\
புதிய போட்டியாளராக்க நடிகையை தேடும் பிக் பாஸ்!

புதிய போட்டியாளராக்க நடிகையை தேடும் பிக் பாஸ்!

புதிய போட்டியாளராக்க நடிகையை தேடும் பிக் பாஸ்!
Published on

பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்து வருகிறது. என்டிஆர் நிகழ்ச்சியை அற்புதமாகவும், திறமையாகவும் நடத்தி வருவதால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரேட்டிங் அதிகரித்து வருகிறது.

தெலுங்கில் பல சேனல்கள் இருந்தபோதும் பிக்பாஸ் நிகழ்ச்சியால் மா தொலைக்காட்சி முதலிடம் பிடித்துள்ளது. ஆனாலும் பிக்பாஸ் வீட்டில்  உள்ள போட்டியாளர்கள் மந்தமாகவும், பிரபலமாகவும் இல்லாததால் விறுவிறுப்பு ஏற்படவில்லை என பார்வையாளர்கள் கூறி வருகின்றனர். சமீபத்தில் புதிய போட்டியாளராக நடிகை திக்‌ஷா பந்த் பிக்பாஸ் வீட்டிற்கு வந்திருக்கிறார். அவர் கவச்சியாகவும், அழகாகவும் இருந்த போதும் பிரபலமானவர் இல்லை. இதனால், கவர்ச்சியான, பிரபலமான போட்டியாளர்களை அழைத்து வரவேண்டும் என சமூக வலைதளங்களிலும் இ- மெயில் மூலமும் பல்லாயிரக்கணக்கானோர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனால் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி நிர்வாகிகள் புதிய போட்டியாளராக பிரபலமான நடிகையை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கொண்டுவர முயற்சி மேற்கொண்டுள்ளனர். இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் அந்த நடிகை பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய இருப்பதாக கூறப்படுகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com