\
போதையில் விமானப் பெண்ணிடம் தகராறு....பிக்பாஸ் நடிகர் மீது புகார்

போதையில் விமானப் பெண்ணிடம் தகராறு....பிக்பாஸ் நடிகர் மீது புகார்

போதையில் விமானப் பெண்ணிடம் தகராறு....பிக்பாஸ் நடிகர் மீது புகார்
Published on

ஹிந்தியில் சல்மான்கான் நடத்தும் பிக்பாஸ் சீசன் 6வது போட்டியில் பங்கேற்றவர் போஜ்புரி நடிகரான நிராஹுவா. இவர் போதையில் விமானப் பணிப்பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.

லண்டனில் நடைபெற்ற போஜ்புரி திரைப்பட விழாவில் பங்கேற்க அவர் தனது நண்பருடன் லண்டன் விமானத்தில் பயணம் செய்துள்ளார். அப்போது அவர் மது போதையில் விமானப்பணிப்பெண் ஒருவரிடத்தில் தவறாக நடந்து கொள்ள முயன்றதாக கூறப்படுகிறது.

அந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் இது பற்றிக் கூறுகையில், ‘முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான நடிகர் நிராஹுவா போதையில் தன்னிலை மறந்து காணப்பட்டார். விமானப் பணிப்பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்த அவர், ஆக்ரோஷமாகக் கத்தியதுடன், முரட்டுத்தனமாக நடந்து கொண்டார். லண்டன் விமான நிலையத்தில் இதுகுறித்து சம்பந்தப்பட்ட விமானப் பணிப்பெண் புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து தனது தவறுக்கு நிராஹுவா மன்னிப்புக் கேட்டுக் கொண்டதால் அவர் விடுவிக்கப்பட்டார்’ எனக் கூறினார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com