திருச்சூரில் திருமணம்: பாவனா முடிவு

திருச்சூரில் திருமணம்: பாவனா முடிவு
திருச்சூரில் திருமணம்: பாவனா முடிவு

நடிகை பாவனா, தயாரிப்பாளர் நவீன் திருமணம் திருச்சூரில் வரும் அக்டோபர் மாதம் நடக்க இருக்கிறது.

தமிழில், சித்திரம் பேசுதடி, ஜெயம் கொண்டான், தீபாவளி, அசல் உட்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் மலையாள நடிகை பாவனா. தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துவருகிறார். இவரும் கன்னட படத் தயாரிப்பாளர் நவீனும் காதலித்து வந்தனர். இவர்கள் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் நடிகை பாவனா பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். இது தொடர்பான வழக்கு கேரளாவில் நடந்துவருகிறது. இதற்கிடையே இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் பாவனா வீட்டில் எளிமையாக நடந்தது. திருமண தேதி விரைவில் முடிவு செய்யப்படும் என்று கூறியிருந்தனர். இப்போது தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் 27-ம் தேதி திருச்சூரில் இவர்கள் திருமணம் நடக்கிறது.

‘எளிமையாகத்தான் திருமணம் நடக்க இருக்கிறது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களை மட்டுமே திருமணத்துக்கு அழைக்க இருக்கிறோம்’ என்று பாவனாவின் அம்மா கூறினார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com