி ரகுராம், பிந்து மாதவி, ஆர்த்தி, சுஜி, நடிகர் ஹரிஷ் கல்யாண் உள்ளிட்டோரும், இயக்குனர்கள் சேரன், கே.எஸ்.ரவிக்குமார்,விஜய், ரஞ்சித் ஜெயக்கொடி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். கடந்த ஒரு வருடமாக ஆரவிற்கும், ராஹெய்க்கும் திருமண பேச்சு வார்த்தை நடைபெற்று வந்த நிலையில் அவர்களுக்கு இன்று திருமணம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com