\
பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவின் தந்தை காலமானார்

பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவின் தந்தை காலமானார்

பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவின் தந்தை காலமானார்
Published on

பிக்பாஸ் கடந்த சீசன் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் திடீரென்றுய் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த பிக்பாஸ் சீசனில் லாஸ்லியா கவினை காதலிக்கிறார் என்று தெரிந்து பிக்பாஸ் இல்லத்திலேயே வந்து லாஸ்லியாவுக்கு அறிவுரைக் கூறியதால் இவர் ஃபேமஸ் ஆனார். இப்போது ripmariyanesan, losliya ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. மூன்றாவது சீசன் பிக்பாஸ் மூலமாக புகழ்பெற்ற லாஸ்லியா தற்போது பிரெண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் நடிகர் ஆரிக்கு ஜோடியாக ஒரு படத்திலும் அறிமுக நடிகருக்கு ஜோடியாக மற்றொரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில் நடிகை லாஸ்யாவின் தந்தை மரியநேசன் அவர்கள் திடீரென மரணம் அடைந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ரசிகர்கள் பலரும் நடிகை லாஸ்லியாவுக்கு ஆறுதல் தெரிவித்தும் அவரது தந்தை மறைவுககு இரங்கல் தெரிவித்தும் வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com