ஓவியாவை ஏன் பிடிக்கிறது?.. ஜூலி மேல் ஏன் வெறுப்பு?.. என்ன சொல்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்

ஓவியாவை ஏன் பிடிக்கிறது?.. ஜூலி மேல் ஏன் வெறுப்பு?.. என்ன சொல்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்

ஓவியாவை ஏன் பிடிக்கிறது?.. ஜூலி மேல் ஏன் வெறுப்பு?.. என்ன சொல்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்
Published on

#SaveOviya, ஓவியா பேரவை என தொலைக்காட்சி நிகழ்ச்சிப் பிரியர்களிடையே பிரபலமாகி வருகிறார் நடிகை ஓவியா. தமிழில் வித்தியாசமான முயற்சி என்பதால் முதலில் கவனம் ஈர்க்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ஓவியா மீதான அன்பு நேயர்களிடையே அதிகரித்துவருகிறது. இதன் பின்னணியில் உள்ள உளவியல் காரணங்கள் என்ன?

ஆட்டோ டிரைவர் தொடங்கி, பூக்கட்டும் பெண்கள், கல்லூரி மாணவிகள் வரை ஓவியாவுக்காக குரல் கொடுக்கிறார்கள். பிக்பாஸ்‌ நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் இடம்பெற்றுள்ள போதும் ஓவியாவுக்கான வரவேற்பு அதிகம் இருக்கிறது. ஓவியாவின் குணம், அவரது வெளிப்படைத்தன்மை, குழந்தைத்தனம் எ‌ன ஒவ்வொரு அசைவையும் கவனித்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் பரபரக்கின்றன.

ஓவியா ஒரு போட்டியாளர் என்பதை மீறி, அவருக்குள், தங்களின் குணங்களை அடையாளம் கண்டுகொள்வது ஒரு வகை எனில், அவரைப்போல நிஜவாழ்க்கையில் தங்களால் முழுமையாக இருக்க முடியவில்லை என்ற ஏக்கமும் அவரை பிடிப்பதற்கான ஒரு காரணம் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் பிந்துமாதவி புது வரவாக வந்துள்ள நிலையில் ஓவியா தனது ரசிகர்ளை ‌தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்‌ற தவிப்பும் ரசிகர்களிடையே இருப்பதே யதார்த்தம்.

தொடர்ந்து சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருடைய பிரியத்தையும் ‌தக்க வைக்கும் ஓவியாவிற்கு ‘சேவ் ஓவியா’ என சமூக ஊடகங்கள் குரல் கொடுக்கின்றன. அடக்கப்படுப‌வர்கள் மேல் வரும் பரிதாபமும், ஒடுக்க நினைப்பவர்கள் மேல் வரும் பாசமுமே மக்களை ஈர்த்துள்ளது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com