சொன்னபடி கேளு; சொல்லுறது பாஸ்; பிக்பாஸ் ப்ரோமோ 2 வெளியிட்டுள்ள கமல்ஹாசன்

சொன்னபடி கேளு; சொல்லுறது பாஸ்; பிக்பாஸ் ப்ரோமோ 2 வெளியிட்டுள்ள கமல்ஹாசன்
சொன்னபடி கேளு; சொல்லுறது பாஸ்; பிக்பாஸ் ப்ரோமோ 2 வெளியிட்டுள்ள கமல்ஹாசன்

தமிழகத்தின் பிரபலமான பிக்பாஸ் சீசன் 4 ப்ரோமோ வீடியோவை நடிகர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ளார்

 தமிழகத்தில் வெற்றியடைந்த நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. கொரோனா ஊரடங்கால் சின்னத்திரை ஷூட்டிங்குகள் கடந்த நான்கு மாதங்களாக தடைப்பட்டிருந்தது. சின்னத்திரை சங்கத்தினர் கோரிக்கை வைக்கவே தமிழக அரசு ஷூட்டிங் நடத்திக்கொள்ள அனுமதி வழங்கியது. இந்நிலையில் பலரையும் ஈர்த்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ஒளிபரப்பாகவுள்ளது.

அதற்கான, முதல் ப்ரோமோ வீடியோ கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதில், கமல்ஹாசன் ’இதோ நான் வேலைக்கு வந்துட்டேன். வேலையை ஆரம்பிக்கலாமா?’ என்று மாறுபட்ட கெட்டப்பில் வந்து ப்ரோமோ செய்தார்.

இந்நிலையில், இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் ’சொன்னபடி கேளு: சொல்லுறது பாஸ்’ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ’சிங்காரவேலன்’ படத்தில் கமல்ஹாசன் நடித்த ’சொன்னபடி கேளு மக்கர் பண்ணாதே’ பாடலை வேறு விதமாக ரீமேக் செய்துள்ளார்கள். ’மூனு வருஷமா பரிச்சயமான இந்தக் குரல். இப்போ உங்களுக்குள்ளும் ஒளிக்க ஆரம்பிச்சிடுச்சி’ என்று கெத்தாக சொல்கிறார் கமல்ஹாசன்.

ஏற்கனவே இந்தியிலும் தெலுங்கிலும் பிக்பாஸ் தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com