\
டிசம்பரில் வெளியாகிறது பாஸ்கர் ஒரு ராஸ்கல்

டிசம்பரில் வெளியாகிறது பாஸ்கர் ஒரு ராஸ்கல்

டிசம்பரில் வெளியாகிறது பாஸ்கர் ஒரு ராஸ்கல்
Published on

பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படம் டிசம்பரில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மலையாள படமான பாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் தமிழ் ரீமேக்தான் பாஸ்கர் ஒரு ராஸ்கல். இதனை இயக்குனர் சித்திக் இயக்கியுள்ளார் மலையாள படத்தை அப்படியே தழுவி எடுக்காமல் தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு திரைக்கதையில் சில மாற்றங்களை படக்குழு செய்திருக்கிறது. படத்துக்கு ரமேஷ் கண்ணா வசனம் எழுதியுள்ளார். அர்விந்த் சாமி, அமலா பால் கதாபாத்திரத்திரங்களில் கொஞ்சம் மாற்றம் செய்திருக்கிறார்கள். ஆக்சன் மற்றும் காதலை மையமாக கொண்டு இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. 

படத்தின் டீசர் ஏற்கெனவே வெளியாகியது. இசை வெளியீடு இந்த மாதம் நடைபெற உள்ளது. இதன் ரீ- ரெக்கார்டிங்க் வேலைகள் தற்சமயம் நடைபெற்று வருகின்றன. இதனிடையே இப்படம் டிசம்பர் மாதம் திரையில் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com