மராட்டிய இனத்திற்கு துரோகம் செய்கிறார் ரஜினி - பாரதிராஜா
நடிகர் ரஜினிகாந்த் தன்னை தமிழன் எனக் கூறி மராட்டிய இனத்திற்கு துரோகம் செய்துள்ளதாக இயக்குநர் பாரதிராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சை மாவட்டம் கல்லணையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் நடைபெற்ற உறுதி ஏற்பு ஒன்றுகூடல் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், கவுதமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் தமிழக விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மத்திய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். அப்போது மேடையில் பேசிய பாரதிராஜா, ரஜினிகாந்த் தமிழன் எனக் கூறுவது அவரது இனத்திற்கு செய்யும் துரோகம் என்று விமர்சித்தார். தன்னை மராட்டியன் என்று சொல்லி இருந்தால் ரஜினி வீரன், ஆனால் அதைவிடுத்து தன்னை பச்சை தமிழன் என்று போலி வேஷமிடுவதாக குற்றம் சாட்டினர்.