\
பாஸ்கர் தி ராஸ்கல் தமிழில் ரெடி

பாஸ்கர் தி ராஸ்கல் தமிழில் ரெடி

பாஸ்கர் தி ராஸ்கல் தமிழில் ரெடி
Published on

தமிழில் பாஸ்கர் தி ராஸ்கல் வேலைகள் முடிந்துவிட்டதாக படக் குழு அறிவித்துள்ளது.

மலையாளத்தில் 2015ல் வெளியான படம் பாஸ்கர் தி ராஸ்கல். அதில் மம்முட்டி, நயன்தாரா நடித்திருந்தனர். இது மாபெரும் வெற்றி பெற்றது. மலையாளத்தை தாண்டி வேறு மாநில மொழிகளிலும் அதன் வெற்றி பேசுப்பட்டது. இதன் இயக்குநர் சித்திக் தனது படைப்புக்கு கிடைத்த அங்கீகாரத்தை கணக்கில் கொண்டு தமிழில் ரீ மேக் செய்ய முடிவு செய்தார். அதற்காக வேலைகள் உடனே தொடங்கப்பட்டன. 

இதில் அரவிந்த சாமி நடிப்பது முடிவானது. ஜோடியாக அமலாபால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். உடன் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, பேபி நைனிகா அடுத்தடுத்து தேர்வு செய்யப்பட்டனர். ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் பாலிவுட் ஆக்டர் ஆஃப்தாப் ஷிவ்தசானி நடிக்க அழைத்து வரபட்டார். இந்நிலையில் இந்தப் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட வேகத்தில் முழுவதுமாக முடிவடைந்து விட்டன. விரைவில் டீசரை வெளியிட உள்ளோம் என்று பட இயக்குநர் அறிவித்துள்ளார்.


 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com