\
பிக் பாஸ் வீட்டிற்குப் புது வரவு

பிக் பாஸ் வீட்டிற்குப் புது வரவு

பிக் பாஸ் வீட்டிற்குப் புது வரவு
Published on

தெலுங்கு பிக் பாஸ் வீட்டில் புதிதாக ஒரு நடிகை சேர்ந்திருக்கிறார்.

தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஜூனியர் என்டிஆர் நடத்தி வருகிறார். 


இதில் பங்கேற்ற கட்டி கார்த்திகா, சம்பூர்னேஷ் பாபு, முமைத்கான் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் பாடகியான மது ப்ரியாவும் வெளியேற்றப்பட்டுள்ளார். அடுத்து அர்ச்சனா, ஹரி தேஜா ஆகியோரும் வெளியேற்றப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகை தீக்‌ஷா பந்த் பிக்பாஸ் வீட்டில் புதிதாக இணைந்துள்ளார். தீக்‌ஷா பந்த் 2012 ஆம் ஆண்டு ரச்சா படத்தில் அறிமுகமானவர். இவர் ஒகா லைலா கோசம், கோபாலா கோபாலா, பந்தி பூல ஜனகி உள்ளிட்ட படங்களில் நடித்தவர். ஹிந்தியில் சில படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வலுச்சேர்க்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com