\
’’பச்சை நிறமே.. பச்சை நிறமே..’: கிராமத்து கெட்டப்பில் சாக்‌ஷி அகர்வால் - புகைப்படங்கள்!

’’பச்சை நிறமே.. பச்சை நிறமே..’: கிராமத்து கெட்டப்பில் சாக்‌ஷி அகர்வால் - புகைப்படங்கள்!

’’பச்சை நிறமே.. பச்சை நிறமே..’: கிராமத்து கெட்டப்பில் சாக்‌ஷி அகர்வால் - புகைப்படங்கள்!
Published on

பசுமையான கிராமத்துப் பின்னணியில் எடுக்கப்பட்ட நடிகை சாக்‌ஷி அகர்வாலின் போட்டோ ஷூட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

பிக்பாஸ்’ சீசன் 3 போட்டியில் கலந்துகொண்டு பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால். தமிழில் ராஜா ராணி, காலா, விஸ்வாசம் உள்ளிட்ட சில படங்களிலும் கன்னடத்தில் இரண்டு படங்கள் என நடித்திருந்தாலும் பிக்பாஸ் மூலம்தான் பிரபலமானார்.

தற்போது புரவி என்ற படத்திலும் எஸ்.ஏ சந்திரசேகர், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடிக்கும் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், பச்சை பசேலென்ற வயல்வெளிகளில்… கண்ணைப்பறிக்கும் மல்டிகலர் புடவையில்… கிராமத்துப் பெண் கெட்டப்பில்… கூடை நிறைய சாமந்தி பூக்களுடன் இருக்கும் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து 'தமிழ்நாட்டின் தெற்குப் பகுதியில் எடுத்தது’  சாக்‌ஷி அகர்வால் குறிப்பிட்டுள்ளார்.

 ‘பூக்களே சற்று ஓய்வெடுங்கள்.. அவள் வந்துவிட்டாள்’… என்று ரசித்து பதிவிட்டு, சாக்‌ஷியின் புகைப்படங்களை வைரலாக்கி வருகிறார்கள் நெட்டிசன்கள்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com