நடிகர் பரத்தின் 50-வது திரைப்படம் - இரண்டாவது முறையாக இணைந்த பிரபல நடிகை

நடிகர் பரத்தின் 50-வது திரைப்படம் - இரண்டாவது முறையாக இணைந்த பிரபல நடிகை

நடிகர் பரத்தின் 50-வது திரைப்படம் - இரண்டாவது முறையாக இணைந்த பிரபல நடிகை
Published on

நடிகர் பரத்தின் 50-வது படத்திற்கான பூஜை நிகழ்ச்சி எளிமையாக நடைபெற்றது.

‘பாய்ஸ்’ படத்தில் 5 கதாநாயகர்களில் ஒருவராக நடித்த பரத், அதன்பிறகு செல்லமே, காதல், வெயில் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனிமுத்திரை பதித்து வந்தார். நடிகர் பரத் தனது யதார்த்தமான நடிப்பின் மூலம் கவர்ந்து வந்தநிலையில், இவரின் 50-வது திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பரத்தின் 50-வது படத்தின் பூஜை நேற்று போடப்பட்டுள்ளது. இதற்கு தயாரிப்பாளர் எஸ்.தாணு தலைமை தாங்கினார். த்ரில்லர் கலந்த குடும்ப கதை அம்சம் கொண்டு உருவாகும் இந்தப் புதிய படத்தில், பரத்தின் மனைவியாக நடிகை வாணி போஜன் நடிக்க உள்ளார். மேலும், விவேக் பிரசன்னா, டேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஆர்.பி.பிலிம்ஸ் இந்தப்படத்தை தயாரிக்கிறது.

‘லூசிபர்’, ‘புலி முருகன்’, ‘குரூப்’, ‘சல்யூட்’ உள்ளிட்ட பல படங்களுக்கு வசனகர்த்தாவாக பணியிற்றியா ஆர்.பி.பாலா இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இந்தப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் 21-ம் தேதி துவங்க உள்ளது. ஏற்கனவே அறிமுக இயக்குநர் சக்திவேல் இயக்கத்தில், பெயரிப்படாத ஒரு படத்தில் பரத்தும், வாணி போஜனும இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com