சினிமா
நடிகர் திலீப்புக்கு 2 நாட்கள் 'கஸ்டடி' - நீதிமன்றம் உத்தரவு
நடிகர் திலீப்புக்கு 2 நாட்கள் 'கஸ்டடி' - நீதிமன்றம் உத்தரவு
நடிகை பாவனா விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் திலீப்பிற்கு ஜாமீன் வழங்க மறுத்த நீதிமன்றம், 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.
கொச்சியில் நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட வழக்கில், நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, ஜாமீன் கேட்டு நடிகர் திலீப் கொச்சியில் உள்ள நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், திலீப்பிற்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது. மேலும், திலீப்பை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கேரள காவல்துறைக்கு அனுமதி அளித்துள்ளது. காவலில் தீலிப்பிடம் பாவனாவுடன் ஏற்பட்ட பிரச்சனை முதல் அதனால் அவருக்கு ஏற்பட்ட பாதிப்புகள் வரை பல உண்மைகளை தீலிப் வெளியிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.