\
பாவனா பாலியல் துன்புறுத்தல் வழக்கு: நடிகர் திலீப்பிடம் 13 மணி நேரம் விசாரணை

பாவனா பாலியல் துன்புறுத்தல் வழக்கு: நடிகர் திலீப்பிடம் 13 மணி நேரம் விசாரணை

பாவனா பாலியல் துன்புறுத்தல் வழக்கு: நடிகர் திலீப்பிடம் 13 மணி நேரம் விசாரணை
Published on: 

நடிகை பாவனா கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில், நடிகர் திலீப்பிடம் 13 மணி நேரம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

பாவனாவை காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக பல்சர் சுனில் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவர் கேரள காவல்துறை தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் நடிகர் திலீப் பணம் கொடுத்ததாலேயே பாவனாவை கடத்தியதாக குறிப்பிட்டுள்ளார். அதனடிப்படையில் ஏடிஜிபி சந்தியா தலைமையிலான ஆலுவா காவல்துறையினர் திலீப்பிடம் 13 மணி நேரம் விசாரணை நடத்தினர். திலீப்பின் நண்பரான நாதுர்ஷா, மேலாளர் அப்புண்ணி ஆகியோரிடமும் தனித்தனியாக விசாரணை நடைபெற்றது. இதற்கிடையில், பாவனா வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தனக்கு தொடர்பில்லை என்றும், வேண்டுமென்றே தான் பழிவாங்கப்படுவதாகவும் நடிகர் திலீப் புகார் அளித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com